பக்கம் எண் :


1214 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

கொன்றையினைச் சடையாராகிய உடையாராகக் கண்டு அவர்பால் இசையின்
மடைதிறந்தார் என்ற குறிப்பும் காண்க. 20

946.



சென்றணைந்த வானாயர் செய்தவிரைத் தாமமென
மன்றன்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல்
நின்றதொரு கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி
யொன்றியசிந் தையிலன்பை யுடையவர்பான்
                                  மடைதிறந்தார்.



21

     (இ-ள்.) சென்று.............ஆனாயர் - சென்று சேர்ந்த ஆனாயர்; செய்த
விரைத்தாமம் என - கையாற்றொடுத்துச் செய்யப்பட்ட மணமுடைய
மாலைபோல; மன்றல்........தூக்கி - மணம் பொருந்திய மலர்களாகிய
கொத்துக்களைத் தொங்கவிட்டு; மருங்கு....சடையார்போல் - பக்கங்களிலே
தாழ்ந்துவிளங்கும் சடைகளையுடைய சிவபெருமானைப்போல; நின்ற.......உருகி
- நின்ற மணமுடைய கொன்றை மரத்தினை நேராக நோக்கி, நின்று,
மனமுருகி; உடையவர்பால் ஒன்றிய சிந்தையில் அன்பை மடைதிறந்தார்.
தம்மையுடையவராகிய சிவபெருமானிடத்தில் ஒன்றுபட்ட மனத்தினின்றும்
எழுகின்ற அன்பின் மடையைத் திறந்தனர்.

     (வி-ரை.) செய்த விரைத்தாமம் - செய்த - தொடுக்கப்பட்ட.
செய்ததாமம் - விரைத்தாமம் என்று பிரித்துரைத்துக்கொள்க. "கொத்தி
னிற்பொலி கொன்றை கொடுக்கிலே" என்றபடி இங்குக் கொன்றை மலர்கள்
இயல்பாகவே கொத்துக்களாகிய அடுக்காய் நீண்டு தொங்குதல்,
தொடுக்கப்பட்ட மலர்மாலைகள் போன்றது என்றார். உருவுபற்றி வந்த
உவமம்.

     மலர்த்துணர் தூக்கி என்றது பூங்கொத்துக்கள் மாலை அணிந்தது
போல (மேலே தொங்க) நிற்றல் குறித்தது.

     மருங்குதாழ் சடையார் போல் - தாழ்சடையார் - சிவபெருமான்.
கொன்றையின் உருண்ட நீண்ட கனிகள் சடைபோன்றன என்பது கருத்து.
"மாலையின்றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற்பு - அந் - 65) என்ற
அம்மையார் திருவாக்குக் காண்க. அதன் முன்னர், "சடைமேலக் கொன்றை
தருகனிகள்" (50) என்ற திருப்பாட்டில் உமை அம்மையாரது
நீலக்குழலானவை கொன்றைக்கனிகள் சடைமேல் விளங்குவன போன்றன
என்ற கருத்தும் காண்க. 220ல் உரைத்தனவும் பார்க்க.

     நின்றதொரு கொன்றை - மலர்களாகிய கொன்றை மாலையும்,
கனிகளாகிய சடையும் தாங்குதலால் சிவபெருமானது திருவுருவம் திகழ
நின்றதாகிய ஒரு கொன்றை என்க. ஒரு - ஒப்பற்ற தன்மை. கொன்றை
மாலையும் சடையும் சிவபெருமானுக்குரிய திருவடையாளங்கள்.

     நேர்நோக்கி - கழியக்காணாது கண்ணெதிரே கண்டு. தமதுள்ளத்துக்
கண்ட தாழ்சடையார் போலவே புறத்தே கண்ட கொன்றை காணப்பட்டது
என்க. "நித்தினார்தில்லை மன்றுணின் றாடல் நீடிய கோலநேர் காட்ட"
(ஏயர்கோன் - புரா - 89) என்றது காண்க. நோக்குதல் - ஊன்றிப்பார்த்தல்.

     நேர்நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தை - முதலில் கொன்றை
மலர்த்துணரும் கனியும் கண்டார். அவரது மனம் மொழி மெய் என்ற
மூன்றும் சிவனையே பற்றியிருப்பனவாதலின் முன்னே காணும் கொன்றையும்
உள்ளே காணும் சிவனுருவமும் நேராக நோக்கினார்; அந்நோக்கத்தில்
அழுந்தியவராகி, ஆனிரை காக்கப் போந்த செயலை மறந்து நின்றார்;
அதன்பின் மனம் உருகினார்; உருகியதன் பயனாகச் சிந்தை
உடையவரிடத்து ஒன்றியவராயினார் என முறையே கண்டு கொள்க.