பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1261

 

நாடுகள் பலவற்றுள்ளும் பாண்டிநாடொன்றே தமிழ்நாடு எனப்படும்.
இறைவனாரும், அவர்தம் திருமகனாரும், அவர்களிடம் தமிழுணர்ந்த
அகத்தியரும் சங்கமிருந்து தமிழ்வளர்த்தனர். அகத்தியர் இன்றும்
பொதிகையில் இருந்து தமிழ் பரப்புகின்றார் என்ப. ஆதலின், சோழநாடும்
காவிரியும் இணைபிரியாமல் எண்ணவருவனபோலப், பாண்டிநாடும் தமிழும்
இணைத்தே எண்ணவருவனவாம். இது பற்றியே ஆசிரியர் தமிழொடு
புணர்த்தியே நாடும் நகரும் சிறப்புக் கூறுவாராயினர். முன்னர் 968ல்
உரைத்தவையும் பார்க்க. நமது பரம ஆசாரியர்கள் ஆலவாயிறைவரைத்
தமிழ்த்தலைவராகவே கண்டு வணங்கியதனை ஆசிரியர் கண்டு
காட்டியருளினர். இத்தகைய தமிழ்ப்பெருநாட்டினும் இந்நாளின்
தமிழ்வாசனை அருகிவரும் கொடிய காட்சி வருந்தத்தக்கதாம்.

     செம்மைப் பொருளும் தருவார்என்ற இடத்தில் தமிழ்நூல்களுள்
வாய்மை பெரிதும் காணப்படினும் பிற்காலத்து நூல்களுள் வாய்மையின்
மாறுபட்டவை காணப்படுவன என்றும், இங்குப் பொருளும் என்றதனை
இறையனார் அகப்பொருள் குறித்ததெனக் கொள்ளுதல் சரிதத்துணைபெறாத
பிற்காலவழக்கு என்றும், இறையனார் என்பார் அப்பெயர் கொண்டதொரு
புலவரே யென்றும் சிலர் ஆராய்ச்சியுரை காண்பர்.

     தமிழ்நூலுள் வாய்மை விளங்கும் என்றதேயன்றி வேறு நூல்கள்
தமிழில் இல்லை என்று இப்பாட்டிற் கூறப்படவில்லை. நமது பரம
ஆசாரியன்மார்களால் மறுக்கப்பட்ட சமண சாக்கிய முதலிய புறச் சமய
நூல்கள் பலவும் தமிழில் தானே இருந்தன. "வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயிரஞ்சமண்" என்றதனால் வாய்மை தேறாமலும் சிவனுக்கு ஆட்படாமலும்
கழிந்த தமிழரும் உண்டாயிருந்தனரன்றே! இங்கு ஆசிரியர் கருதியது தமிழ்
நூல்களுள் வாய்மை விளங்குவது என்ற மட்டிலே அமைவதாம்.

     தமிழ்நூலின் பொருளும் தருவார் என்றதற்கு அகப்பொருணூல்
தந்ததனை உட்குறித்து வைத்து ஆசிரியர் கூறினர் என்பது, "திருந்தியநூற்
சங்கத்தில் அன்றிருந்து தமிழாராய்ந் தருளியவங் கணர்கோயில்" (திருநா -
புரா- 403), "தலைச்சங்கப் புலவனார்" (திருஞான - புரா - 667), "நூலின்கட்
பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானை" (திருஞான - புரா - 883), "திருவால
வாயமர்ந்த செஞ்சுடரைச், செழும் பொருணூல், தருவானை" (திருநா - புரா -
406) என்றவற்றால் இனிது விளங்கும். மேற்கூறியவாற்றால் இறையனார்
என்பாரை வெறும் புலவராகவன்றிக் கடவுளாகவே ஆசிரியர் கருதினர்
என்பதும் விளங்கும். ஆசிரியரது தெய்வத் திருவாக்குக்கு மாறுபட்ட
ஆராய்ச்சிகள் உண்மைக்கு மாறுபட்டவை யாமென்பது அறிவோர் துணிபு. 7

975.



அப்பொற்பதி வாழ்வணி கர்குலத் தான்ற தொன்மைச்
செப்பத்தகு சீர்க்குடி செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினை யும்மறுத் தேறுகைத் தேறு வார்தாள்
மெய்ப்பற்றெனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்,
  8
   
1976


.
நாளும்பெருங் காதன யப்புறும் வேட்கை யாலே
கேளுந்துணை யும்முதற் கேடில் பதங்க ளெல்லாம்
ஆளும்பெரு மானடித் தாமரை யல்ல தில்லார்,
மூளும்பெருகன்பெனு மூர்த்தியார் மூர்த்தி யார்தாம்.  9

     975. (இ-ள்.) வெளிப்படை. அந்த அழகிய நகரத்தில் வாழ்கின்ற
வணிகர் குலத்தில் மிக்க நிறைவுபட்ட பழமையாகிய யாவராலும் உயர்வாக
எடுத்துச் சொல்லத்தக்க சிறப்புடைய குடியுள்ளார் செய்ததவத்தின் பயனாக
அவதரித்தார்; (அவர் யாரென்னில்) எல்லாப்பற்றுக்களையும் முற்றும்
அறுத்து, விடையினை