|
அணிந்த வடிந்த காதின்
ஒளி விளங்கி; திண்கோல.......அணிந்து - திண்ணிய
அழகிய நெற்றியின்மேல் பூசிய திருநீற்றின் ஒளியானது கண்டாரது
கண்களைக்கொள்ளுதல் நிறைந்து அமைவுபடாத அழகு விளங்கும்படி
உடலின்மேல் அணிந்து, 46
942.
(இ-ள்.) நிறைந்த........தாழ - நிறைவாகத் திருநீற்றினை அணிந்த
மார்பினிடத்து வரிசையாக முல்லையரும்பினைச் சுருக்கி நெருங்கப் புனைந்த
மாலை தாழ்ந்து தொங்க; திரள் தோளின்......அரும்ப - பருத்த தோள்களின்
மேல் அணிந்த மாலையின் பூக்கள் - அவற்றின் மொய்த்து வண்டுகள்
பாடிய இசையினால் மலர; அரை உடுத்த........அசைய - திருவரையில் உடுத்த
மரவுரியாடையின் புறத்தில் தழைகளாலியன்ற அழகியபட்டுப்போன்ற
மேலாடை அழகாக அசைய, 47
943.
(இ-ள்.) வெளிப்படை. சிவந்த திருவடியிலே தொடுதோலும்,
செங்கையிலே வெள்ளியகோலும் பொருந்திய இசையினைத் தரும்
வேய்ங்குழலும் மிக்க விளக்கத்தைச் செய்யத், தமது ஏவலின்படி தொழில்
செய்யும் காவல்புரிகின்ற வலிய ஆயர்களும், கன்றுகளோடு கூடிய
ஆனிரைகளும் தம்மைச் சூழ்ந்துவரப், பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த
கோவலராகிய ஆனாயர் ஆனிரை காப்பதற்குப் புறம்போந்தனர். 18
இந்த
ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
938.
(வி-ரை.) முந்தைமறை
- உபவேதங்கள் நான்கில் ஒன்றாகியது
காந்தருவவேதம் என்னும் இசைக்கலையாதலின் முந்தைமறை
என்றார்.
உபவேதங்கள் நான்காவன ஆயுள்வேதம், தநுர்வேதம், காந்தருவவேதம்,
அர்த்தவேதம் என்பன.
மறை
பொழிந்த மரபின் முறை எழுந்த வேய் - அதில் விதித்த
இலக்கணமமையும்படி எழுந்து வளர்ந்த மூங்கில். "உயர்ந்த ஒத்த நிலத்திற்
பெருக வளர்ந்து, நாலு காற்றுமயங்கின் நாதமில்லையாகலான், மயங்கா
நிலத்தின்கண், இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப்புக்க பெரிய
மரத்தை வெட்டி, ஒருபுருடா காரமாகச் செய்து, அதனை நிழலிலே ஆற
இட்டுவைத்து, திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் செய்கை யறிந்து, ஒரு
யாண்டு சென்றபின் இலக்கணவகையான் வங்கியம் செய்யப்படும்" என்பது
அடியார்க்கு நல்லாருரை. (சிலப் - 3 - அரங்கே - 26). இவ்வுரைக் குறிப்பிற்
கண்டவற்றுள் மூங்கிலுக்குப் பொருந்துவன ஏற்ற பெற்றி கைக்கொள்ளப்படும்
என்க.
மூங்கிலினால்
மட்டும் அன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி,
வெண்கலம் என்றிவற்றானும் வங்கியம் என்னும் குழற்கருவி செய்யப்படும்
என்ப. இவற்றுள் மூங்கில் பொழுது செய்யும் என்றும், உத்தமமென்றும் கூறுப.
இங்கு ஆனாயர் சிறப்புடைய உத்தமமாகிய மூங்கிற் குழற்கருவியினையே
கைக்கொண்டனர் என்பது வேய் என்றதனாலறிவிக்கப்பட்டது. இதனையே
மேல்வரும் பாட்டில் "எடுத்தகுழற் கருவியினில்" என்றும், "இசைவேய்ங்
குழலும்" (943) என்றும், “வேய்ங் கருவிகளில்" (947) என்றும் கூறுகின்றார்.
அந்தம்
முதல் நால் இரண்டில் - அந்தத்தில் நாலில், முதலில்
இரண்டில் என்று முறை நிரனிறையாகக் கூட்டிப் பொருள் உரைக்க. அந்தம்
- நுனி; முதல் - அடி. அந்தம்
- நுனி என்பதும் "அதர்வசிகை", "ஓரும்
வேதாந்தமென்றுச்சியிற் பழுத்த" முதலிய
வழக்குக்களாற் காண்க.
நரம்பு
உறுதானம் - இசை பிறப்பதற்குக் காரணமாய, வீணை, யாழ்
முதலியவற்றில் தந்திரிகளையும், குழற்கருவியில் விரல் உளர்துளைகளையும்
குறிக்கும். ஆகுபெயராய் அதனால் எழுப்பப்படும் சுருதிக்கு - இசைக்கு -
ஆயிற்று. நரம்பு உறுதானம் என்பது சுருதி கிளம்பும் இடம் என்ற பொருளில்
வந்தது. இதனை மெட்டு என்பது கிராமிய வழக்கு.
|