செயப்படுவோர். செயப்பாட்டு
வினைமுறையே விவ் விகுதியும் படு
விகுதியும் தொக்கன; உணர்ச்சி வேற்றுமை நீங்கியது குறித்தற்கு. (விகிருதி -
வேறுபாடு)
உணர்வு
ஒன்றாய் நயத்தலாவது - ‘நாம் வலியோம் - இது
வலியிலது - இது நமக்கு இரையாவது - இதனைக் கொல்வோம்' என்றும்,
‘நான் வலியில்லேன் - இதற்கு நான் இரையாவேன் - இது என்னைக்
கொல்லும்' என்றும் இருபாலிலும் பகை உறவு என்ற தமது இயல்பாகிய
உணர்ச்சி மறந்து, உள்ளத்தில் இசை நிறைதலால் இருபாலிலும் இசை
ஒன்றேயாகிய ஓருணர்வுடையனவாகுதல். ஒன்றற்கொன்று பகையாகிய
பாம்பும் மயிலும், அரியும் கரியும், புலியும் மானும் உடன்சார்தற்குரிய
காரணத்தை விளக்கிக் காட்டியவாறு. இவ்வியல்பு எங்கும் கண்கூடாகக்
காணத்தக்கது. மாணிக்கவாசகசுவாமிகள் தில்லைவனத்தில் சிவயோகம்
பயின்று தவஞ் செய்திருந்தபோது பிராணிகள் வந்து அவரிடம் கூடின என்று
"மானிரையுங் குயவரியும் வந்தொருங்கு நின்றுரிஞ்ச மயங்கு கானத்,
தானிரைகன் றெனவிரங்கி மோந்து நக்க வானந்த வருட்கண் ணீரைக்,
கானிரைபுள் ளினம் பருக" (திருவிளை - புரா - மண் - பட - 96) எனக்
கூறியதும் இக்கருத்தே பற்றியது.
வாய்மலி
வெள் எயிறு என்க. பாம்பின் வாயினுட் பல பற்கள்
உண்டு. அவற்றுள் நான்கு, விடத்தினை உகுக்கும் குழாய்போன்ற உள்
துளையுடைய வெள்ளிய கூரிய பற்கள்1 "தூம்புடைவால் எயிற்று அரவு"
(திருமுருகாற்றுப்படை).
அரவமும்
மயிலும் - பகைமைபூண்ட பிராணிகள். மயில் பாம்பினைக்
காணிற் கொத்திக் கிழித்துக் கொன்றுவிடும். "மஞ்ஞை குஞ்சரங்
கோளிழைக்கும், பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கு" என்பது
திருக்கோவையார் (21).
சலியாத
நிலை அரி - காட்டு விலங்கினங்களுக்கெல்லாம் தலைமை
பூண்ட சிங்கம். அதனது அசைவில்லா வீரத்தைக் குறிக்கச் சலியாத
நிலை
என்றார்.
புல்வாய
- புல்லைவாயிலே யுடையனவாகிய - புல் மேய்ந்து -
கொண்டிருந்த - மான்கள் மேலும் மேய்ந்து வயிறு நிறைத்துக் கொள்வதனை
விடுத்து அந்நிலையிற் சில புல்லை வாயிற் கொண்டபடியே என்றதாம்.
"பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங் கன்றினமும்" (955) என்றது
காண்க. "செவிக்குண வில்லாத போழ்து சிறிது, வயிற்றுக்கு மீயப் படும்"
(குறள்) என்ற உண்மை இவ்விலங்கினங்களாலும் விளக்கப்பட்டது போலும்.
புல்வாய் - சிறிய வாயினையுடைய என்பாருமுண்டு.
34
960.
|
மருவியகால்
விசைத்தசையா; மரங்கண்மலர்ச் சினைசலியா;
கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா;
பெருமுகிலின் குலங்கள் புடை பெயர்வொழியப் புனல்சோரா;
இருவிசும்பி னிடைமுழங்கா; வெழுகடலு மிடைதுளும்பா. |
35 |
(இ-ள்.)
வெளிப்படை. பொருந்திய காற்று விசையாக அசையா;
மரங்களின் மலர்பொருந்திய கிளைகள் அசையமாட்டா; கரியமலையினின்றும்
வீழ்கின்ற அருவிகளும் காட்டாறுகளும் சத்தித்து ஓடமாட்டா; பெரிய
முகிற்கூட்டங்கள் புடைபெயர்ச்சியை ஒழிந்து மழை நீரைப் பெய்யமாட்டா;
ஆகாயத்தினிடை முழக்கம் செய்யமாட்டா; ஏழு கடல்களும் துளும்பமாட்டா.
(வி-ரை.) மருவிய கால்
- கட்புலப் படாமல் பொருந்திய காற்று.
வடக்கினின்றும் வந்து பொருந்திய என்றலுமாம். விசைத்து
அசையா -
தமக்கியல்பாயுள்ள இயக்கத்தின் வேகத்தில் அசையா; அசைதல்
இயங்குதல்.
இது காற்றின் இயல்பு.
1இதுபற்றி
எனது "சேக்கிழார்" 100 - 104 பக்கங்கள் பார்க்க.
|