பிடித்தது
- செங்கை எனப் பயனிலை முன்வைத்தது அருட்செயலின்
விரைவு குறித்தது. 125
1203.
|
வானிறைந்த
புனன்மழைபோய் மலர்மழையா யிடமருங்கு
தேனிறைந்த மலரிதழித் திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும் வெளிநின்றார்; மெய்த்தொண்டர்
தானிறைந்த வன்புருகக் கைதொழுது தனிநின்றார்.
126 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆகாயத்தில் நிறைந்து பெய்த புனல் மழை
போய்ப் பூமழையாயிடப், பக்கத்தில், தேன்நிறைந்த கொன்றை மலர்மாலை
சூடிய திருமுடியினையுடைய சிவபெருமான் பொருகின்ற விடையின் மேலே
தம்முடன் நிறைந்த துணைவியாராகிய உமையம்மையாரோடு ஆகாயத்தில்
வெளிப்பட்டு நின்றனர்; மெய்த்தொண்டர் அன்பினால் உள்ளுருகக்
கைகூப்பித் தொழுது கொண்டு தனியே நின்றார்.
(வி-ரை.)
வான் நிறைந்த புனன் மழை - வானஞ் செறிந்து மழை
பெய்த நிலை 1199-ல் உரைக்கப்பட்டது.
புனன்
மழை போய் மலர் மழையாயிட - புனல் மழையே பூமழையாயிற்று என்னும்படி.
தொண்டருடைய
அந்நிலைகண்டருள்புரிவதற்காக அருளால் வந்த புனல் மழையாதலின்
விளக்கம் கண்டவுடன் போயிற்று என்பது போய் என்ற
தன் குறிப்பு.
மலர்மழை - திருவருளின் வெளிப்பாடு கண்டு தேவர்கள் பொழியும்
கற்பகப்பூமழை. "புனன்மழையோ மதுமழையோ பொழிவொழியா பூஞ்சோலை"
(1043), "மண்ணவர் கண்மழை பொழிந்தார்; வானவர் பூமழை பொழிந்தார்"
(130), "பொழியுந் தெய்வப் பூவின்மா மழையின் மீள மூழ்குவார் போன்று
தோன்ற" (398) முதலியவை காண்க.
நிறைந்த
துணைவி - அருளுருவாமகித் தம்முடனே எங்கும்
நிறைந்து விளங்கும் அம்மையார்.
வெளி
நின்றார்- அன்பர் காணும்படி வெளிப்பட்டு நின்றனர்.
செங்கை எழுந்து தோன்றுவதன்முன் மறைந்தருளி நின்றனர்; பின்னர்ச்
செங்கை மட்டில் எழுந்து பிடித்த அளவில் வெளிப்பட்டு நின்றனர் என்க.
வெளி நின்றார் - ஞான ஆகாய வெளியில் நின்றனர் என்றலுமாம்.
நிறைந்த
அன்பு உருக - உள்ளத்தில் நிறைந்து பெருகிய
அன்பினால் கருவி கரணங்களெல்லாம் உருக என்க.
தனிநின்றார்
- தனியாக என்றும், ஒப்புயர்வற்றவராய் என்றும்
உரைக்கநின்றது. ஆண்டவர் வெளிநின்றார் -
நாயனார் தனி நின்றார்
என்ற சுவையும் காண்க. முன்னரும் "தனிநின்றார்" (1200) என்றார். அது
வேறு. அது திரோதசத்தி உருவமாகிய அருண் மழையுள் நின்றநிலை. இது
வெளிப்பட்ட திருஅருட் பூ மழையினுள் நின்றநிலை. 126
1204. |
முன்னவரை
நேர்நோக்கி முக்கண்ணர் "மூவுலகு
நின்னிலைமை யறிவித்தோம்; நீயுமினி நீடியநம்
மன்னுலகு பிரியாது வைகுவா; யெனவருளி
யந்நிலையே யெழுந்தருளி யணியேகாம் பரமணைந்தார்.127 |
(இ-ள்.)
வெளிப்படை. முன்னின்ற அவரை இறைவனார் நேர்நோக்கி
முக்கண்ணராகிய ஏகாம்பரநாதனார் "உனது அன்பின் நிலைமையை
மூவுலகங்களும்
|