பக்கம் எண் :


1308 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

தொருங் குணர்ந்திடு முருகன் யாவருந், தொழுதகு மிறைவனூற் றொடர்பு
நாடியே, விழுமிய கண்ணுதல் விமலன் றாண்மலர், வழிபடல் புரிந்தனன்
மனங்கொள் காதலால்" (மீட்சிப்படலம் - 33) முதலிய கந்தபுராண
வரலாறுகளை இங்குக் கருதுக.

     முகில் சூழ்..........புகலூர் - முருகனார் அவதரித்த திருப்புகலூர்
என்ற நகரச் சிறப்பு. இதனைப் பின்னர் விரித்துக்கூறுவர். அன்றியும்
முகில்சூழ் நறுஞ்சோலை அவர் மலர்ச் சோலைகளிற்சென்று கோட்டுப்பூ
முதலியவற்றை எடுத்துத் தொடுத்துச் சாத்திப் பணிசெய்த திருத்தொண்டினைக்
குறிப்பித்ததும் காண்க. மேல் வரும் பாட்டிலும் இவ்வாறே குறிப்பித்தலும்
கண்டுகொள்க. பிறவி வெப்பத்துக்கு அஞ்சிய உயிர்கள் புகலடையும்
சிறப்புப்பற்றிப் புகலூர் எனப்படும் என்பர். அதனைக் குறிப்பாலுணர்த்துதற்கு
இவ்வாறு அந்நகரத்தின் தண்மைச் சிறப்பினால் தொடங்கிக் காட்டினார்.
மேல்வரும் புராண இறுதியிற் றலவிசேடத்திற் கண்ட சிறப்புக்களும் பார்க்க.

     திறம் - தொண்டின் வரலாறும் பண்பும். "மெய்ம்மைத் தொண்டின்
றிறம்
போற்றி" (1030) என வரும்புராணத்திறுதியில் முடித்துக் காட்டியதும்
காண்க.


     சரிதச்சுருக்கம் :- அன்புடைய நன்மாந்தர்களாற் பாராட்டப்பெற்ற
பண்டைப் புகழுடையது பாண்டி நாடு. அதனிற்பாய்ந்து வளம்படுத்திக்
கடல் புகுவது தாமிரபர்ணியாறு. அது பாய்வதனால் அக்கடலும் முத்துக்கள்
தருவதாயிற்று. சந்தனச் சோலை சூழ்ந்த தென்பொதியமாமலை
அந்நாட்டுக்குத் தென்றலைத் தந்து குளிர்ச்சி செய்யும். அதனோடு,
உலகினையளந்த தெய்வத்தீந்தமிழும் அன்புதந்து தளிர்க்கும்.

     செல்வத்தாலும் கல்வியாலும் நீடிய இந்நாட்டின் சிறந்த தலைநகரம்
மதுரா புரி என்பதாகும். அத்திருநகரில் செய்யுள் மிக்கேறும் முத்தமிழ்ச்
சங்கங்கள் நிலவின. அந்நகரம் குடிச்சிறப்பும் செல்வச்சிறப்பும் மிக்கு
விளங்குவது. அத்திரு நகரிலே தமிழ் நூலின் விளங்கும் செம்பொருள்தரும்
ஆலவாயடிகளும் சங்கம் இருந்ததனால் எல்லாவுலகங்களினும் அதுவே மிக்க
புகழ் பூண்டதன்றோ?

     அந்தப்பதியில், வணிகர் குலத்தில், சீரால் மிகுந்த பழங்குடியில்,
அக்குடி செய்தவப் பயனாக மூர்த்தியார் என்பவர் அவதரித்தார். அவர்
சிவபெருமான்றிருவடிகளையே மெய்ப்பற்றாகப் பற்றினவர். அத்திருவடிகளே
தமக்குத் துணையும் தாம் அடையும் பொருளும் ஆவன எனக்
கொண்டொழுகி வந்தனர். அவர் திருவாலவாயில் சொக்கலிங்கப் பெருமான்
றிருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குச் சந்தனக் காப்பு அரைத்துக்
கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்துவந்தனர்.

     அந்நாளில் வடுகக்கருநாட அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படை
வலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆகையால் பெரும்படை கொண்டு
வந்து பாண்டியனோடு போர்செய்து வெற்றிகொண்டு பாண்டி நாட்டின்
அரசாட்சியைக் கவர்ந்து மதுராபுரியின் காவல்பூண்டான். அவன்
நன்னெறியாகிய திருநீற்றுச் சார்புடைய சிவநெறியிற் செல்லாது தீ நெறியாகிய
சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத் திறம்
செல்லவொட்டாது வன்மை செய்வானாயினான். அவ்வாறு
சமணத்திற்குட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல தீயமிறைகள் செய்தான்.
அவர் அவற்றால் ஒன்றும் தடைபடாது தமது நியதியான திருப்பணியைச்
செய்து வருவாராயினர். தந்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்
றொழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்க வல்லவராவர்?

அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவர் சந்தனக்கட்டை
தேடிக்கொள்ளும் துறைகளையும்