என்று பிராணிகள்
இரண்டுவகைப்படும். முட்டையிற்பிறப்பனவாகிய
புள்ளினம் துளைச் செவியுடையன என்பர். அவ்வாறு உள்ள துளைகளாகிய
செவியூடு என்ற படியாம். ஆடும் மயில்கள் ஆடும்போது உண்மகிழ்வு
நிறைவன; ஏனைக் கிளி, குயில் முதலிய புள்ளினங்கள் எப்போதும்
இணைபிரியாது பாடிமகிழ்ந்து பறந்து திரிவன. இப்படி மகிழ்வு நிறைந்த
உள்ளமுடைய புள்ளினம் வெளியே நின்றும் செவியூடுபுக்கு நிறைந்த
இசையுள்ளத்தினோடு என விரித்துரைத்துக்கொள்க. புள்ளினத்தின்மகிழ்வு
நிறைவாந்தன்மைபற்றியே திருத்தோணிபுரம் (பண் - பழந்தக்கராகம்)
தேவராத்தினுள் "பெடையினொடு மொண்டரங்க விசைபாடு மளியரசே"
என்பது முதலாகப் பதிக முழுதும் இப்புள்ளினங்களை விளித்து
ஆளுடையபிள்ளையார் அருளியதும் இவ்வாறே திருவாரூர் (பண் - கொல்லி)
"குருகுபாய" என்ற திருப்பதிகத்தினுள் "பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம்
பூவைகாள்" என்பது முதலாகப் பதிகமுழுதும் புள்ளினங்களை விரித்து
ஆளுடைய நம்பிகள் அருளியதும் இங்கு உன்னுக.
மாடு
படிந்து உணர்வு ஒழிய - மாடு படிதல் - தாம் பறந்தும்
இருந்தும் உள்ள உயர்ந்த இடங்களினின்றும் ஆனாயர் குழலிசைக்கும்
பக்கத்தே இறங்கியிருத்தல். உணர்வு ஒழிதல் -
தம்முணர்வு மறத்தல் -
மனிதர் கையிற் படாது தம் வயமாய்ப் பறந்து வாழும் இவை, தற்காப்பையும்
மறந்து மனிதர் கையகப்பட்டுக் கொள்ளும் அளவில் படிந்து இருந்தன என்க.
தொழில்
புரிந்து....கோவலர் - முன்னர்க், "கோவல ரேவல்
புரிந்திட" (937) "வினை செய்யும் காவல்புரி வல்லாயர்" (943), "எடுத்தகோ
லுடைப் பொதுவர் தம்மருங்கு தொழுதணைய" (945) என்று கூறப்பட்ட
இடையர்கள். இவர்கள் தமது தலைவராகிய ஆனாயரின் சொல்வழி,
ஆனிரை, விடைக்குலம், கன்றினம் என்பவற்றைத் தகுதிபெற வெவ்வேறாக
வேறு வேறிடங்களிற் கொண்டுய்த்து மேய்த்துக் காவல் புரிபவர்.
குறைவினையின்
துறை நின்றார் என்றது தலைவர் ஏவியபடி
தொழில் புரிந்த இவர்கள் அத்தொழில்களின் இடையில் குழலிசையில்
ஈடுபட்டவர்களாய் அத்தொழில்களைக் குறைபட நிறுத்தி மருங்குவந்து
நின்றனர் என்பதாம். குறைவினையின் துறை -
செய்தொழில்
முற்றுப்பெறாத நிலையில் இவர்கள் மேய்த்த ஆனினங்கள் மேய்தலை விட்டு
வந்தணைந்தமையானும் இவர்களது தொழில் குறைவினையாய் நின்றதும்
காண்க.
கூடியவண் - என்பதும் பாடம். 31
957.
|
பணிபுவனங்
களிலுள்ளார் பயில்பிலங்கள் வழியணைந்தார்;
மணிவரைவா ழரமகளிர் மருங்குமயங் கினர்மலிந்தார்;
தணிவிலொளி விஞ்சையர்கள் சாரணர்கின் னரரமரர்
அணிவிசும்பி லயர்வெய்தி விமானங்கண் மிசையணைந்தார். |
32 |
(இ-ள்.)
வெளிப்படை. நாகருலகங்களிலுள்ளவர்கள் தாம் முன்பு வந்து
பழகிய பாதலப்பிலங்களின் வழியாய் இங்கு வந்து அணைந்தார்கள்; அழகிய
மலைகளில் வாழும் தெய்வ மகளிர்கள் இசையால் மயங்கினர்களாகி
அம்மருங்கு வந்து மலிந்தனர்; குறையாத ஒளியுடைய விஞ்சையர்களும்,
சாரணர்களும், கின்னரர்களும், தேவர்களும் தாந்தாம் வாழும் அழகிய
ஆகாய நிலைகளிலிருந்து இசைவயப்பட்டவர்களாய்த் தம்மை மறந்து
விமானங்களில் வந்து அணைந்தார்கள்.
(வி-ரை.)
பணி - பாம்பு. பணிபுவனம் -
அத்தெய்வப் பகுதியினர்
வாழும் உலகம். இது பாதலம் - கீழுலகம் - நாகருலகம் எனவும்
வழங்கப்படும்.
பயில்
பிலங்கள் - பயிலுதல் இங்கு மேலேறி வந்து பழகுதல்
குறித்தது. பயில் பிலம் - (அவ்வாறு) பழகிய
வழிகள். நிலத்தின் கீழே
உள்ளனவாகக் கருதப்
|