பக்கம் எண் :


1260 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     மூதூர் - முதுமை ஊர் - மூதூர் என வந்தது. நாடு, தொன்மைப்
புகழ்பூண்டது
(968) என்றதற் கேற்ப, அதன் தலைநகரமும் மூதூர்
எனப்பட்டது. எல்லார்க்கு முன்னே தோன்றி முளைத்த முழுமுதற் கடவுள்
எழுந்தருளியுள்ள தலமாதலின் அந்தப் பழமை பற்றியும் மூதூர் என்றார்.

     மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூல் - "ஞாலமளந்த மேன்மைத்
தெய்வத் தமிழ்" (970) என்றவிடத் துறைத்தவை பார்க்க. தமிழ்நூல்கள்
மெய்ம்மைப் பொருள் இன்னது - பொய்ம்மைப் பொருள் இன்னது
எனக்காட்டி உலகத்தை நிலைப்படுத்துதலால் இவ்வாறு கூறினார்.

     தமிழ் நூலில் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருள் -
அத்தமிழ் நூல்களுள்ளே சிறந்துவிளங்கும், முடிந்த உண்மையாகிய
செம்மைபெறும் பொருளைத் தருவதாய் விளங்குகின்ற பொருணூல்.
மெய்ம்மைப் பொருள்
என்றது பொருள் நிச்சயம் செய்த நிலையினையும்,
அதனுள், வாய்மைச் செம்மைப் பொருள் என்றது அவ்வாறு நிச்சயித்த
பொருளை அனுபவ வகையால் அடையும் யோக (முத்தி) நிலையினையும்
குறித்தன.

     செம்மைப் பொருள் - செம்பொருள் என்ப. செம்மை - முத்தி.
"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்"
(திருத்தொண்டத்தொகை) "செம்மைநல மறியாத சிதடர்" (திருவாசகம் -
அச்சோ - 9) முதலியவை காண்க. இச்செம்மைப்பொருளின்
அனுபவநிலை தமிழ்அகப்பொரு ணூல்களாலுணர்த்தப்படும்.
திருக்கோவையாருரைப்பாயிரத்தாலும் இறையனாரகப் பொருள்
உரைப்பாயிரத்தாலும் இஃது இனிது விளங்கும்.

     மெய்ம்மை.........பொருளுந் தருவார் - திருவாலவாயில் இறைவர்
தமிழ் நூலின் உண்மைத் தன்மையினை விளக்கினார் என்பது இறையனாரகப்
பொருளாலும், திருவிளையாடற் புராணம் - சங்கத்தார் கலகந்தீர்த்தது
முதலிய சரிதங்களாலும் அறியலாம். செம்மைப் பொருளும் தருவார்
என்றது அறிவனூற் பொருளும் உலகியனூற் பொருளும் என்ற இரண்டனுள்
பிறர் எவராலும் உணர்த்துதற்கரிய ஆகமநூல் வழியினுதலிய ஞானயோக
நுண்பொருளாகிய அனுபவநிலை என்னும் முத்திப்பொருளைத் தருதல்.
"தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை" (திருவம்மானை) என்ற
திருவாசகம் காண்க.

     பொருளும் தருவார் - பொருளும் - தமிழ் நூல்களைத்
தருதலேயன்றி அவற்றுள் விளங்கும் வாய்மைச் செம்மைப் பொருளும்
என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. சொல்லையும் தருவார்,
அச்சொல் நுதலிய பொருள்களாகிய "பொன்னு மெய்ப்பொருளும்"
"போகமும் வீடும்" ஆகியவற்றையும் தருவார் என்பது, "போகா பவர்க்கதம்"
என்பது ஆகமம். "கொங்குதேர் வாழ்க்கை" என்ற பாடலைப் பாடித்
தந்ததுவும் இங்கு நினைவு கூர்க. இக்கருத்துப் பற்றியே எம்மைப்
பவந்தீர்ப்பவர்
என அவர் பொருள் தருதற்குக் காரணங் கூறினார்.
சங்கம் என்றதனால் நூல்தருதலும், பவந்தீர்ப்பவர் என்றதனால்
செம்பொருள் தருதலும் கூறியவாறாயிற்று. பவம் பிறவிக்கேதுவாய
பசுத்துவம். "பவமின்றாம்" (சிவஞானபோதம் -12 - 4) என்றது பார்க்க.

     பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் - சங்கமிருந்தது -
சங்கத்தில் தலைவராக வீற்றிருந்த இடம். பவந்தீர்ப்பவர் எழுவாய்.
இருந்தது - இருந்தது - இருத்தற்கிடமாகியது. சங்கமிருத்தல் - ஒரு சொல்.
பவந்தீர்ப்பவருடைய சங்கம் என்று ஆறாம் வேற்றுமைத் தொகையாகக்
கொண்டு அவரது சங்கம் இருந்தது என்றுரைப்பினுமாம்.

     மெய்ம்மைப் பொருளாம் தமிழ்நூல் - "தெய்வத் தமிழ்" (970),
"சால்பாயமும்மைத் தமிழ்" (972) என்றவை காண்க. தமிழ்நாட்டெல்லையுள்
காணும்