|
நிகழும் இந்நாளில்,
உலகம் செழித்து உய்வதெங்ஙனமோ? என்பது
அறிஞர்களின் வினா. ஆனிரைகள் செழிக்காது நடையுடற் கூடுகளாய்த்
திரியக்காணும் இந்நாளில் மக்களின் சுகமும் அதற்குத்தக
மெலிந்துகாண்பதாம் என்பது அறிஞர் கண்ட உண்மை. இவற்றையெல்லாம்
சிந்தித்து உலகம் திருந்த ஒழுகி உய்வதாக.
937.
|
ஆவி
னிரைக்குல மப்படி பல்க வளித்தென்றுங்
கோவல ரேவல் புரிந்திட வாயர் குலம்பேணுங்
காவலர் தம்பெரு மானடி யன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை
மேற்கொண்டார்.
|
12 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆனிரையின் தொகுதிகள் அவ்வாறு
பெருகும்படி காப்பாற்றிக், கோபாலர்களாகிய இடையர்கள் என்றும் தமது
சொல்வழியே ஒழுகித் தமது ஏவல்களைச் செய்து நிற்க, ஆயர்குலத்தைக்
காப்பாற்றும் பெரியாராகிய ஆனாயர், சிவபெருமானது திருவடிகளில் அன்பு
பொருந்திய இசையுடனே துளைக்கருவிக் குழல் வாசித்தலை மேற்கொண்டார்.
(வி-ரை.)
அப்படி அளித்தலாவது மேலிரண்டு பாட்டுக்களினும்
சொல்லியபடி பாதுகாத்தல். பல்குதல் - பெருகுதல்.
என்றும் என்றதனை
அளித்து என்றதனோடும், புரிந்திட
என்றதனோடும் தனித்தனி கூட்டிப்
பொருள் கொள்ளுமாறு இடையில் வைத்த அமைதி காண்க.
கோவலர்
- கோபாலர் - இடையர். "இடைமகன்" (சண்டீசர் புரா -
24). ஏவல் புரிந்திட - ஏனையிடையர் தமது
ஏவல் கேட்டு ஆனிரைக்
குலங்களைக் காத்து வந்தார்களாக, இவர், அவர்களைத் தம் ஏவல்வழி
நிறுத்தித் தலைவராய் விளங்கினார் என்க. இதனை 943 - 945ல்
விரித்திருத்தலும் காண்க.
அடி
அன்புறு........வாசனை - கானம் திருவடி யன்புடன் கூடாத
போது பெறும் புலனின்பமா யொழியும். ஆதலின் அடியன்புறு
கானத்தின்
மேவும் என்று விசேடித்தார். இந்தக் கானமே இறைவன்றன் றிருச்செவியி
னருகணையப் பெருகும் தன்மையுடையதென்பது 962ல் அறியப்படும். அது
குறிக்க இங்கு இவ்வாறு தொடங்கிக்கொண்டார். கானம் - இசைக்கலை.
துளைக்கருவி - துளைகளின் வழியே இசை ஓசையினை வெளிப்படுக்கும்
ஊது கருவி.
துளைக்கருவிக் குழல் - துளைக் கருவியாகிய
குழல். துளைகளின்
எண் - வரிசை - தொழில் செய்யும்முறை முதலியவற்றை 938, 948, 949, 951,
954 என்ற திருப்பாட்டுக்களில் விரிக்கப்பட்டமை காண்க. இசையினையுடைய
துளைமேவிய கருவிக்குழல் என்றலுமாம்.
குழல்
வாசனை - குழல் வாசித்தலினை. மேற்கொள்ளுதல்
-
மேற்கொண்டு பல நாளும் பயிலுதல். வாசனை -
வாசித்தல் என்ற
பொருளில் வழங்கும் இசைக்கலை மரபு வழக்கு. 961, 965 பார்க்க. குழல்
-
குழல் வாசித்தலை, வாசனை - பூர்வவாசனையினால்
என்றுரைத்தலுமாம். 12
வேறு
938.
|
முந்தைமறை
நூன்மரபின் மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுத னாலிரண்டி னரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை
யந்தமில்சீ ரிடையீட்டி னங்குலியெண் களிலமைத்து, |
13 |
|
|
|
939.
|
எடுத்தகுழற்
கருவியினி லெம்பிரா னெழுத்தைந்துந்
தொடுத்தமுறை யேழிசையின் சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாந் தங்கவருந் தங்கருணை
யடுத்தவிசை யமுதளித்துச் செல்கின்றா, ரங்கொருநாள், |
14 |
|