|
பொலிவைப்பாராட்டியதும்,
"தாமரைச்செங் கைகளினாற்
சப்பாணிகொட்டினார்" (திருஞான - புரா - 46), "குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியாடியகோலம்" (மேற்படி 52), "பங்கயத்தின் செவ்வி பழித்து
வனப்போங்கும் செங்கை" (மேற்படி 172), "பாத தாமரை" (மேற்படி 187)
என்பன ஆளுடையபிள்ளையாரது அருட்டிருமேனிப் பொலிவினைப்
பாராட்டிய தன்மையும், "தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனி" (திருநா -
புரா - 140) என்பது முதலாக ஆளுடைய அரசுகளின் கருணைப் பொலிவைப்
போற்றிய தன்மையும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. 27
953.
(வி-ரை.) நூல் எண்ணிய என மாற்றுக.
நூல்களால்
அளவுபடுத்தப்பட்ட.. எண்ணுதல்
- அளவு படுத்துதல். நூல் - இசைக்கலை
நூல்கள். கந்தருவவேதம் என்பர் வடவர்.
பெருவண்ணம்,
இடைவண்ணம், வனப்பு - இவை வண்ணவகை.
வனப்பு - வனப்பு வண்ணம். செய்யுளுக்கு வண்ணம்
வனப்பாதல் போல,
இசைநூலில் பண்ணுக்கு இவ் வண்ணவகைகள் கூறப்படும் எனவும் இவை
இக்காலத்தரியன எனவும் கூறுவர் ஆறுமுகத்தம்பிரானார்.
பெருவண்ணம்
- நெட்டெழுத்துக்களையே தொடுத்துப் பாடுவது
எனவும், இடைவண்ணம் - இடையெழுத்து மிகுதி
வருவது எனவும்,
வனப்பு வண்ணம் - எழுத்துக்கள் ஒன்றினோடொன்று பிளவுபடாமல்
இசைந்து அழகு பொருந்தியிருப்பது எனவும் கூறுப. இவை செய்யுட்டன்மை
குறிப்பன.
வண்ணம்
- சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம்
எனச்
சொல்வகை நான்காம் எனவும், அவற்றுள் வண்ணம் நானான்கடியான்
வருவதெனவும், அதுதான் ஒருவகையான் - பெருவண்ணம், இடை
வண்ணம், வனப்பு வண்ணம் என மூன்று வகைப்படும் எனவும், அவற்றுட்
பெருவண்ணம் ஆறாகவும், இடைவண்ணம் இருபத்தொன்றாகவும், வனப்பு
வண்ணம் நாற்பத்தொன்றாகவும் (நாற்பத்தொன்பதாக என்றும் பாட
பேதமுண்டு) வருமெனவும் கூறுப. (சிலப் - 3 - அரங் - அடியார்க்கு
நல்லாருரை பார்க்க.) இதுவும் சொற்கூறுபாடு பற்றியதாம். "யாழுங் குழலுஞ்
சீரும்" (சிலப் - அரங் - 26) என்ற இடத்துச் சீர்
என்றதற்குச் "செம்முறை
யுறழ்பே மெய்ந்நிலை கொட்ட, னீட்ட னிமிர்த்தல்" என்று சொல்லப்படா
நின்ற வண்ணக் கூறுபாட்டையும், இருவகைத் தாளக் கூறுபாட்டையும்,
பாலை நிலையினையும், பண்ணு நிலையினையும் நிலைப்படுத்துத் தூய்தாகக்
காட்டும் தன்மை", "வண்ணம் - நிறம்" என்ற அடியார்க்கு நல்லாருரையும்
ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இது இசைக் கூறுபாட்டினைப் பற்றியதாம்.
வண்ண
இசை - இசை வகை எல்லாம் என்றாராகலின் இங்கு
வண்ணம் என்றது யாப்பின் வகையாகிய சொற்கூறுபாடன்றி இசை ஓசைக்
கூறுபாடு குறித்ததென்று கொள்ள இடமுண்டு. அன்றியும் "எழுத்தஞ்சும்
தொடுத்த முறை ஏழிசையின் சுருதிபெற வாசித்து" (939), "எழுத்தைந்தும்
வழுத்தித் தாம் முன் பூதி வரும்" (947) என்று கூறியவாற்றால் ஆனாய
நாயனார் திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தினையே இசைச் சுருதிபெற
வாசித்தனர் என்று கொள்ளக்கிடக்கின்றது.
ஆனால்
"உள்ளுறை யஞ்செழுத்தாக" (954) என்றதனால் வண்ண
இசை வகைகளில் வைத்துத் திருவைந் தெழுத்தினை உள்ளுறையாகக்
கொண்ட கீத இசை பாடினார் என்று கொள்ளவும் இடமுண்டு. "பண்ணொன்ற
விசைபாடும்", "கீதத்தை மிகப்பாடும்", "அளப்பில் கீதஞ் சொன்னார்க் கடிகடா
மருளுமாறே" என்று தேவராத் திருவாக்குக்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன.
இசை
- 221 உரை பார்க்க. மாதுரிய நாதம் -
மதுரத்தையுடையது
மாதுரியம், வடசொல் முடிபு. நாதம் - இசை
ஓசையின் அமைவு.
|