பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1221

 

     எழுத்தைந்து - சீபஞ்சாக்கரம். முன்னர் "எம்பிரா னெழுத்தஞ்சும்"
(939) என்றது இதற்குமுன் பலநாளும் நியதியாய் வாசித்ததனைக் குறித்ததாம்.

     இசைக்கிளை ஐந்து - ஆயத்தம, எடுப்பு, உக்கிரம் (உற்கிரகம்),
சஞ்சாரம், இடாயம் என்பன.

     முறை விளைத்தல் - இவ்வைந்து கிளைகளிலும் முறையே
பண்ணமையப்பாடுதல். ஆயத்தம் - மநத்ரத்தினின்றும் அனுமாந்தரமகிய
கீழ்ஸ்தாயி வரை சென்று முன் தானத்தில் வந்து முடிவது; எடுப்பு -
மந்தரத்திலிருந்து பஞ்சமம் வரை போய் மீண்டும் மந்தரத்தில் வந்து
முடிவது; உற்கிரகம் - மந்தரம் முதல் தாரத்தானம்வரை போய் மீண்டும்
மந்தரத்தில் வந்து முடிவது; சஞ்சாரம் - மந்தரத்திலிருந்து மத்திமம் தாரம்
ஆகிய இரண்டினும் போய் இறங்கிக் கீழ்ஸ்தாயியான அனுமந்தரத்திற்
சென்று மீண்டும் மந்தரத்தில் வந்து நிற்பது; இடாயம் - மந்தரத்தானத்தையே
முதன்மையாகச் செய்துகொண்டு, மத்திமம் தாரம் இரண்டினும் சென்று,
பின்பு மந்தரத்தையே வலியுறுத்தி அனுமந்திரத்தற் சென்று மீண்டும்
மந்தரத்தில் வந்து முடிவது என்ப. 26

     952. (வி-ரை.) மந்தரம் - மெலிவு; மத்திமம் - சமன்; தாரகம் -
வலிவு. இவை ஓசை பேதங்கள். இவற்றுக்கு முறையே மெலிவித்தும்,
சமங்கொண்டும், வலிவித்தும் எனத் தொழிற்பாடு கூறுவது காண்க. இவற்றை
முறையே படுத்தலோசை, நலிதலோசை, எடுத்தலோசை என்றுங் கூறுவர்,
"குறையாநிலை மும்மைப்படி" (221) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

     தந்திரி என்றது இங்குக் குழலிசைக் கருவிக் கேற்பத் துளைகளைக்
குறித்தது ஆகுபெயர்.

     அந்தரம் - இடையிட்ட துளைகள். விரலுளர் துளைகள் என்ப.

     அந்தரத்து......இயக்கி - மெலிவும் சமனும் வலிவுமாக வரன்முறையால்
ஓசையளவு படுத்துதற்கு விரல்களை அந்தந்த அளவுக்குப்பொத்துதல்,
விடுத்தல், அசைத்தல், இயக்குதல் முதலிய தொழில்களைச் செய்து என்க.

     கனிவாய் - அருள் கனிந்த வாய் என்றலுமாம்.

     துளைவாய் - குழலின் துளைவாய். குழலின் எட்டுத் துளைகளில்
விரல்கள் வைத்து இயக்கிச் சுரங்களைக் காட்டும் ஏழு துளைகள் போக,
வாய் வைத்து ஊதும் எட்டாவது துளை. இவற்றை முறையே விரலுளர்
துளை
எனவும், ஊது துளை எனவும் கூறுவர்.

     வாயும் துளைவாயும் தொடக்குண்ணல் - விரற்றொழில் மெலிவும்
சமனும் வலிவும் செய்தற்கேற்றவாறு காற்றுச் செல்வதற்குக் குழலின்
துளைவாயில் தமது வாயும் பொருந்தவைத்து ஊதுதல். தொடக்குண்ணப் -
பரப்பினார் -
(953) என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

     முன்மணி அதரம் வைத்தூத என்றது இசை ஒலி செய்யும்
தொடக்கத்தினையும், இங்குக் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண(ப்
பரப்பினார்) என்றது அவ்வாறெழுப்பிய இசையினைப் பாகுபடுத்தி மாதுரிய
நாதத்தில் பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில் ஒழுங்கு செய்து
பரப்புதலையும் குறிப்பனவாதலின் கூறியது கூறலன்மை யுணர்க.

     சுந்தரச் செங்கனிவாய் - முன், மணியதரம் (918) என்றதற்கேற்ப
இங்கு இவ்வாறு கூறினார். இவை நாயனாரது இந்நிலையே ஐயர்
மருங்கணையும் அருட்டிரு மேனிப் பொலிவைப் பாராட்டும் முறை. "மாசறு
கோலம்" (670), "புண்ணியக் கங்கை நீரிற் புனிதமாந் திருவாய்நீர்",
"வண்ணமென் குதலைச் செவ்வாய்" (671) என்பன முதலாகக்
கண்ணப்பநாயனாரது அருட்டிரு மேனியின்