|
நதி
- கங்கை. நகுவெண் தலைத் தொகை - சிரமாலை
என்பர்.
இவை ஊழிகளில் வீந்த பிரமபுட்டுணுக்களின் தலைகளைக் கோவைபோல
அணிந்தமாலை. "தலைமாலை தலைக்கணிந்து" (திருஅங்கமாலை)
"மூரல்வெண் சிரமாலை யுலாவித்தோன்றும்" (தாண்டகம் - பூவணம்) என்ற
தேவாரங்களும் பிறவும் காண்க.
ஆடி
அருளுதல் - திருமஞ்சனமாடுதல். திருமஞ்சனம்
ஐந்து -
பசுவின் நெய் - பால் - தயிர் - கோமயம் - கோசலம் என்பன. (916)
பார்க்க. இவை ஆனைந்து எனப்படும்.
உரிமைச்
சுரபிகள் - அந்த உரிமையுடைய ஆனினம், இவ்வுரிமை
ஆனினங்களுக்கே இறைவனாற்றரப்பட்டுள்ளது என்பது குறிப்பு.
உரிமை
சுரபிகள் என்று பாடங்கொண்டும், ஆய்சிறப்பினால்
சுரபிகள் உரிமை பெற்ற அன்றே என்று கூட்டி அந்தச் சிறப்பினால்
சுரபிகள் உரிமை பெற்றன வன்றோ? என்று பொருள் கொள்வாருமுண்டு.
இப்பொருளில் ஏகாரம் வினாப்பொருளில் வந்ததென்ப.
இப்பாட்டினால்
ஆனைந்தின் சிறப்பும் தூய உடம்புடைமையும் பற்றிப்
பசுவின் சிறப்புக் கூறப்பட்டது. 20
1226.
(வி-ரை.) சீலம்
- இங்குத் தூய்மை குறித்தது.
சிறக்கும்
தகைமைத் தேவருடன் - சிறப்பாகிய படைப்பு முதலிய
தொழில்களைச் செய்யும் பெருந்தேவர்களோடு.
தேவருடன்.......உலகனைத்தும்
காக்கும் என்று கூட்டுக.
தேவர்களையும் மற்றும் எல்லா உயிர்களையும் காக்கின்ற.
காலம் அனைத்தும் என்பது இடையில் நின்று தேவருடன்
உலகனைத்துங் கால முழுதும் என்று கொண்டு கூட்டி யுரைக்கின்றது.
எல்லாக் காலங்களிலும் எல்லா உயிர்களையும் உலகங்களையும் காக்கின்ற
என்க.
முதற்காரணர்
என்பது தமக்கொரு முதல்வரில்லாத முழுமுதற்
காரணர் என்ற பொருளில் வந்தது. காக்கின்ற கடவுளரை யெல்லாம்
தோற்றுவித்துக் காத்து இறுதியில் தன்னகத் தொடுக்கும் தன்மை பற்றிக்
காக்கும் முதற்காரணர் என்றார் என்றலுமொன்று.
"படைப்போற் படைக்கும்
பழையோன், காப்போற் காக்குங் கடவுள்" என்ற திருவாசகம் காண்க.
சாத்தும்
- அணியும். நீறு அணிந்து நிற்பது சிவபெருமானது
சிறப்புத் தன்மை. நீறு - இறுதிக் காலத்திலும்
அழியாமலிருப்பது இறைவன்
திருமேனியில் தங்கும் திருநீறாகும். இங்குக் குறித்த நீறு
இறைவர்
திருமேனியில் அணிவதற்கு அடியார் பயன் படுத்துவது. "வள்ளல் சாத்து
மதுமலர் மாலையும் அள்ளு நீறும்" (31) என்றது காண்க.
நீறுதரும் மூலம் - திருநீறு பெறுதற்கு ஆதாரமாயுள்ளது. கோமயம்
என்பர். பசுவின் சாணம்.
மூலம்
அவதாரம் செய்யும் மூர்த்தம் - கோமயம் உண்டாகும்
இடம். அவதாரம் - மூர்த்தம் என்ற சொற்கள் அப்பொருள்களின் உயர்வைக்
குறித்துநின்றன. மூர்த்தம் - வடிவம்; இங்கு
ஆனினத்தைக் குறித்தது.
என்றால்
முடிவு என்னோ? என்று காண்போமானால் இதன்
ஏற்றத்துக்கு அளவும் உண்டோ? என்பதாம்.
சைவத்தின்
சிறந்த சாதனமாகிய திருநீற்றினுக்கு ஆதாரமாயுள்ளது
பசுக்களது பெருஞ்சிறப்பாம் என்பது. என்னோ? என்ற வினா வேறின்மை
குறித்தது.
இதனால் திருநீற்றின்
சிறப்புப்பற்றி பசுக்களது சிறப்புக் கூறப்பட்டது. 21
|