பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1207

 
940.



வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி, மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிசையிற் செறிகண்ணித் தொடைசெருகிப்,
பாசிலைமென் கொடியின்வடம் பயிலநறு விலிபுனைந்து,
காசுடைநா ணதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி,



15
941.




வெண்கோட லிலைச்சுருளிற் பைந்தோட்டு
                              விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த வடிகாதி னொளிதயங்கத்,
திண்கோல நெற்றியின்மேற் றிருநீற்றி னொளிகண்டோர்
கண்கோட னிறைந்தாராக் கவின்விளங்க மிசையணிந்து,




16
942.



நிறைந்தநீ றணிமார்பி னிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத், திரடோளின் புடையலங்க
லறைந்தசுரும் பிசையரும்ப, வரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப் பூம்பட்டுப் பொலிந்தசைய,



17
943.



சேவடியிற் றொடுதோலுஞ் செங்கையினில் வெண்கோலு
மேவுமிசை வேய்ங்குழலு மிகவிளங்க, வினைசெய்யுங்
காவல்புரி வல்லாயர் கன்றுடையா னிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போந்தார்.



18

      938. (இ-ள்.) முந்தை.......வேய் - பழைமையாகிய இசை (க்கலை)
வேத நூல்களில் மொழிந்த மரபின் முறைப்படி எழுந்து வளர்ந்த மூங்கிலில்;
அந்தம் - நுனியில்; நால் (இல்) - நான்கு பங்கிலும்; முதல் (இல்) - அடியில்;
இரண்டில் - இரண்டு பங்கிலும்; அரிந்து - அரிந்து, இடைப்பட்ட பாகத்தை
எடுத்து; நரம்பு....ஆக்கி - சுரங்கள் எழும் தானங்களின் வந்த துளைகளின்
வரிசையைச் செய்து; முதல் வாயு வழங்குதுளை - முதலில் காற்று
உண்டாக்கும் துளையையும்; அந்தமில்........அமைத்து - கேடில்லாத
சிறப்பினையுடைய இடைவெளி ஒவ்வோர் அங்குல அளவில் துளைகள்
செய்து, 13

     939. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு எடுக்கப்பட்ட வேய்ங்குழலாகிய
துளையிசைக் கருவியில் எமது பெருமானுடைய திருவைந்தெழுத்தினையும்
தொடுத்தமுறையில் வரும் ஏழிசைகளினுடைய சுருதி பெறும்படி வாசித்து,
அதனால் வேறு வழியிற் செல்லாமல் இசையினாற்றடுக்கப்பட்ட சராசரங்கள்
எல்லாமும் பொருந்த வரும் தமது கருணையுடன் கூடிய இசையமுதத்தினை
அளித்து செல்கின்றாராகியவர் (கோவலனார் - 943) அங்கோர் நாளில், 14

     940. (இ-ள்.) வாசமலர்ப்பிணை பொங்க - மணமுடைய மலர் மாலை
விளங்கிக்காட்ட; மயிர்நுழுதி....சிகழிகையில் - மயிரைக்கோதிப் பக்கத்தில்
மேலுயரும்படி விளக்கமாக எடுத்து முடித்த சிகழிகையில்; செறி......செருகி -
நெருங்கக் கட்டிய கண்ணிமாலையைச் செருகி; பாசிலை......புனைந்து - பசிய
இலையுடைய மெல்லிய கொடிகளாலாகிய வடத்தில் நறுவிலியைப் புனைந்து;
காசறு...கட்டி - பொன் காசுகள் கட்டிய கயிற்றினால் கரிய மயிர் முடியின்
புறத்தினைக்கட்டி, 15

     941. (இ-ள்.) வெண்கோடல்.........தயங்க - வெண்காந்தளின்
இலைச்சுருளிலே பச்சையிதழும் மணமும் உடைய செங்காந்தளின் குளிர்ந்த
அழகிய மலரை