எங்கு மோதிய திருப்பதி
கத்திசை யெடுத்த, பொங்கு பேரொலி"
(திருஞான - புரா - 679), "திருப்பதிகச் செழுந்தமிழின் றிறம்போற்றி"
(திருநா - புரா - 244) முதலியவற்றால் அந்நாள்களில் திருக்கூட்டத்திலிருந்த
அடியார்கள் திருப்பதிகங்களைப் பயின்று ஓதினர் என்பதறிகின்றோம்.
திருப்பதிகங்களை
மக்கள் பயின்றதனால் அதுகேட்டுப் பூவைகளும்
பயின்றன என்க. மக்கள் அப்புட்களைப் பதிகங்களிற் பயிற்றலுமுண்டு.
இச்சிறப்புப் பற்றியே "பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்" என்று
வகைநூல் முருகனாரை அறிவித்தது. அத்துணைகொண்டு, ஆசிரியரும்
அக்கருத்தேபற்றி இப்பாட்டிலும், மேல்வரும் பாட்டிலும், 1026 லும்
திருப்பதிகங்களைச் சிறப்பித்தனர். சாரிகை (பூவை) பாடுவன என்பதுபற்றி
"பறக்குமெங் கிள்ளைகாள்! பாடுமெம் பூவைகாள்!" (கொல்லி - திருவாரூர்
- 2 ஆளுடைய நம்பிகள்), "பூவை நல்லாய்!...........விகிர்தனுக்கென்
மெய்ப்பயலை விளம்பாயே" (ஆளுடையபிள்ளையார் - பழந்தக்கரா -
தோணிபுரம் - 9) முதலிய திருவாக்குக்கள் காண்க. பண்ணின்
கிளவி
மணிவாய் - "பொற்பமைந்த வாயலகிற்
பூவை" என்ற தேவாரக் கருத்துக்
காண்க.
1020.
|
வண்டு
பாடப் புனற்றடத்து மலர்ந்து கண்ணீ ரரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த குளிர்பங் கயங்க ளேயல்ல;
அண்டர்பெருமான் றிருப்பாட்டி னமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந் துளித்த கண்ணீ ரரும்புமால்.
4 |
(இ-ள்.)வண்டுபாட........கண்ணீர் அரும்புவன - வண்டுகள்பாட,
அதனாலே, சீர்பொருந்திய தடாகத்துள் மலர்ந்து கள் (தேன்) நீர் அரும்புவன;
கொண்ட.......பங்கயங்களேயல்ல - நிறைந்து
கொண்ட வாசனையுடைய
அரும்புகள் விரிந்தலர்ந்த குளிர்ச்சி பொருந்திய தாமரைமலர்களேயல்ல;
அண்டர்.........அரும்பும் தேவர்தலைவராகிய சிவபெருமானைத்துதிக்கும்
திருப்பாட்டுக்களாகிய தேவாரங்களின் அமுதம் பெருக அதனைச்
செவிவாயாக உண்ணும் தொண்டர்களது முகமாகிய தாமரைகளும்,
துளிகளாக நிரந்துவிழும் கண்ணீர் அரும்புவனவாம். (ஆல் - அசை).
(வி-ரை.)
வண்டுபாட (சோலையின்) மலர்கள் மலர்வதனை
மேற்பாட்டில் கூறினார். நிலப்பூ முதலியன மலர்வதுபோலவே நீர்ப்
பூக்களாகிய தாமரை முதலியனவும் மலரும் என்பது தானேபோதரும்.
அவ்வாறு தாமரைப்பூக்கள் மலர்தலால் கள் (தேன்) நீர் அரும்புதலை
முகமலர்ந்தா லுளதாகும் கண்ணீர் அரும்பும் மெய்ப்பாடுபோல உருவகம்
செய்து சொற்சிலேடையாற் கூறினார்.
முகமலர்ச்சி
அகமலர்ச்சி காட்டும். அகமலரக் கண்ணீர் ததும்பும்.
இவை மெய்ப்பாடு.
பாடமலர்ந்து
- பாடுதலால் மலர்ந்து. அலரும் பருவத்து
மலர்முகைகளின் பக்கம் அவை மலரும் அப்பருவம் தெரிந்து அலர்த்தித்
தேன் உண்ணும் ஆசையால் வண்டுகள் பாடி ஊதிப் பறக்கும், அலரும்
பருவமாதலின் மலர்களும் முகை அவிழ்ந்து அலரும். அலர்ந்த புதுப்பூ
தேன் துளிக்கும். இதனைப், பாடுதல் கேட்டு முகமலர்வனவாகவும், அந்த
ஆனந்தத்தினால் கண்ணீர் சொரிவனவாகவும் உருவகந் தோன்றக் கூறினர்.
பங்கயங்கள் முகத்துக் கொப்பாகக் கூறப்படுதலின் அவை அலர்தல்
பாட்டுக்கு முகமலர்தல்போலாம் என்பதாம். வதனபங்கயம்
என்றதும்
காண்க. "வண்டுபாட.......மலர்நீல மொட்டலரும் கேதாரமே" (செவ்வழி - 1)
என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமும் பிறவும் காண்க.
|