பழவடிமைப் பாங்கருளி"
(சாக் - புரா - 17), "என்றும் பிரியா
தேயிறைஞ்சியிருக்க" (சிறுத் - புரா - 87), "வன்றொண்ட ராலால சுந்தர
ராகித்தாம் வழுவாத, முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்;
முதற்சேரர் பெருமானு நன்மை சேர்கண நாதரா யவர்செயு நயப்புறு
தொழில்பூண்டார்" (வெள் - சருக் - 49), "கமலினி யாருட னனிந்திதை
யாராகி, மலைத் தனிப்பெரு மான்மகள் கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்"
(மேற்படி 50) முதலியவையும் காண்க.
புண்ணியனார்
- புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாயும்,
பிறப்பிடமாயும், இருப்பிடமாயும், சேர்விடமாயும் உள்ளவர். சிவபெருமான்.
40
சரிதச்
சுருக்கம் :- சோழநாட்டின் ஓர் உட்கழுதியாகிய மேன்மழ
நாடு என்பது நீடும் வளத்தினையுடைய நீர்நாடாம். அதில் தாமரைகள் பூத்த
நீர்நிலைகளு!ம் குளிர்ந்த தேமாஞ் சோலைகளும் உண்டு. கமுகு வாழை
முதலியன அந்நாட்டினின் மிகுந்த பயிர்கள். இவ்வாறுள்ள மருதத்தினைச்
சூழ்ந்து ஒருபுறம் காடாரம்பமாகிய முல்லைப் பகுதியும் உண்டு. இவ்விரண்டும்
ஒன்று கூடுவதால் இவற்றின் ஒழுக்கமும் பொருள்களும் ஓன்றுகூடி மயங்கிய
திணைமயக்கமும் இங்குக் காணத்தக்கது.
இப்படித்தாகிய
மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம்போல
உள்ளது. அதற்கு மங்கலமாகியது திருமங்கலம்
என்ற அதன் வாழ்
மூதூராகும். அப்பதியில் நீடிய பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர்
குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற
பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனமொழி
மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை யல்லாது
வேறொன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக் காத்தலைச்
செய்வாராய்ப் பசுக்களைச் சேர்த்து, அகன்ற புறவிற்கொண்டுசென்று,
அச்சமும் நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும்
நன்னீரும் ஊட்டிப், பெருகுமாறு காத்துவருவார். இளங் கன்றுகள், பால்மறை,
நாகிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக
அவற்றை வெவ்வேறு பகுத்துக் காவல் புரிவார். இவ்வாறு ஆனிரை காத்துத்
தம் சொல்வழிக் கோவலர் தொழில் புரிந்துவர நின்ற இவர், சிவபெருமான்
றிருவடியில் அன்புபொருந்திய இசையினையுடைய துளைக் கருவிக்குழல்
வாசித்தலை மேற்கொண்டொழுகினார். இசை நூல் விதிப்படி அமைத்த
வேய்ங்குழலில் சிவபெருமானது திருவைந் தெழுத்தையும் ஏழிசையின் சுருதி
பெற வாசித்துச் சராசரங்களெல்லாம் தமது கருணை பொருந்தக் குழலிசை
யமுதம் அளித்து வருவாராயினர்.
இப்படி
நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது சிகழியிற் கண்ணி
செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின்புறங் கட்டி, வெண்காந்தட் பசிய
இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து,
கண்டோர்மனங் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெற இட்டு,
அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை யணிந்து,
இடையில் மரவுரியுடுத்து, அதன்மேல் தழைப்பூம் பட்டுத் தானை அசையக்
கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் வெண்கோலும்
வேய்ங்குழலும் விளங்கக்கொண்டு, கோவலரும் ஆவினமும் சூழப்
பசுக்காக்கப் புறம்போந்தார்.
போந்த
அவர் அங்கு மாலைபோன்ற பூங்கொத்துக்களும் கனிகளும்
நிறைந்த தொரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்போதும்
கண்டு கொண்டிருந்த, சடையிற் கொன்றைமாலை சூடிய சிவபெருமானைப்
போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே, அதனை நேர்நோக்கி நின்று
உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊறிய அன்பு தம்மையுடையவர்பால்
மடைதிறந்த நீர் போலப் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத
இசைக்குழலோசையில் சிவபெருமானது திருவைந்தெழுந்தினையும்
உள்ளுறையாக அமைத்து
|