|
எல்லாம்
- கங்கை, யமுனை முதலிய ஏழு பெருந்தீர்த்தங்களும்,
அவற்றையும் புனிதமாக்கும் மாமக தீர்த்தமும், இன்னும் இவை போல்வனவும்
ஆகிய எல்லாமும். முற்றும்மை தொக்கது.
என்றும்
- எல்லாக் காலங்களிலும்.
துங்க
அமரர் - பிரமன் - விட்டுணு - வருணன் - அக்கினி முதலிய
பெருந்தேவர்கள். கணங்கள் - சிவகணங்கள்.
சூழ்ந்து
பிரியாத அங்கம் அனைத்தும் - அமரர் முதலினோர்
ஆனினங்களின் ஒவ்வோர் அங்கத்தினும் பொருந்தி அங்கு நின்றும் அகலாது
வாழ்ந்துள்ளார்கள் என்பது.
நல்
- உயிர்களுக்கு நன்மை செய்கின்ற. அதற்காவே பிறந்தவை
ஆனினங்கள் என்பதாகும்.
பசுக்களின்
உறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும்
இருத்தலாவது : பிரமனும்விட்டுணுவும், கொம்பினடியிலும், கோதாவிரி
முதலிய தீர்த்தங்களும் சராசரமும் கொம்பினுனியிலும் இருப்பர்.
சிவபெருமான் சிரசிலும் உமாதேவியார் நடுநெற்றியிலும் முருகக்கடவுள் நாசி
நுனியிலும் வீற்றிருப்பர். உண்ணாசியில் திக்குப் பாலகர்கள் - செவிகளில்
அசுவினி தேவர்கள் - கண்களில் சந்திர சூரியர்கள் - தந்தத்தில் வாயு -
நாவில் வருணன் - இருதயத்தில் சரஸ்வதி - கபோலத்தில் இயமனும்
இயக்கர்களும் - உதட்டில் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று
காலத்துக்குமுரிய அதிதெய்வங்கள் - கழுத்தில் இந்திரன் - முசுப்பில் (இடை)
அருக்கதேவர் - மார்பில் சாத்தியர் - நான்கு கால்களில் அநில வாயு -
முழங்காலில் மருத்துக்கள் - குழம்பினுனியில் நாகலோகத்தார் -
குளம்பினடுவில் கந்தருவர் - மேற் குளம்பில் தேவமாதர்கள் - முதுகில்
உருத்திரர் - சந்துகளில் எண் வசுக்கள் - அரைப்பரப்பில் பிதிர் தேவர்கள்
-பகத்தில் எழுகன்னியர் - குதத்தில் திருமகள் - அடிவாலில் தேவர்கள்
வால் மயிரில் சூரியனொளி என்றிவ்வாறு தேவர் முனிவர் அந்தந்த
அங்கங்களிற் சூழ்ந்து பிரியாதிருப்பர். கோசலத்தில்
ஆகாய கங்கையும்,
கோமயத்தில் யமுனையும் இருப்பர். பூமிதேவி வயிற்றினும், பெருங்கடல்கள்
முலையினும், காருகபத்தியம் ஆகவனீயம் தக்கிணாக்கினி என்னும் முத்தீயும்
வயிறு - இதயம் - முகம் என்னும் மூவிடங்களினும், யாகத்தொழில்
முழுவதும் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும். கற்புடையமாதர்கள் எல்லா
அவயவங்களிலும் வசிப்பார்; என்றிவ்வாறு கண்டு கொள்க. இவை
சிவதருமோத்திரத்தினுள் "வேதாவுங் கரியவனு மாவினது கோட்டடியின்
விளங்கி வாழ்வர்" என்பது முதலாக ஆறு பாட்டுக்களால் விரித்துக்
கூறப்பட்டுள்ளன.
இப்பாட்டினால்
தூய உடம்புடைமைபற்றி ஆனினங்களின் சிறப்புக்
கூறப்பட்டது. 19
1225. (வி-ரை.)
ஆய சிறப்பு - இவ்வாறாகிய சிறப்பு. தூயவுடம்
புடைமையானாகிய சிறப்பு.
பெற்ற
அன்றே - கன்றினைப்பெற்ற - ஈன்ற - பொழுதே. ஈன்ற
அன்றே அளிப்பினும் திருமஞ்சனமைந்தும் ஆகமங்களில் விதித்த கால
எல்லையிற் கொள்ளத்தக்கன என்ப. அன்றே
படைப்புக் காலத்திலே,
பெற்ற - பெற்றன என்று கொண்டுரைத்தலுமாம்.
நாயனார்
- தலைவர் - சிவபெருமான் "மன்றினடமாடு,
நாயனாரென்றுரைப்போம் நாம்" (கோயினான்மணிமாலை - 13), "அழகிது
நாயனீரே" (774) முதலியவை பார்க்க. இப்பொருள் பற்றியே, தமது
தலைவர்களாந் தன்மை கொண்டு நம்மை ஆட்கொண்டருளும் அடியார்
பெருமக்களை "நாயனார் " என்ற வழக்கும் போந்தது.
|