பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1229

 

பிறவாற்றானும் அறிக. ஆயின் இவ்வகை அன்பு வழக்குக்களெல்லா
மொழிந்து துன்ப வன்பு வழக்குக்கள் பலவும் மகளிர் போதுபோக்கும்
தொழில்களாகக் காணப்படுவது இக்காலக் கொடுமைகளுள் ஒன்று.

     கற்பகப் பூஞ்சோலை மருங்கிருத்தல் - அம்மகளிர் தமக்கும், தாம்
வளர்த்தூட்டும் கிளிகளுக்கும் இன்பந் தருதற்குத் தக்க இடமாகக்
கொண்டமை காட்டிற்று. கரமலரின் - மலர்போன்ற கைகளால்.
முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை. மெய்யும் உருவும்பற்றிவந்த உவமை.
இன் - கருவிப் பொருள்களில் வரும் மூன்றனுருபின் வந்தது. உருபு மயக்கம்.
கரமாகிய மலரின்; உருவகம் என்றலுமாம்.

     அமுதூட்டும் கனிவாய் - கிளிகளுக்குக் கனிகளை ஊட்டுவதும்,
அவை அந்தக் கனிகளைத் தம்வாயாற் பற்றிக்கொள்ளுதலும் இயல்பு.
கொவ்வைக்கனிபோன்ற வாய் என்றுரைப்பினுமாம்.

     மென்கிள்ளை - சிறிய பறவையாதலானும், பேச்சும் இயலும்
மென்மையுடையனவாதலானும் மென்கிள்ளை என்றார். விண் மாதர்
கிள்ளைகளுடன் வந்தனர் என்க. நறிய கற்பகப் பூஞ்சோலையின் நறுநீழலில்
அமர்ந்து மென்கிளிகளை அமுதூட்டி அவற்றின் இனிய மொழி கேட்டு
மகிழ்ந்த இன்பத்தினும் மேலாய் இக்குழலிசையினை விரும்பி வந்தனர்
என்பதாம்.

     குழல் அலைதல் - வருகையின் விரைவினால் ஆகியது. "விரைந்தேறி"
என்றது காண்க.

     விரைவு - இசையின் வசப்பட்டு அதனைப் பருகும் ஆர்வங் குறித்தது.
"வாரிசையு முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப்பா ராட்டக்,
காரிசையும் விசும் பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே" (4),
"பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் பாராட்டு மோசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலை யாமே" (பண்
மேகராகக் குறிஞ்சி 10) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரங்கள் இங்கு
நினைவு கூர்தற்பாலன. மண்ணினல்லோர் பரவிய ஏழிசை இறைவனது புகழை
உள்ளுறையாகக் கொண்டிருந்தமையானும் இவை தேவருலகத்துக்
கேட்கப்படுதலில்லை யாகலானும் விண்ணவரும் இவற்றின் வயப்பட்டு இங்கு
வருதல் இயல்பென்க.

     பரவிய - சிவபெருமானது திருவைந்தெழுத்தை உட்கொண்டு பரவிய.
மண்ணுலகமேயன்றிப் பாதலமும் விண்ணுலகமும் பரவிய என்றலுமாம்.
"எம்மருங்கும் பரப்பினார்" (953), "வையந்தன் னையுநிறைத்து வானுந்தன்
வயமாக்கி" (962) என்பவை காண்க.

     விரவநறுங் - என்பதும் பாடம். 33

959.



நலிவாரு மெலிவாரு முணர்வொன்றாய் நயத்தலினான்,
மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழுஞ்;
சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும்;
புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்.



34

     (இ-ள்.) நலிவாரும்.......நயத்தினால் - வருந்தச் செய்கின்றவர்களும்
அதனால் வருந்துகின்றவர்களும் கொண்ட உணர்ச்சி ஒன்றாக நயப்பாடு
உற்றமையினால்; மலிவாய்.......விழும் - வாயில் மலியும் வெள்ளிய
பற்களையுடைய பாம்பு இசையான் மருட்சியடைந்து (தன் பகையாகிய)
மயிலின்மேல் விழும்; சலியாத.....சாரும் - சலித்தலில்லாத நிலையினையுடைய
சிங்கமும் பெரிய யானையினுடன் சார்ந்து வரும்; புலி வாயின் புல்வாய
புல்வாயும் புலியினது வாயின் பக்கத்தில் புல்லைவாயிற்கொண்ட மானும்
அணையும்.

     (வி-ரை.) நலிவார் - நலியச் செய்பவர் - துன்பம் விளைவிப்பவர்.
நலிவிப்பார் எனப் பிறவினையாகக் கொள்க. மெலிவார் - மெலியப்படுவோர்.
துன்பம்