|
காவியும்
கயலும் மருதப்பொருள்கள். அவை தத்தமிடத்தே இருப்பன;
முல்லைச் சுரும்பு காயாவின் வண்டானமும்தத்தம் இடத்தை விட்டு அயல்
வயலிற் பாய்வன என்பார் பாய இருப்பன என்றார்.
இதனால் மருதம்
பெரும்பான்மையும் முல்லை சிறுபான்மையும் உடையது இந்நாட்டின்
தன்மையாம் என்று காட்டியதன்றி, "பழனத் தயல் முல்லை உடுத்த
மருங்கோர் பால்" என முன்பாட்டிற் கூறிய முல்லையும் மருதமும் கூடிய
திணைமயக்கத்தினை விளக்கியநயமும் காண்க.
மேன்மழநாடு
முற்றும் நீர் நாடாகிய சோழநாட்டின் ஒரு சிறு பகுதியாம்
என்ற அமைப்பினை விளக்கிய படியும் காண்க.
அஞ்சிறை
- என்பதும் பாடம். 6
932.
|
பொங்கரில்
வண்டு புறம்பலை சோலைகண்
மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணி னருங்கல மாக, வதற்கேயோர்
மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர். |
7 |
(இ-ள்.)
பொங்கரில் .........சோலைகள் - மரக்கொம்பின் புறத்து
வண்டுகள் அலைதற்கிடமாகிய சோலைகளில்; மேலோடும்........விளங்கிய -
மேலே வான வீதியில் ஓடுகின்ற ஞாயிற்றின் வெப்பம் பொருந்திய கதிர்கள்
தங்கும்படி விளங்கிய; மேன் மழ.......ஆக - நன்மையுடைய மேன்
மழ நாடு
என்கின்ற அந்நாடு இம்மண்ணுலகத்திற்கு அரிய அணியே ஆக;
அதற்கே.......வாழ்மூதூர் - வாழ்வு தருகின்ற திருமங்கலம்
என்கின்ற பெரிய
பழைய ஊரானது அந்நாட்டினுக்கு ஒப்பற்ற மங்கலமாகியதாம்.
(வி-ரை.)
பொங்கர் - மரக்கிளைகள். பொங்கரில்
புறம்பு வண்டு
அலை என்க. வண்டுகள் மரக்கிளைகளின் புறத்தே அலைதலாவது
கிளைகளிற் பூத்த பூக்களிற்றேன் உண்ணும் பொருட்டு மேற்புறத்திற் சுற்றிக்
கொண்டிருத்தல்.
அலை
சோலைகள் மேல் - அலைதற்கிடமாகிய சோலைகளின்
மேலே. மேல் - ஏழனுருபு எனக் கொண்டு சோலைகளினிடத்து
என்றலுமாம்.
கதிர்
தங்கச் சோலைகள் விளங்கிய நாடு என்க. சோலைகளின்
வெங்கதிர் தங்குதலாவது மரங்களின் செறிவினால் சோலைகள் பகலிலும்
இருண்டிருத்தல். ஞாயிற்றின் கதிர்கள் உள்ளே நுழைந்து தரையிற்றாக்க
முடியாதபடி சோலைகளின் மேற்புறத்தே தங்கிவிட்டன என்பது குறிப்பு.
"இருள்படப் பொதுளிய", "மந்தியுமறியா" என்ற திருமுருகாற்றுப் படையும்
"வெயினுழை பறியா" முதலிய வழக்குக்களும் காண்க. வெங்கதிர்
என்றதனால் ஞாயிற்றின் கதிர்கள் குறிக்கப்பட்டன.
மேன்மழ
நன்னாடாம் அங்கு அது - மேன்மழ நாடு - 926
பார்க்க - நன்(மை) இடைப்பிறவரல். "சேதிநன்னாடு"
- 467 என்ற
விடத்துரைத்தவை காண்க.
அங்கு
அது - அது - முன்னறிசுட்டு.
மண்ணின்
அருங்கலமாக அதற்கே ஓர்மங்கலம் ஆனது -
"மங்கல மென்ப மனைமாட்சி மற்றத, னன்கல நன்மக்கட் பேறு" என்ற
குறளிற் காட்டியது போல இங்கு நாட்டினையும் நகரத்தினையும்
அருங்கலமும் மங்கலமுமாக எடுத்துக் காட்டினார். கலனில்லாத போதிலும்
மங்கலம் சிறக்கும். கலன்கள் (அணிகள்) அரியன வாயினும் மங்கலமில்லாத
போது சிறப்புப்பெறா. ஆயின் மக்கட் பேறில்லாத போதினும் மனைமாட்சி
சிறக்கும்; ஆதலின் மனைமாட்சியினை மங்கலமாகவும் மக்கட்பேற்றை அதன்
நன்கலனாகவும் திருக்குறள் எடுத்துக் காட்டிற்று.
ஆனால்,
மேன்மழ நாடு மேற்கூறியபடி வளம் பெரிதுடைமையால்
மண்ணுக் கருங்கலமேயாயினும் அணிகலனாய்நிற்பதன்றி
மங்கலமாகிய
சிறப்புடையதாகாது என்று குறிக்க அதனை அருங்கலம் என்றும்,
அவ்வருங்
கலனுக்கு மங்கலந்தருவது
|