1021.
|
ஆன
பெருமை வளஞ்சிறந்த வந்தண் புகலூ ரதுதன்னின்
மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர்,
ஞான வரம்பின் றலைநின்றார், நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பா லுருகு மனத்தார் முருகனார். 5 |
(இ-ள்.)
வெளிப்படை.
ஆனபெருமையும் வளனும் சிறந்து விளங்கிய
அழகிய குளிர்ச்சியுடைய புகலூர் என்னும் அந்தத்தலத்தில் பெருமையுடைய
வேதியர் குலத்தில் அவதரித்தார்; முந்தையாகிய வேத முதல்வர்; ஞானத்தின்
முடிந்த எல்லையிற் சிறந்து நின்றார்; அரவை அணியாகக் கொண்ட
சிவபெருமானது திருவடிகளின்கீழ்க் குற்றமில்லாது நிறையும் அன்பினால்
உருகும் மனத்தினை யுடையவர் முருகனார் எனப்படுவோர்.
(வி-ரை.)ஆன - மேற்கூறியபடி உயிரினை உயர்த்துதற்கான;
உலகநிலைக்கான ஏனையபெருமைகள் ஆகாதன என்பதாம். ஆனபெருமை
வளம் - மேல் 1018 - 1019 - 1020 திருப்பாட்டுக்களிற் கூறப்பட்ட சிவத்துவ
விளக்கத்துக்குரிய பெருமையும், அது விளங்குதற்குரிய இடமாகிய
உலகவளங்களும்.
அந்தண்
புகலூர் - அழகு - சோலைகள், தடங்கள், அவற்றிற்பூக்கும்
மலர்கள் என்றிவற்றாலாகுவது. தண்மை - பிறவி வெப்பத்துக்கு அஞ்சிப்
புகல் அடைந்தோரது வெப்பத்தைமாற்றிக் குளிர்ச்சிசெய்யுந் தன்மை.
"வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே
னையா பராபரமே" என்றபடி இங்கு உலகத் துயிர்கள் சரண்புக அவர்களுக்கு
அபயங்கொடுத்துக் காத்தல் குறித்தது.
ஆனபெருமை
- ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள்,
ஆளுடைய நம்பிகள் என்ற மூவரும் ஈரிரண்டு முறை வந்து தரிசித்தனர்.
பிள்ளையாரும் அரசுகளும் திருநீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய பல
அடியார் திருக்கூட்டத்துடன் முருகநாயனாரது திருமடத்திற் பலகாலம் தங்கித்
"திருத்தொண்டின் நிலையுணர்ந்து" (திருநா - புரா - 243), "திருத்தொண்டர்
பெருமையினை விரித்துரைத்தங், கொருப்படுசிந் தையினார்கள் உடனுறைவின்
பயன்பெற்றார்" (மேற்படி 244). ஆளுடைய அரசுகள் பொய்ப்பாசம்
போக்குவார் இங்குத்தங்கி "நையுமனப் பரிவோடு நாடோறுந் திருமுன்றிற்,
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன், வைகுநா ளெண்ணிறந்த
வண்டமிழ் மாலைகள் மொழிந்து" (திருநா - புரா - 413), "புகலூர
னென்னையினிச் சேவடிக்கீ ழித்திடுமென் றெழுகின்ற, முன்னுணர்வின்
முயற்சியினாற் றிருவிருத்தம் பல மொழிந்து" (மேற்படி - 426), "நண்ணரிய
சிவானந்த ஞானவடிவே யாகி, அண்ணலார் சேவடிக்கீழ்" அமர்ந்திருக்கப்
பெற்றனர் (மேற்படி - 427). உலகத்தாருக்கு அடிமைத்திறத்தின்
பெருமையைக் காட்டியருளும் வகையாலே பங்குனி உத்திரத் திருவிழாவில்
அடியார்களை ஊட்டுதற்குப் பொன் வேண்டிய ஆளுடைய நம்பிகள் செங்கல்
செழும்பொன்னாகப்பெற்றனர். இவ்வரலாறுகள் இத்தலத்தின் பெருமையை
விளக்குவனவாய் இங்குக் கருதத்தக்கன.
மறையோர்
குலமரபின் வந்தார் என்றதனால் அவர் அவதரித்தது
வேதியர் குலமென்பதும், மறைமுதல்வர் என்றதனால்
அக்குலத்தில்
அவதரித்த பெருமை மட்டினமையாது, அக்குலத்துக்கேற்ப வேதியரொழுக்கத்தாலும், சிறந்து
வேத வாய்மையின் முதன்மைபெற்று
விளங்கினார் என்பதும் உணர்த்தப்பட்டமையாற் கூறியது கூறலன்மையுணர்க.
ஞான
வரம்பின் தலைநின்றார் - வேதம் வல்லவராய்
விளங்கியதோடு சிவாகம சீலராகிச் சிவாகமங்களிற் சொல்லப்பட்ட சிவஞானங்
கைவரப்பெற்ற முதன்மையுடையவராய் அத்துறைகளில் விதிப்படி ஒழுகி
நின்றனர் என்பதாம். இங்கு நாயனார் செய்த தொண்டு சரியை, கிரியை,
யோகம், ஞானம் என்ற நான்கு
|