|
அதன் நகரமாகிய மங்கலமேயா
மென்றும் ஆசிரியர் எடுத்துக்காட்டிய
அழகும் உள்ளுறையும் காண்க. "உலகுக் கெல்லா மங்க லந்தரு மழவிளம்
போதகம்" என்று ஆளுடைய பிள்ளையாரைக் கூறியதும் காண்க.
அருங்கல
மாதல் - நாடுகள் பலவற்றுள்ளும் மேற் கூறியவாறு
வளமும் சிறப்பு முடைமையினால் உலகுக்கணியாய் விளங்குதல்.
மங்கலமாதல்
உலகச் சார்பாகிய வளங்கள் எல்லாமிருப்பினும்
சிவச்சார்பாகிய செல்வமில்லாத போது அவை மங்கலம் பெறாவாதலின்,
அந்த மங்கலமாகிய சிவச்சார்புடையதாகச்
செய்தல். "மற்றவை பெற்ற
நீடுபயன்" (441), "வந்த செல்வத்தின் வளத்தினால் வருபயன்" (504)
"மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்" (திருஞான - புரா - 1087) முதலியவை
பார்க்க. மங்கலநகர் இந்நாட்டுக்கும் உலகுக்கும் மங்கலந்தரும் சிவச்சார்பு
பெறுவித்தல், பின்னர் "வையந்தன்னையுநிறைத்து வானுந்தன் வயமாக்கி"
(962) என்றது முதலிய சரித நிகழ்ச்சிகளாலறிக. சிவம் - மங்கலம் என்ற
பொருளுந் தருவ தென்ப.
மங்கல
மாகிய வாழ்மூதூர் - வாழ் - வாழ்வுதரும். வாழ்விக்கும்
எனப் பிறவினைப் பொருளில் வந்தது. சிலவாழ்வுடைய என்றலுமாம்.
மூதூர்
- பழமையாகிய ஊர். இது இப்போதும் இப்பெயரால் வழங்கப்பெறுகின்றது.
இதனைப் "புனன் மங்கை" என்று முதனூல் (திருத்தொண்டத் தொகை) பேசிய
அழகும் அருமைப்பாடும் காண்க. தலவிசேடம் பார்க்க. 7
933.
|
ஒப்பில்
பெருங்குடி நீடிய தன்மையி லோவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி யறம்புரி சால்போடுஞ்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய வாயர் குலத்தவ ரானாயர். |
8 |
(இ-ள்.)
வெளிப்படை.
(அம்மூதூர்) ஒப்பற்ற பெருங்குடிகள்
நெடுங்காலமாக நீடி வருகின்ற தன்மையால் ஒருகாலத்தும் நீங்காதே,
தவறுதலில்லாத வளங்கள் யாவும் பெருகச்செய்து அறங்களைச் செய்கின்ற
சால்புடனே எடுத்துக் காட்டாகச் சொல்லும்படி உயர்வடைய சிறப்பினால்
மிகுந்ததாகும். அவ்வாறு சீர்பொருந்திய அந்தப் பதியில் நிலைத்த
ஆயர்குலத்தினைச் சார்ந்தவர் ஆனாயர்
என்ற பெரியார்.
(வி-ரை.)
ஓவாமே - ஓவுதல் - ஒழிதல். "ஓவற விமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி" (திருமுருகாற்றுப்படை). தப்பில்
வளங்கள் -
ஒருவகையாலுங்குறை வில்லாத வளங்கள். ஓவாமே என்றது இடையறாது
பெருகுதல் குறித்தது. தப்பில் என்றதனால்
பிழைபடாநெறியில்
ஈட்டப்பட்டமையும், பெருக்கி என்றதனால்
மேன்மேலும் பெருக ஈட்டுதலும்
குறிக்கப்பட்டன.
அறம்புரி
சால்பு - அறவழியிற் றேடிய செல்வத்தைப்
பெருக்கியதனால் உளதாகும் சால்பு நிறைந்திருத்தல். "நின்பொருள்க
ளெல்லாம், அறத்தாற்றி னீட்டப் பட்ட வினையவை புனித மான திறத்தாலே"
(திருவாதவூ - உபதே - படலம் - ) என்ற திருவிளையாடற் புராணக்
கருத்துக் காண்க. பொருள்களை ஈட்டுதலும், ஈட்டப்பட்டவற்றைச்
செலவிடலும் அறத்தாற்றின் நிகழ்ந்தன என்பதாம். சால்பு - 885 பார்க்க.
செப்ப - உயர்வாகச் சுட்டிக்காட்ட - எடுத்துச்சொல்ல.
ஆயர்
குலத்தவர் ஆனாயர் - ஆன்மேய்க்கும்
ஆயர்குலத்தவராதலின் ஆனாயர் எனப் பெற்றார் என்ற குறிப்புப்பட
இவ்வாறு கூறினார். ஆனாயர் - காரணப்பெயர்.
இவரது இயற்பெயர்
விளங்கவில்லை,
ஆயர்குலம்
- பழந்தமிழ்க்குடிகளுட் சேர்ந்த இடையர் குலம். இது
வேறு; யாதவர் குலம் வேறு. தொல்காப்பியம் சிலப்பதிகாரம் முதலிய மிகப்
பழந்தமிழ் நூல்களிலும் ஆயர்குலமும் தொழிலும் பிறவும் பேசப்படும்.
இவர்கள் முல்லை நில
|