|
(சிறுத்
- புரா - 35) என்ற மாபுராணமும் காண்க. "அயில்கொள்
முக்குடுமிப்படை" (1040) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க.
பேரிகையே
முதலாய முகக்கருவி பிற - இவை தோலால்
மூடப்பட்டு முழக்கப்படுவன. முழக்கப்படும் இடம் முகம் எனப்படும்.
இருமுகம், ஐம்முகம் உள்ளனவும் இருத்தலால் முகக்கருவி எனப்
பொதுப்படக் கூறினார். சிறப்புப்பற்றி பேரிகையை
எடுத்துக்கூறி
முதலாய என்றார். "பேரியோடும்" (1003) என்றதும் காண்க. (திருவாரூரில்
தியாகேசர் சந்நிதியில் முழுக்கப்படுவது முசுகுந்தர் தேவருலகத்திலிருந்து
தியாகேசருடன் கொணர்ந்த ஐம்முகமுள்ள பேரி) இவை தோற்கருவி
எனப்படும். 13
1054.
(வி-ரை.) போர்வைத்தோல் - முகத்தை
இறுக மூட உதவும்
தோல். விசிவார் - போர்வைத்தோலை அக்கருவியில்
இறுகப்பிணிக்க
உதவும் வார். விசித்தல் - இறுகக் கட்டுதல்.
வார் -
வார்ந்து - கிழித்து -
எடுக்கப்படுவது.
இசைபுகலும்
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் என்க.
இசைபுகலுதலாவது மிடற்றுப் பாடல்போலச் சொல்லமைதியினை
நேராகப் பேசும் வீணையும் யாழும். இவை வெவ்வேறு வகைப்பட்ட
நரம்பு இசைக்கருவிகள். யாழ் பலவகைப்படும்.
நிலைவகையிற்
சேர்வுற்ற தந்திரி- நீடு நிலை பெறும்படியும்,
ஒத்து இயலும்படியும் உள்ள நரம்புகள். தந்திரி
- இசைக்கருவியின்
நரம்புகள். இவை இறந்த பிராணிகளின் நரம்புகளை எடுத்துப்
பண்படுத்தியும் முறுக்கியும் உண்டாக்கப்படுவன. தந்திரி
இந்நாளில்
உலோகங்களின் கம்பிகளாலும் ஆக்கப்படுகின்றன.
அர்ச்சனைகட்குக்
கோரோசனையும் ஆர்வத்துடன்
அளித்துள்ளார் என்க. கோரோசனை- பசுவின் வயிற்றினின்றும்
எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள ஒரு வாசனைப் பண்டம். இது இறைவனது
திருமெய்ப்பூச்சுச் சந்தனக் குழம்புக் கலவைக்கும் உதவுவது. அர்ச்சனை
-
சிவன் வழிபாடு.
இவை - தோலும், வாரும், தந்திரியும், கோரோசனையும்
என்ற
இவை. ஆர்வத்தினுடன்- சிவார்ச்சனைக் குதவுவதில் முற்பிறப்பின்
உணர்வினால் நந்தனாருள்ளத்துப் பெருகிய ஆசை குறித்தது.
இப்பொருள்கள் புலையர்க்குத் தமது குலத்தொழிலிற் கிடைப்பன. இவற்றை
விற்றுத் தமது வயிற்றுப் பிழைப்புக்கு உதவும் பொருள்களாகவே காணும்
ஏனையோர் போலாது, நந்தனார், தம் சிவத்திருத்தொண்டுக்குரிய
பொருள்களாகக் கண்டு அவ்வாறே பயன்படுத்தினர். தம்மைக்கண்டு
உருகிப் பசுக்கள், கறவாமே பொழிந்த, பாலினைக்கண்டு, "செம்மை நெறியே
யுறுமனத்திற் றிருமஞ் சனமாங் குறிப்பு உணர்ந்து", சிவார்ச்சனைக்குப்
பயன்படுத்திய சண்டீச நாயனார் சரித வரலாறு இங்குச் சிந்திக்கத்தக்கது.
திருநீலகண்ட நாயனார் தம் தொழிலில் வந்த மட்கலங்களின் ஊதியத்தைத்
தம் அமுதுக்கு ஆக்கித், தாம், தொழில் செய்து கொண்ட திருவோடுகளை
அடியார்களுக்கு அளித்த திறமும் இங்குக் கருதத்தக்கது. 14
1055.
|
இவ்வகையாற்
றந்தொழிலி னியன்றவெலா மெவ்விடத்துஞ்
செய்வனவுங், கோயில்களிற் றிருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலும்,
அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வா ரந்நாளில், 15 |
1056.
|
திருப்புன்கூர்ச்
சிவலோகன் சேவடிகண் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே
யருத்தியினா லொருப்பட்டங் காதனூர் தனினின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
16 |
|