பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1223

 

     பாணி - தாளம் - 221 பார்க்க. இயல் - இராகம். பாணி - இராகம்
எனவும், இயல் - மூர்ச்சனை எனவும் கூறுவாரு முண்டு.

     தூக்கு - "பாடலும் பாணியும் தூக்கும்", (சிலப் - ந. அரங் - 16)
என்ற விடத்துத் தூக்கு என்பது "இத்தாளங்களின் வழிவரும் செந்தூக்கு,
மதலைத் தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றூக்கு,
நெடுந்தூக்கு, எனப்பட்ட ஏழு தூக்குக்களும் என்க. 'ஒருசீர் செந்தூக்
கிருசீர்மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே
அறுசீர்கழலே, யெழுசீர் நெடுந்தூக்கென்மனார் புலவர்' என்றாராகலின்"
என்று அடியார்க்கு நல்லார் உரைத்தவை பார்க்க. தூக்கு - ஏற்றம் என்பாரு
முண்டு.

     முதற்கதி - விளம்ப கதி என்ப.

     பண் அமைய எழும் ஓசை - பண் 221 - உரை அடிக்குறிப்புப்
பார்க்க. குழலினுள் ஏழிசையும் தோன்றும் என்றதனையும், இவற்றுட்
பண்பிறக்கும் என்றதனையும், "ச ரி க ம ப த நி யென் றேழெழுத்தாற்
றானம், வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய, வேழிசையுந்
தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ்,
சூழ் முதலாஞ் சுத்தத் துளை"
என்றதனா லறிக.

     பண்ணிசை யமைதியினையும் இசையிலக்கணங்களையும் இசைநூன்
மரபுப்படி மிடற்றுப்பாடலுக்கேற்றவாறு 221-ல் ஒருபாட்டாற் சுருக்கி எடுத்துக்
கூறிய ஆசிரியர், அதனையே குழற்கருவியன் இசைக்கேற்றவாறு, இசைக்
கூறுபாடுகளை, 938, 948 - 953 வரை, இப்பாட்டுக்களான் விரித்துக்
கூறுகின்றார். "யாழுங் குழலும் சீருமிடறும்" (சிலப் - 3 - அரங் - 26) என்று
முறைப்படுத்தியபடி யாழினோடுசேர்த்து மிடற்றுப்பாட்டுக்கு முன்வைத்து
எண்ணப்படும் சிறப்புவாய்ந்தது குழல்; யாழ் - குழல் என்ற இரண்டனுள்ளும்,
சொல்லை அவ்வாறே மழலையழகுபடத் தோற்றுவித்து இசைக்கும்
சிறப்புப்பற்றிக் குழலினை முன்வைத்துக் "குழலினி தியாழினி தென்ப" என்று
திருக்குறளினுட் பேசினார். அன்றியும் இச்சரிதம் குழலால் விளைந்த
சிறப்புடையது. ஆதலின் விரிவு குழலினோடு புணர்த்திக் கூறினார்
என்பதாம். இதுபற்றியே ஆசிரியர் முன்னர் இசையிலக்கணத்தையும்
அமைதியையும் சுருக்கிக் கூறியருளினர். இவ்வாறு பின்னர் ஏற்ற பெற்றி
விரிக்கவேண்டிய பகுதியை முன்னர்க் கூறநேர்ந்தபோது சுருக்கிக் கூறுதல்
ஆசிரியரது சிறப்பாகிய மரபுகளுள்ஒன்று. கருவியின் இசையியல்பை இங்கு
விரிவுபடக் கூறினாராதலின், பின்னர்த் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாடிய
யாழினிசைபற்றிக் கூறவரும்போது இங்கு வகுத்தவற்றை யுட்படுத்திச் சுருக்கிக்
கூறும் பொருத்தமும் காண்க. திருஞான - புரா - 134, 135, 136-லும்,
திருநீலகண்டயாழ்ப்பாணர் புராணம் 2-லும் கூறிய திறம் நோக்குக. முன்னர்
மிடற்றுப்பாடல் இயல்பற்றி 221ல் உரைத்தவற்றுள் குழற்கருவிக்கேற்றவற்றை
ஈண்டமைத்துக் கொள்க. 28

954.



வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறையஞ் செழுத்தாக வோங்கியெழு மதுரவொலி
வெள்ளநிறைந், தெவ்வுயிர்க்கும் மேலமரர் தருவிளைதேன்
றெள்ளமுதி னுடன்கலந்து செவிவார்ப்ப தெனத்தேக்க;



29
955.



ஆனிரைக ளறுகருந்தி யசைவிடா தணைந்தயரப்,
பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங் கன்றினமுந்
தானுணவு மறந்தொழியத், தடமருப்பின் விடைக்குலமு
மான்முதலாங் கான்விலங்கு மயிர்முகிழ்த்து வந்தணைய,



30