|
உறு
நோய்கள் - கானலில் பசுக்களைத் தாக்கும் நோய்கள். இவை
கொடுங்காற்று தீநீர் முதலிய காரணங்களால் வருபவை. விலங்கும்
நோய்களும் கடிந்து என்க. எண்ணும்மைகள் தொக்கன. இவ்வாறன்றி
விலங்குகளால் வரும் நோய்கள் என்றுரைப்பாருமுண்டு.
தூநறு
மென்புனல் அருந்தி - தூ - தூய்மையும், நறு - புதுமையும்
சுவையுடைமையும், மென் - உண்ணுதற் கெளிமையும்
குறித்த அடை
மொழிகள். இந்த அடைமொழிகளால் பசுக்களை உண்பிக்கத்தக்க
புல்லுணவில் நல்லுணவின் இயல்பை எடுத்துக் காட்டியது காண்க.
தூநீர்
என்பதும் அவை உண்ணத்தக்க நல்ல நீரின் இயல்பு காட்டிற்று.
பசுக்கள்
உண்ணத்தகாத பலகெட்ட உணவும், கெடுதி செய்யும்
பலகெட்ட நீர் நிலைகளும் கானலில் உள்ளனவாதலின், அது தெரிந்து
விலக்கி, நல்ல புல்லுணவும் நன்னீரும் உள்ள இடங்களில் பசுக்கூட்டத்தை
மேய்த்துக் காத்தனர் என்க. இதுவே பசுக்களைக் காக்கும் முறை என்பது
சண்டீசநாயனார் மருதப்புறவில் ஆனிரை காத்த வரலாற்றானும் அறியப்படும்.
அவர்தம் புராணம் 26-ம் பாட்டுப் பார்க்க.
ஊனமில்
ஆயம் உலப்பில பல்க - ஊனமில் - கெடுதியில்லாதபடி.
கேடு இல்லா வகை - விலங்கும் நோயும் கடிந்தமையால் ஊனமில்லையாயின.
உலப்பில - அளவில்லாதனவாக.
பல்குதல்
- பெருகுதல். புல்லும் நீரும் நன்கு பெறுதலால்
உலப்பிலவாகப் பெருகின.
ஊனம்
இல் ஆயம் - மக்களுடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத
நல்ல உணவாகிய பால் தயிர் நெய் என்பவற்றையும், மக்களின் உயிர் உய்தி
பெறுதற்கு இன்றியமையாத இறைவன் வழிபாட்டுக்குரிய சாதனமாகிய
பஞ்சகவ்வியம் எனப்படும் ஆனைந்தினையும் திருநீற்றின் மூலத்தையும் தந்து,
உடலுக்கும் உயிருக்கும் ஒருங்கே ஊனத்தை இல்லையாகச் செய்யும்
ஆயங்கள் என்ற பொருளும் பட நின்றது. இவ்வாறு உலப்பிலவாகிய பல்கிய
ஆனிரைகள் வெவ்வேறினங்களாகக் காக்கப்படும் திறம் வரும்பாட்டிற்
கூறுவர்.
தூநிறை
- என்பதும் பாடம். 10
936.
|
கன்றொடு
பான்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சினை யானொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடு மினந்தொறும்
வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள். |
11 |
(இ-ள்.) வெளிப்படை. கன்றுகளோடு, பால் கறவை மாறிய இளம்பசு,
பால் கறக்கும் பசு, சிறிய மயிருள்ள தலையினையும் மென்மையையும் உடைய
சினைப்பசு, ஈன்றணிய பசு என்றிவையும், வெற்றியுடைய விடைகளின்
கூட்டத்தோடு இவ்வாறு இனங்கள் தனித்தனியாக நெருங்கி நிறைந்துள்ள
இடங்களுடன் கூடிய பல தொழுவங்கள் உள்ளன.
(வி-ரை.)
மேற்பாட்டில் "ஆயம் - பல்க - அளித்துள்ளார்" என்றதனை,
அளித்தது இவ்வாறென இப்பாட்டால் விரித்துக் கூறுகின்றார்.
கன்றொடு
- ஒடு உருபு தந்தோதியது, கன்றுகளைப் பாதுகாக்கும்
போது பசுக்கள் - எருதுகளின் வேறாகப்பிரித்துக் காக்கப்பட்டன என்பது
குறிக்க. இவ்வாறே "விடைக்குல மோடும்"
என்று எருதுக்கூட்டம் வேறு
பிரித்து அளிக்கப்பட்டதனையும் ஓடும் என்றதனாற்
பிரித்துக் காட்டியதும்
காண்க. முதலிற் காக்கப்படவேண்டிய தகுதி நோக்கிக் கன்றுகளை முதலில்
வைத்துக் கூறினார்.
|