பக்கம் எண் :


1210 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     கருஞ்சுருளின் புறம் என்றதற்குக் கரிய சுருண்ட பச்சிலையின்
விளிம்பு - ஓரம் என்பாரு முண்டு. 15

     941. (வி-ரை.) வெண்கோடல் - வெண்காந்தள். தோன்றி -
செங்காந்தள். இது மணமுடையதாதலின் விரைத் தோன்றி என்றார். இதனது
மிக்க செந்நிறத்தால் இதனைத் தீப்போல்வதென் றுபசரித்துக் கூறுவதும்
வழக்கு. "துயிலாநோயாந்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற" (11 - ம் திருமுறை
- திருவாரூர் மும்மணிக்கோவை - 5) என்ற சேரமான் பெருமாணாயனாரது
அழகிய திருவாக்குக் காண்க.

     தண் கோலமலர் - கவினினாற் கண்கவரும் அழகும் குளிர்ச்சியும்
உடைய செங்காந்தட் பூ என்க.

     வடிகாது - கீழ்த்தொங்கிய காது. வடிதல் - தொங்குதல்.
வெண்காந்தனிலையைச் சுருட்டி, அதற் கிடையில் செங்காந்தட் பூவினை
வைத்து, அதனை வடிந்த காதில் அணிந்தார் என்க. ஆண் மக்களும்
வடிகாதுடையாராகுதல் முன்னாள் வழக்கு.

     காதின் ஒளி - காதுகளின் இயல்பாகிய நிறத்துடன் வெண்காந்த
ளிலையின் நிறமும் செங்காந்தளின் நிறமும்கூட இம்மூன்று நிறங்களின்
சேர்க்கை விளங்கியதனால் காதின் ஒளிதயங்க என்றார். தயங்குதல் -
விளங்குதல். வேய்ங்குழலின் ஊதிய ஐந்தெழுத் தின்னிசையினை
எவ்வுயிர்களையும் கேட்பித்து, இறைவரது திருச்செவியினருகணையப்
பெருக்குதலாலும், அவ்வாறு பெருக்குவதற்குத் தாம் முன்பு கேட்டாலன்றி
இயலாமையானும் அதற்குரிய காதுகளை இப்படிச் சிறப்பித்தார் என்ற
குறிப்பும் காண்க. கேட்டதற்குரிய செவிகளைச் சிறப்பித்தமை பற்றித்
"தம்பாடல் பரமர்பாற் சொலுமுரை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து"
என்றதும் (திருஞா - புரா - 75) காண்க.

     திண்கோல நெற்றி - வன்மையும் அழகும் உடைய நெற்றி.
கண்கோடல் - கண்ணினைக் கொள்ளுதற்றன்மை. கண் - சாதியொருமை.

     கண் கோடல் நிறைந்து ஆராக் கவின் - கண்ணைக் கவர்ந்து
கொள்ளுதற்றன்மை நிறைந்து மேலும் இடங்கொள்ளாதபடி ததும்பும் அழகு.

     விளங்க - விளங்கும்படி. நெற்றியின்மேல் ஒளி விளங்கும்படி
திருநீற்றினைமிசை அணிந்தார் என்க.

     கண்டோர்.......விளங்க - என்றது நாயனார் புனைந்த திருக்கோல
முழுமையும் அழகு விளங்கியனவேயாயினும் அவற்றுக்கெல்லாம் மேலாய்க்,
கண்டோர் கண்கள் சலிக்காமல் கண்கொள்ளாக் காட்சியாக மேல்
விளங்கியது திருநெற்றியின் திருநீற்றுப் பொலிவு என்றபடி. இது உயிர்க்குச்
சார்பாகியுள்ள மேம்பட்ட சிவச்சார்பின் விளக்கமாதலின் ஏனை உடற்
பொலிவுகளின் மிக்கு விளங்கிக், கண்டோரை வசீகரித்தது என்றதாம்.
"திகழ்ந்த நீற்றின் உரு" (394) என்ற விடத்துரைத்தவை பார்க்க. 16

     942. (வி-ரை.) முல்லைமுகை - முல்லை நிலத்துக் கருப்பொருளாகிய
பூ; இது மரபுக்கும் உரியதா மென்பர். மார்பின் விளங்குவதாகலின் இதனை
முல்லை என்று இங்கு விரித்துக் கூறினார். முன்னர்ச் "சிகழிகையிற்
செறிகண்ணித் தொடை "யினையும் (940), பின்வரும் தோளின்புடை
யலங்கலினையும் இன்னவெனக் கூறாமையும் இதன் சிறப்புக் காட்டுதற்காம்.
முல்லை நிரைமுகை என்க. சுருக்கிச் செறிந்த புனைவடம் என்பது
முல்லைப் பூக்களை நெருங்கக்கோத்துப் புனையும் மாலைவகை. மார்பின்
வடம் தாழ என்றுகூட்டுக. நீறணி மார்பின் முல்லைவடம் தாழ - மார்பில்
விளங்கும் திருநீற்றுப் பொலிவினுக்கு முல்லை மாலையின் பொலிவு குறைந்து
காட்ட என்ற குறிப்புமாம். முன்பாட்டில் "திருநீற்றின் ஒளி........ஆராக்கவின்
விளங்க" என்று கூறியதனைத் தொடர்ந்து கூறினார்.