956.
|
ஆடுமயி
லினங்களுமங் கசைவயர்ந்து மருங்கணுக,
வூடுசெவி யிசைநிறைந்த வுள்ளமொடு புள்ளினமு
மாடுபடிந் துணர்வொழிய, மருங்குதொழில் புரிந்தொழுகுங்
கூடியவன் கோவலருங் குறைவினையின் றுறைநின்றார். |
31 |
954.
(இ-ள்.) வெளிப்படை. வள்ளலாராகிய ஆனாயர்
வாசிக்கின்ற
அழகிய துளைவாயினையுடைய வேய்ங்குழலிலே திருவைந்தெழுத்தினை
உள்ளுறையாகக் கொண்டொழுக்கெடுத்துப் (எம்மருங்கும்) பெருகி எழுகின்ற
மதுரம் பொருந்திய இசையொலியின் வெள்ளமானது நிறைந்து எல்லா
வுயிர்களிடமும், மேலான வானத்தின் வாழும் தேவர்களது கற்பகமரத்தின்
விளைந்த தேனினைத் தெள்ளிய அமுதத்தினுடன் கலந்து செவி வழியாக
வார்ப்பதுபோல நிறைக்க,
955.
(இ-ள்.)வெளிப்படை.
முன், புல்லருந்திய பசுக்கூட்டங்கள்,
பின் அசை விடாமல் இவர் பக்கம் அணைந்து தம்மை மறந்து நிற்கவும்,
தாய்முலையினைப்பற்றிப் பால் உண்டுகொண்டிருந்ததால் பால்நுரை கொண்ட
வாயினையுடைய பசுக்கன்றின் கூட்டமும் பாலுண்ணும் தொழிலைத் தாம்
மறந்தொழியவும், வலிய கொம்புகளையுடைய இடபக் கூட்டங்களும் மான்
முதலிய காட்டு விலங்குகளும் மயிர் முகிழ்த்து வந்து பக்கத்தில்
அணையவும், 30
956.
(இ-ள்.) வெளிப்படை. ஆடுகின்ற மயிற் கூட்டங்களும்
அசைவின்றி அங்குப் பக்கத்தில் வந்து அணையவும், காதுகளின் வழியே
சென்ற இசை நிறைந்த உள்ளத்தினோடு பறவைக் கூட்டங்களும் பக்கத்திற்
படிந்துவந்து தம் முணர்வு நீங்கவும், மருங்கே ஏவல்புரிந்து ஒழுகும்
கூட்டமாகிய வலியகோவலர்களும் தாம் செய்த ஏவற்றொழில்களை
முற்றச்செய்யாது இசைகேட்ட அம்மட்டிற் குறையாக விடுத்து நின்றனர். 31
இம்
மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
954.
(வி-ரை.) வள்ளலார் - சராசரங்கட்கெல்லாம்
இசையமுது
தேக்கித் தங்கருணையின் மூழ்குமாறு அமுதளித்த வள்ளன்மை குறித்தது.
குழலின்
எழும் ஒலி என்று கூட்டுக.
உள்ளுறை
அஞ்செழுத்தாக - பண்ணிசைக்கு உள்ளுறைப்
பொருள்வேண்டும். உள்ளுறை இல்லாத வெறும் பண்ணும், இராகமும்,
தாளமும் பயனிலவாம். இதனை உணராத இந்நாண் மாக்கள் உள்ளுறை
யில்லாத வெறும் இராக தாள விலயங்களிலே மயங்கிப் பலவகைப்பட்ட
இசையரங்குகளுட் சிக்கிச் செவிப்புலனின்பத்துக் கடிமைப்பட்டு ஒழிதலுடன்
தமது அரியகாலத்தையும் பொருளையும் இழந்துபடுகின்றார்கள். இவ்வாறு
ஐம்புலனின்பங்களில் ஒன்றாகி யொழியும் செவியின்பத்து ளாழ்ந்து கழியும்
பிறவி, "ஓசையின் விளிந்த புள்ளுப்போலவும்" என்றபடி, வறிதே கழிந்து
சாகும் பிறவியாகுமன்றி, உயிர் ஈடேறுதற்குச் சாதனமாகாது. "சொலவல
வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்காற், சிலவலபோலும்" (குறிஞ்சி -
திருச்சிராப்பள்ளி - 8) என்று ஆளுடைய பிள்ளையார் அருளியபடி
சொல்லத்தக்க கீதத்தினையே சொல்லுதல் வேண்டும். இங்குச் சராசரங்களை
இசை மயமாக்கி யுருக்கியதும், ஆனாய நாயனாரைச் சிவபெருமானின்
திருமுன்பு எப்போதும் வாசித்துக்கொண்டேயிருக்கப் பண்ணினதும் இசையின்
உள்ளுறையாகிய திருவைந்தெழுத்தேயாகும். நோய் போக்கி உயிர் காக்கும்
மருந்துக்குமேல் இனிய கட்டி பூசி உண்பிப்பதுபோலப், பிறவிநோய் நீக்கி
உயிருக்கு மீளா இன்பந் தரவல்ல ஆதி மந்திரமாகிய சீபஞ்சாக்கரத்தினை
உயிர்கள் இன்பமாய்ப் பருகுதற்கு, இசை, மேற்பொதியும் கட்டிபோல
உதவியதேயன்றிப் பிறிதில்லை என்க.
|