அலவன்
துயில் உணரக் - கயல்கள் உகளும் என்று கூட்டுக.
மன்னிவாழும்
தன்மை - நிலைபெற்று வாழ்கின்ற தகைமை.
"இவ்வூரில, வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டு கென்றார்" (210)
என்றது காண்க. முருகனாரும் அவர்தம் முந்தையோர்களும் திருப்புகலூரில்
நிலையான குடிகளாக வாழ்ந்து வந்தனரென்பதும் அவர்களது வாழ்வு
அவ்வூரின் பெருமைக்குத் தகுதியாகப் பொருந்தியதென்பதும் கருதப்படும்.
ஆளான
மெய்ம்மைத் தவத்தாற் - சாத்துவார் என்க. தவங்கள்
பலவகைப்படும்; அவற்றுள்ளே சிவனுக்காளாகும் தவமே மெய்த்
தவமெனப்படும்; அவ்வாறு மெய்ம்மைத்தவ மியற்றிய காரணத்தாற்
சாத்துவாராகி என்க. தமிழினையும், ஆளுறும் தமிழ் என்றும் ஆளுறாத்
தமிழ் என்றும் இருவகைப்படுத்தி, ஆளுறாத் தமிழ் உயிர்களை
மேலுயர்த்தாமையேயன்றிக் கேடும் உறுவித்தலால் அழிவாக்கத் தக்கதென்று
அப்பர் சுவாமிகள் அருளியதனை இங்கு நினைவு கூர்க. "வாயிருந்தமி
ழேபடித் தாளுறா, வாயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்" (திருக்குறுந்தொகை -
பழையாறை வடதளி - 9) என்ற தேவாரங் காண்க. திருப்பள்ளித் தாமஞ்
சாத்திச் சரியை கிரியையாதிகள் செய்வதற்கும் முன்னாளில் தவஞ்
செய்திருத்தல் வேண்டுமென்பதாம். "முன்பு செய் தவத்தி னீட்டம்" (751)
என்றதும், "அறத்துறைக ளவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்......
சென்றாற் சைவத் திறத்தடைவர்" (8 - 11) என்ற சிவஞான சித்தியாரும்
காண்க. "எத்தவத் தோர்க்கு மிலக்காய்நின்ற வெம்பெருமான்" (நட்டபாடை -
புகலியும் திருவீழிமிழலையும் - 10) என்ற ஆளுடையபிள்ளையார்
திருவாக்கின்படி எல்லாவகைத் தவத்துக்கும் சிவனே இலக்காய் நிற்பவன்.
ஆயின் அவை எல்லாம் முற்றிக் காலாந்தரத்திற் பயன் றருவன.
சிவனுக்காளாய்ச் செய்யப்படும் தவமே மெய்ம்மைத் தவமாய் இம்மையிலே
பயன்தந்து திருவடி சேர்க்கும் என்பது.
திருப்பள்ளித்
தாமம் - 559-ல் உரைத்தவை பார்க்க. 6
1023. (வி-ரை.)
புலரும்பொழுதின் - புலர்தல் - இரவு விடிதல்.
பொழுதின் - பொழுதினுக்கு.
பொழுதுமுன் என்பது பாடமாயின் பொழுதில்
இரவி எழுவதன் முன் என்க. முன்பொழுது என
மாற்றி வைகறை
என்பாருமுண்டு.
புனித
நீரின் மூழ்கி - "வைகறை யுணர்ந்து போந்து புனன்மூழ்கி"
(559) என்றவிடத் துரைத்தவை பார்க்க. "புலரி யெழுந்து புனன்மூழ்கிப்
புனித வெண்ணீற்றினு முழுகி" என்ற கழறிற்றிவார் புராண (8) முங் காண்க.
போய் - நந்தனவனத்துக்கும், பூமரம் - பூச்செடி - பூக்கொடிகள்
இருக்கும் புறவுகளுக்கும் போய். மலரும் செவ்வி - மலர்கின்ற பக்குவத்தில்.
முடிமேல் - செவ்வி (யில்) - முருகுயிர்க்க என்க.
நகைக்கும்
பதத்தில் - இது பறிக்கும்போதுள்ள பூவின் பதம்
குறித்தது. நகைத்தல் - வாய்திறத்தல். பதம்
- பக்குவம். இனி, நகைக்கும் -
சிவபெருமான் றிருமேனியில் அணியப்படும் பேறு தமக்குக்
கிடைத்தமைபற்றி மலர்கள் மகிழ்ச்சிக்குறியாக நகைக்கும் என்ற
தற்குறிப்பேற்றக் குறிப்பும், மூடியிருந்த இதழ்கள் வாய்விட்டு அலர்தல்
வாய்திறந்து சிரித்தல்போலும் என்ற உவமக்குறிப்பும் காண்க.
வெவ்வேறு
திருப்பூங் கூடைகளில் என்றது மலர்களை
இனம்பற்றியும் வன்மை மென்மை முதலிய தன்மைபற்றியும் பறிக்கும்
போழுதே வேறுவேறு
|