பாதங்களின் திருத்தொழில்களுமாம்
என்பது மேல்வரும் ஏழு
திருப்பாட்டுக்களிற் போந்த பொருளாவதும் காண்க. மேற்சொன்ன மறை
என்பது வேதங்களையும், இங்குக்கூறிய ஞானம் என்றது சிவாகமங்களையும்
குறித்தது. தலை நிற்றல் - ஒழுக்கத்திற் சிறத்தல். ஊனம்
- இடையறாது
அன்பு செலுத்துதற்கு வரும் தடைகள். அன்பால் மனம் உருகுதலாவது
-
பெரியவற்றுளெல்லாம் பெரியவனாகிய இறைவன் உயிர்களின் சிறுமை
எண்ணாது எஞ்ஞான்றும் செய்துவரும் பேரருளின் பெருமையினை
எண்ணியெண்ணி அன்பு செய்தலால் உள்ளம் நெகிழ்தல். "அத்தாவுன்
அடியேனை அன்பால் ஆர்த்தாய்....பிழைத்தனக ளெத்தனையும்
பொறுத்தாயன்றே.....எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே"
(திருத்தாண்டகம்), "நாய் சிவிகை யேற்றுவித்த அம்மை" (திருவாசகம்);
"நாயனைய வென்னைப் பொருட்படுத்தி நன்கருளித், தாயனைய னாயருளும்
தம்பிரான்" (கோயினான் மணிமாலை - 11-ம் திருமுறை) முதலிய
திருவாக்குக்கள் காண்க.
வேதங்களிற்
றலைசிறந்ததனால் சிறப்பாகிய சிவாமங்களிற் றேர்ந்தார்;
அதனால் ஞானவழி நின்றார்; அதன் பயனாகச் சிவன்சேவடிகளில்
அன்பினால் உருகி, அவரது நாமம் பயின்றார்;
அதனாற் சிவபூசையே
உறுதிப்பொருள் என்றறிந்து சிவனை முப்போதும் மலர்கொண்டு
அலங்கரித்துப் பூசித்து அழகு பார்த்துக் களித்தார்; திருவடி ஞானத்திற்
சிறக்கவே அடி அணைந்த அடியார் தொண்டினிற் சிறந்தொழுகினார்;
அதனாற் சிவனடிப் பேறுபெற்றனர் என்று இம்முறையே, இப்பாட்டிற்
சொல்லிய இத்தன்மைகளே மேல்வரும் சரித நிகழ்ச்சிகளாய் விளைந்தன
என்பதும் கண்டுகொள்க. "வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ்
சென்றாற் சைவத், திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின்
ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" (8 - 11) என்ற சிவஞான சித்தியார்
திருவாக்கு இங்குக் கருதத்தக்கது.
முருகனார்
- வந்தார்; - (அவர் ) முதல்வர்; - தலைநின்றார்; -
மனத்தார் எனமுடித்துக்கொள்க. அவர் என்ற சொல் வருவித்து முதல்வர்
முதலிய மூன்று பெயர்ப் பயனிலைகளுடன் கூட்டிமுடிக்க.
முருகனார்
என்ற பெயரின் பொருள்பற்றி மேலுரைக்கப்பட்டது. 5
1022.
|
அடைமே
லலவன் றுயிலுணர வலர்செங் கமல
வயற்கயல்கண்
மடைமே லுகளுந் திருப்புகலூர் மன்னி வாழுந்
தன்மையராய்,
விடைமேல் வருவார்க்காளான மெய்ம்மைத்தவத்தா,
லவர்கற்றைச்
சடைமே லணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச்
சாத்துவார், 6
|
|
|
1023.
|
புலரும்
பொழுதின் முன்னெழுந்து, புனித நீரின் மூழ்கிப்,
போய்,
மலருஞ் செவ்வித் தம்பெருமான் முடிமேல், வானீ
ராறுமதி
யுலவு மருங்கு முருகுயிர்க்க, நகைக்கும் பதத்தி
னுடன்பறித்த
வலகின் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை
களிலமைப்பார், 7 |
|
|
1024.
|
கோட்டு
மலரு, நிலமலருங், குளிர்நீர் மலருங்,
கொழுங்கொடியின்
றோட்டு மலரு மாமலருஞ், சுருதி மலருந் திருவாயிற்
காட்டு முறுவ னிலவலரக் கனக வரையிற் பன்னகநாண்
பூட்டு மொருவர் திருமுடிமேற் புனைய லாகு
மலர்தெரிந்து, 8 |
|
|
1025.
|
கொண்டு
வந்து, தனியிடத்தி லிருந்து, கோக்குங்
கோவைகளும்
இண்டைச் சுருக்குந் தாமமுட னிணைக்கும் வாச
மாலைகளும்
தண்டிற் கட்டுங் கண்ணிகளுந் தாளிற் பிணைக்கும்
பிணையல்களும்
நுண்டாதிறைக்குந்தொடையல்களுஞ்சமைத்து நுடங்குநூன்
மார்பர், 9
|
|