1026.
|
ஆங்கப்
பணிக ளானவற்றுக் கமைத்த காலங்
களிலமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ் சாத்தி வாய்ந்த
வர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்; பரமர் பதிகப் பற்றான வோங்கிச் சிறந்த
வஞ்செழுத்து மோவா நாவி
னுணர்வினார். 10
|
1022. (இ-ள்.)
வெளிப்படை. (தாமரை) இலைகளின்மேல் துயின்ற
நண்டுகள் உறக்கத்தினின்றும் எழ, அலரும் செங்கமலங்கள் பூக்கும் வயலிற்
கயல்மீன்கள் மடைகளின்மேலே பாய்தற்கிடமாகிய திருப்புகலூரில்
நிலைபெற்று வாழும் தன்மையுடையோராய், விடையின் மேல் எழுந்தருளி
வரும் சிவபெருமானுக்கு ஆளாயின மெய்த்தவத்தினாலே, அவரது
கற்றையாகிய சடையின்மேல் அணிவதற்குத் திருப்பள்ளித்தாமம் பறித்துச்
சாத்துவாராகி, 6
1023.
(இ-ள்.) வெளிப்படை. விடிவதனுக்கு முன் எழுந்து
தூய நீரில்
முழுகிப் போய்த், தமது பெருமானுடைய திருமுடியின் மேலே கங்கையும்
மதியும் உலவுகின்ற பக்கத்தில் அலர்கின்ற பருவத்தில் வாசனை
வீசத்தக்கதாக மலரக் கூடிய பக்குவம் நோக்கிப் பறித்த, அளவில்லாத
பூக்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளிற் சேர்ப்பாராய், 7
1024.
(இ-ள்.) வெளிப்படை. கோட்டுப்பூக்களும், நிலப்பூக்களும்,
குளிர்ந்த நீர்ப்பூக்களும், கொழுத்த கொடிகளிற் பூக்கும் இதழ்களையுடைய
பூக்களும் ஆகும் (இந்நான்கு) மலர்களும், வேதங்கள் வெளிப்படும்
திருவாயிற் காட்டும் சிறுமுறுவலின் ஒளியலரும்படி மேருமலையிற்
பாம்பாகிய நாணினைப் பூட்டிய ஒருவராகிய சிவபெருமானது திருமுடியில்
புனையக்கூடிய மலர்களாகத் தெரிந்தெடுத்து, 8
1025.
(இ-ள்.) வெளிப்படை. நுடங்கிய நூலணிந்த மார்பினராகிய
முருகனார் கொண்டுவந்து தனியிடத்தில் அமர்ந்து, அவற்றைக் கோக்கின்ற
கோவைகளும், சுருக்கும் இண்டைச்சுருக்கும் தாமங்களோடு, இணைக்கின்ற
வாசனை பொருந்திய மாலைகளும், தண்டுபோலக் கட்டும் கண்ணிகளும்
தாளிலே பிணைக்கும் பிணையல் வகைகளும் நுண்ணிய
மகரந்தங்களை
வீசுகின்ற தொடையல் களும்,
ஆக அமைத்து, 9
1026.
(இ-ள்.) வெளிப்படை. ஆங்கு அந்தப் பூத்திருப்பணிகளை
அவற்றுக்கு விதிக்கப்பட்ட காலங்களில் அமைத்துச், சுமந்துகொண்டு
சென்று, அன்போடு சாத்திப், பொருந்திய அருச்சனைகளை விதிப்படி
புரிந்து அன்பு செய்தார்; சிவபெருமானது திருப்பதிகப் பற்றாகிய உயர்ந்து
சிறந்த திருவைந்தெழுத்தையும் விடாமல் நாவிற்கொண்டவுணர்வை
யுடையவராயினார். 10
இவ்வைந்து
பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
1022.
(வி-ரை.) துயில் உணர்தல்
- விழித்தெழுதல். துயிலும்
நிலையினின்றும் நீங்கி, உணரும் நிலையில் (சாக்கிரம் என்ப) வருதல். வாளா
உணர என்று கூறுவதும் மரபு. அலவன் - நண்டு.
அடை - இலை; இங்குத்
தாமரையிலையைக் குறித்தது. தடங்களில் தாமரையோடு ஏனைப் பூக்களும்
இருப்பினும் பெரும்பான்மையும் சிறப்பும் பற்றி அவற்றைத் தாமரைத்தடம்
என்றே கூறுவர். முன்னரும் "வாச முகையவிழ்ந்த குளிர்பங் கயங்க ளேயல்ல"
(1020) என்று தாமரையைக் குறித்தது காண்க. "துறைமலி யாம்பல்பல் லாயிரத்
துத்தமி யேயெழினும், நறைமலி தாமரை தன்னதன்றோசொல்லு நற்கயமே"
(11-ம் திருமுறை - திருவாரூர் - மும் - கோவை - 24) என்ற கழறிற்றறிவார்
திருவாக்குக் காண்க.
|