|
(திருஞான - புரா -
73) என்ற இடங்களிற் போல ஈண்டும், ஓச்ச
- முட்டுதற்குச் செல்ல என்றல் பொருந்தும். கொம்பினை அசைத்து
முயன்றதே யன்றி முட்டிப் பிழை செய்யாதிருக்க இடைமகன் புடைத்தான்
என்க.
யாதும்
ஒன்றும் கூசாதே 1224 - 1227 பாட்டுக்களிற்
கூறியபடிக்குள்ள பெருமைகளில் எதையும் ஒரு சிறிதும் உணராமலும்,
பசுவைக் கருணையின்றிக் கோல் கொண்டு புடைத்தலைப்பற்றி ஒரு சிறிதும்
அஞ்சாமலும், கூசுதல் - தகாத செயல் செய்ய அஞ்சுதல்.
மெய்யுணர்ந்து
- உள்ளத்தினுள் எழுகின்ற வுணர்ச்சியினால்
உண்மையை அறிந்து. மேல்வரும் பாட்டில் எய்த உணர்ந்த
உள்ளத்தால்
என்றது வேத ஆகம நூல் உணர்ச்சி குறித்தது. மெய்யுணர்ந்து, (அதன்
மேல்) மறைகள் மூலமாக உணர்ந்த உள்ளத்தால் என்று கூட்டிக் கொள்க. 17
1223. (வி-ரை.)
பரவும் கலைகள் - மிகப்பரந்துகிடக்கும் எல்லாக்
கலைகளும் அளவிடமுடியாத கலைஞானங்களைக் குறித்தது.
ஆகமநூற்
பரப்பின் தொகுதி- மூலாகமங்கள் உபாகமங்கள்
என்ற இவை பலவற்றின் தொகுதி. தொகுதி
- என்றதனால் ஆகமங்கள் பலவாகிப்
பரந்திருப்பினும் அவை கூறும் முடிந்த பொருள்களில் ஒற்றுமையுடையன
என்பதும், ஆவின் பெருமையினை ஒன்று போலவே எல்லா ஆகமங்களும்
கூறுவன என்பதும் ஆம்.
அருமறைகள்
- ஆகமங்களேயன்றி வேதங்களும் ஆவின் பெருமை கூறுவன.
மூலமாக
- ஏதுவாகக் கொண்டு. கலைகளும் ஆகமங்களும்
மறைகளும் என்னுமிவற்றை ஏதுவாகக் கொண்டு யாவுந் தெளிந்த
என்க.
எண்ணும்மைகள் தொக்கன. இது நூல்வழியால் தெளிந்த உணர்வு.
யாவும்
தெளிந்த.........உள்ளம் - பதிமுது
நிலை - உயரவை நிலை
- இருண்மல நிலை - அருளது நிலை என்ற பொருணிலை யெல்லாம்
தெளிய உணர்ந்து கொண்டமைந்த உணர்ச்சியினையுடைய உள்ளம். "நடமே
புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும் மெய்ம்மை" (1221) என்றதும்
ஆண்டுரைத்தவையும் பார்க்க.
பெருமை
உள்ளபடி அறிந்தார் - உள்ளபடியினை - வகையினை
- அறிந்தாராதலின். படி - படியை - வகையை. இரண்டனுருபு தொக்கது.
உள்ளவாறு - உண்மையாக என்றுரைப்பினுமாம்.
அருள்
செய்வார் - செய்வாராகி. செய்வார்
- "நிரைமேய்ப்பொழிக
நீ (1228) - யானே - மேய்ப்பன்" என்றார் (1229) என்று மேல்வரும்
பாட்டுக்களுடன் முடிக்க.
மேலே 1224
- 1227-ல் வருவனவும், "இன்ன பலவும்" (1228)
விசாரசருமனார் தம் மனத்துள்ளே நினைந்து துணிந்து கொண்ட முடிபுகள்.
பொருளினிலை
யெய்த - என்பதும் பாடம். 18
1224. (வி-ரை.)
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை
- தங்கும் - உயிர்கள் இவ்வுலகிற் பிறவி எடுத்து வரும்போது தங்கும்
என்க. அகில யோனி கட்கும் - எல்லாவிதமான
யோனி பேதங்களுள்ளும்.
மேலாம் பெருமை - உயர்வுடையதாகிய பெருமை.
யோனி பேதம் என்பது
உடல் எடுக்கும் பிறவி வகை. அவை எண்பத்து நான்கு இலக்கம் என்ப.
"உரைசேரு மெண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்"
(திருவீழிமிழலை - மேகராக - 4) என்றது ஆளுடைய பிள்ளையார்
தேவாரம். இவை எல்லாவற்றுள்ளும் மேன்மையுடையன ஆவின் பிறவியே
என்பது.
புனித
தீர்த்தங்கள் - புனிதம் - தூய்மை. தூய்மை செய்யும்
தீர்த்தங்கள். 1155 - ல் உரைத்தவை பார்க்க.
|