வருமுறை
- முன்சொன்ன அம்முறையாகிய நியதியிலே. பெரும்பகல்
- உச்சி வேளை வரையுள்ள சிறுபொழுது என்ற காலப்பகுதி, எல்லி-
மாலை. "அல்லும் பகலும்" என்றது வகை நூல். "அந்தியு நண்பகலு மஞ்சு
பதஞ்சொல்லி" (ஆரூர் - குறிஞ்சி - 1) என்ற நம்பிகள் தேவாரங் காண்க.
வழுவாமே - அன்பாலும், சொல்லாலும், செயலாலும்
தவிர்தலிலராகி.
திருமலர்....அனையவர்
- திருமலர் - தாமரை - "பூவினுக்
கருங்கலம் பொங்கு தாமரை" "பூவெனப் படுவது பொறிவாழ் பூவே".
பொகுட்டு - கொட்டை. மலரில் இருந்தவன்
- பிரமன். செங்கமலப்
பொய்கையுள் மேவியிருத்தலாலும், வேத மோதுதலாலும் பிரமனைப்
போன்றவர் என்றார். வினைபற்றி யெழுந்த உவமம்.
சிலநாள்
- இந்தக் கடுந்தவத்தை அவர் நீண்டகாலம் செய்யவிட்டுத்
தாழ்க்காதபடி இறையவர் சில நாட்களிலே மகிழ்ந்து அருள் புரிந்தனர்
என்பதாம். ஒருமையுய்த்திட - மனவொருமைப்
பாட்டுடன் செலுத்த.
வழுவாமே - உய்த்திட என்று கூட்டுக. உய்த்தல்
- செலுத்துதல்.
உமை
இடம் மகிழ்ந்தவர் - இடம் - இடப்பாகம். உமை -
சிவனருள்.
உவந்தார்
- மகிழ்ந்து ஏற்று அருள் புரிந்தனர். "சடையார்
கொள்ளும் அன்பு" (1036) என்றது காண்க. 7
1038.
|
காத லன்பர்த
மருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
யாதி நாயக ரமர்ந்தருள் செய்யமற் றவர்தாந்
தீதி லாநிலைச் சிவபுரி யெல்லையிற் சேர்ந்தார்.
8 |
(இ-ள்.)
வெளிப்படை. விருப்பமிக்க அன்பருடைய அரியதவத்தின்
பெருமையினையும், அந்தத்தவத்துடன் கலந்த வேதமந்திரத்தின் நியதியின்
அளவு கடந்த மிகுதியினையும் ஏற்றுக்கொண்டு ஆதிநாயகராகிய
சிவபெருமான் விரும்பி அருள்செய்யவே, பசுபதியார் தீதிலாநிலைச்
சிவபுரியினது எல்லையிற் சேர்ந்தனர்.
(வி-ரை.)
காதல் அன்பர் "தூயஅன்பொடு" - "நேய
நெஞ்சினர்"
(1034) என்றது பார்க்க.
தவம்
- 1036ல் குறித்த செயல் தவமெனப்பட்டது. தவம்
- தபிக்கச்
செய்தல். இங்கு உடலை வாட்டுதல் என்ற பொருளில் வந்தது. " மாரி
நாளிலும் வார்பனி நாளிலும், நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்....தளர்வுறும்
யாக்கையைத் தளர்வித் தாங்கவர், தம்மைத் தாமே சாலவு மொறுப்பர்..."
(திருவிடை - மும் - கோவை - 19) என்ற பட்டினத்தடிகள் திருவாக்கும்
காண்க.
நாயகர் - பெருமையும்
- மிகுதியும் விரும்பி - அமர்ந்து அருள்செய்ய,
அவர் - சிவபுரி எல்லையிற் சேர்ந்தார் என்று முடிக்க. அருள்
செய்ய
என்ற வினையெச்சம் சேர்ந்தார் என்ற பிறவினைமுதல்
வினை கொண்டது.
அமர்தல்
- விரும்பி வீற்றிருத்தல். இங்குத் தவத்தினுள்ளும், நியதியின்
மிகுதியினுள்ளும் விரும்பியிருத்தல் குறித்தது. "ஆளவுடையார் தம்முடைய
வன்பரன் பின் பாலுளதாய், மூள வமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று
முற்றச்சூழ், கோள மதனி லுண்ணிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்"
(சண்டீசர்புரா - 36) என்றது காண்க. இறைவன் மந்திரத்தினுள்ளும்
அன்பினுள்ளும் விளங்குகின்றான் என்பதுண்மை.
|