|
தோளின்புடையலங்கல் - மார்பில் தாழும்
முல்லை மாலையின்
பக்கத்தே தோளில் விளங்கும்படி அணிந்த வேறு மாலை.
சுரும்பு
அறைந்த இசை அலங்கல் அரும்ப என்க. அறைந்த
இசை - பாடிய இசையினால்; அரும்ப
- மலர; காரணப்பொருளில் வந்த
மூன்றனுருபுதொக்கது. அலரும் பருவமுடைய மலர்களால் அலங்கல்
தொடுக்கப்பட்டதனால் அம்மலர்களினிடத்துத் தேனுண்ண மொய்க்கும்
வண்டுகளின் இசையினால் அவை அலர்ந்தன என்றபடி. அறைந்த
சுரும்பு
எனக் கூட்டி, மோதி வீழ்ந்த வண்டுகள் என்றுரைத்து, அலங்கலில் வீழ்ந்த
வண்டுகள் இசைபாட என்று உரை கூறுவாருமுண்டு. புறம் - பட்டு
-
பொலிந்து - அசைய என்க.
தானை
அசைய - தானை - ஆடை. மரவுரியினை இடையில்
உடுத்து அதன் மேல் தழையாற் புனைந்த மேலாடை இருபுறமும் தொங்க
அணிந்தனராதலின் அசைய என்றார்.
பூம்பட்டு - பூ - அழகும்
மேன்மையும் குறித்தது. 17
943.
(வி-ரை.) சேவடியில் தொடுதோல் - தொடுதோல்
-
செருப்பு. முல்லைப் புறவில் ஆனிரை மேய்ப்போருக்குச் செருப்பு
இன்றியமையாத சாதனமாம். காட்டில் வேட்டையாடுவோர்க்கும் இவ்வாறே
காண்க. கண்ணப்ப நாயனார் சரிதமும் குறிக்க. இந்த இரண்டு
நாயன்மார்களும் செருப்புத் தொட்ட கோலத்துடனே ஐயர்மருங்கு
அமர்கின்றார்களாவர். அச்சிறப்புக் குறிக்கச் சேவடி என்றார்.
வெண்கோல்
- ஆனிரைகளைச் செலுத்தும் சிறுகோல். "கோலுங்
கயிறுங் கொண்டுகுழைக் குடுமி யலைய" என்றது (சண்டீசர் புரா - 25)
பார்க்க.
இசைமேவும் என்க. இச்சரிதம் இசையினாற் பொருந்துவதாம்
என்ற
குறிப்பும் காண்க. மிக விளங்குதல் - இம்மூன்றும்
தேற்றம் பெற
விளங்கித்தோன்றுதல்.
வினை
செய்யும் - நாயனாரின் ஏவல் வழி தொழில் புரிகின்ற.
"கோவலரேவல் புரித்திட" (937) என்றது காண்க. காவல்புரி - ஆனிரைப்
பகுதிகளைக் காக்கும்.
ஆயரும்
ஆனிரையும் சூழ என்க. எண்ணும்மைகள் தொக்கன.
பூ
அலர் தார் - முல்லை முகைவடம் தாழ, அலங்கல் அரும்ப, என
முன்பாட்டிற் கூறிய பூக்கள் அலரும் மாலைகள்.
நிரைகாக்க
- அங்குநின்ற பசுக் கூட்டங்களின் தொகுதியேயன்றிப்
பசுவர்க்கம் எனப்படும் எல்லா ஆன்மாக்களையும் இச் சரிதத்தாற் பாசநீக்கிக்
காவல் பெறச் செய்ய. திருமூல நாயனார், மூலன் மேய்த்த பசுக்களின்
துயர்நீங்கச் செய்த செயல், எல்லாப் பசு வர்க்கங்களும் உய்வதற்குரிய
திருமந்திரமாய் விளைந்தசெய்தியும் இங்குக்கருதுக. 18
வேறு
944.
|
நீலமா
மஞ்ஞை யேங்க நிரைக்கொடி புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லைக் கோபவாய் முறுவல்
காட்ட
ஆலுமன் னிடைசூழ் மாலைப் பயோதர மசைய வந்தாள்
ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள். |
19 |
(இ-ள்.)
வெளிப்படை. நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள்
அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்
பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளி
அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய
இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலையும் அசையவும் ஞாலமாகிய
பெரிய அரங்கத்திலே ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய
பெண் வந்தனள்.
|