மாசுடம்புவிட.....தாளமைந்தார்.
இது இச்சரிதச் சுருக்க விளக்கம்.
நடனங்கும்பிடத் தடையாயிருந்த உடலைப் போக்க ஒரு சிறிதும்
அச்சமின்றி உடற்பற்று முற்றும் விட்டுத் தீ முழ்கியதும், இறைவனது
திருநடங் கும்பிடும் பற்றையே பற்றி உடலை வெறுத்ததுவுமே இச்சரித
தத்துவமாகும். "சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்" என்ற
திருக்குறளினைக் கருதுக. இதுவே அம்பலவர் தாளடைதற்கு
ஏதுவாயினது என்பதாம். இனி மேல்வரும் சரிதமுடைய பெரியார்,
தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்தனர் என்றும், அது தமது
வினைப்பாசம் போதற் பொருட்டே கருதி முயன்றனர் என்றும் வரலாறு
கூறித்தோற்றுவாய் செய்தபடியாம்.
முயன்றவர்செய்
- என்பதும் பாடம். 37
சரிதச்
சுருக்கம் :- சோழநாட்டில்
கொள்ளிடக்கரையில்
செழித்த வயல்களாற் சூழப்பெற்ற பழைய வளம்பதி ஆதனூர்
என்பதாம்.
அதனைச்சுற்றிலும் செழித்த நெல் வயல்களும், பூஞ்சோலைகளும்,
தென்னை, மா, பலா, முதலிய மர வருக்கங்களடர்ந்த சோலைகளும்
உண்டு. அது, குடி நெருக்கமுடைய மாடங்களுடையது. அதன் பக்கத்தே
வழி வழியாய் உழவுத் தொழில் செய்வோராகிய பெரும் கிளைஞர்
நெருங்கிய பழஞ்சிற்றல் பல உடையதொரு புலைப்பாடி
உண்டு.
இப்புலைச்சேரியில் வாழ்வோர் நாய்களையும் கோழிகளையும் வளர்ப்பர்.
அவர்களது சிற்றில்களைச் சூழத் தென்னை மரங்களும் மருதமரங்களும்
வஞ்சிமரங்களும் உள்ளன. புலைமகளிர் நெற்குத்தும் தொழிலும் செய்வர்.
கள்ளுண்டு பறைகொட்டி அதற்கிசையப் பாடி யாடிக் காலங் கழித்தல்
இவர்கள் பொழுது போக்கும் வகைகளாம்.
இவ்வாறாகிய
புலையர் சேரியில் அவ்வூர்ப் புலைத்தொழிற்
றாயவுரிமையுடைய குடியில் சிவன் திருவடிக்கே முற்பிறப்பில் விளைவித்த
உணர்ச்சியுடன் நந்தனார் என்ற பெரியவர்
அவதரித்தார். உணர்வு வந்த
நாள் முதல் அவர், சிவபெருமானிடத்து வைத்த ஆசையினாலே,
செம்மைபுரி சிந்தையினராகி, மறந்தும் வேறு நினைவில்லாமல், தமது
குலப்பிறப்பின் வழிவந்த குல அறத்தின் வழி நின்றவராகியே
திருத்தொண்டின் வழியிலும் ஒழுகுவாராயினர். ஊரில் விடுகின்ற
பறைத்தொழிலுக்குரிய மானிய வருவாயினால் தாம் உணவுண்டு வாழ்வார்.
திருத்தொண்டினிற் றலைசிறந்து விளங்கினார். சிவபெருமானது
திருக்கோயில்களில் பேரிகை முதலிய முகக்கருவிகளுக்குப்
போர்வைத்தோல், விசிவார் முதலியன கொடுத்தும், வீணைக்கும் யாழுக்கும்
தந்திரிகள் கொடுத்தும் இவ்வாறு திருப்பணிசெய்து வந்தனர். கோயில்களில்
புறத்தே நின்று மிக்க அன்பினால் ஆடுதலும், பாடுதலும் புரிந்து
மகிழ்ந்தனர்.
திருப்புன்கூர்ச்
சிவலோகநாதரை மிகவும் நினைந்து
விருப்பத்தோடும் ஆதனூரினின்றும் புறப்பட்டு மிக்க காதலினால் அங்கு
அணைந்தனர். திருவாயிற்புறத்தே நின்று சிறந்த இசை பாடியும் ஆடியும்
சுவாமியை நேரே கும்பிடவேண்டுமென்று விரும்பினர். அவர் விரும்பியபடி
காட்சி கொடுத்தற்காகச் சிவலோகநாதர் தம்முன்பு இருக்கும் இடபதேவரை
விலகும்படி கட்டளையிட்டு நேர்காட்சி கொடுக்க, நந்தனார் கண்டு பணிந்து
போற்றிப் புறப்பட்டனர். திருக்கோயிலின்பின் ஒருநிலம் பள்ளமாயிருப்பது
கண்டு ஆசையுடன் அதனை ஆழமும் அகலமுமுள்ள குளமாகத்
தோண்டினர். திருக்கோயிலை வலங்கொண்டு பணிந்து புறத்தே நின்று
பாடியும் ஆடியும் பெருமானிடம் விடைபெற்றுத் தம்முடைய பதியிற்
சேர்ந்தனர். பின்னர்ப் பக்கத்தேயுள்ள பல தலங்களிலும் சென்று வணங்கித்
தமக்கியன்ற பணி செய்துவந்தனர்.
|