|
1230.
|
கோலுங்
கயிறுங் கொண்டுகுழைக் குடுமி யலையக் குலவுமான்
றோலு நூலுஞ் சிறுமார்பிற் றுவள வரைக்கோ வணஞ்சுடரப்,
பாலும் பயனும் பெருகவரும் பசுக்கள் மேய்க்கும்
பான்மையினாற்
சாலும் புல்லி னவைவேண்டுந் தனையு மிசையுந்
தலைச்சென்று,
25
|
| |
|
|
1231.
|
பதவு
காலங் களின்மேய்த்தும் பறித்து மளித்தும் பரிவகற்றி
யிதமுண் டுரையு ணற்றண்ணீ ரூட்டி யச்ச மெதிர்நீக்கி,
யதர்நல் லனமுன் செலநீழ லமர்வித், தமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாம லுடையோ ரில்லந்
தொறுமுய்த்தார். 26
|
1230. (இ-ள்.)
வெளிப்படை. பசு மேய்க்கும் கோலினையும்
கயிற்றினையும் கொண்டு, சிறுபுன் குடுமி அசைய, விளக்கமுடைய
மான்றோலும் அதனுடன் பூணூலும் சிறிய மார்பகத்தில் துவளத், திருவரையில்
கோவணம் ஒளிவிள்கப் பாலும் கன்றுகளும் பெருகும்படி வருகின்ற
பசுக்களை மேய்க்குந் தன்மையில், மிகவும் புல்லின் அவை வேண்டுமளவும்
விரும்பி உண்ணும்படியும் மேற்சென்று, 25
1231. (இ-ள்.)
வெளிப்படை. புல் மிகவுள்ள காலங்களில்
ஆனிரைகளை மேய்த்துப் புல் உண்ணச் செய்தும், கையாற் பறித்துக்
கொடுத்துக் காப்பாற்றியும், அவற்றின் துன்பம் போக்கி, இதமாக நீர்
உண்ணத்தக்க நீர்த்துறையுள் நல்ல குளிர்ந்த நீரை உண்ணச்செய்து,
அச்சங்களை வாராமல்நீக்கி, நல்லனவாகிய வழிகளில் அவை முன்னே
செல்லும்படி விட்டு நிழலில் இளைப்பாறச் செய்து, அமுதமாகிய சுவையுள்ள
பாலினைத் தரும் நேரத்தில் அவற்றினை உடையோராகிய மறையவர்
களுடைய மனைகள் தோறும் செலுத்தினார். 26
இந்த இரண்டு
பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
1230. (வி-ரை.)
இப்பாட்டில் விசாரசருமனார் நிரைகாக்க வந்த
திருக்கோலத்தை விரித்துக் காட்டுகின்றார். இதனாலும் மேல்வரும்
பாட்டாலும் அவர் பசு மேய்த்த திறத்தினையும் விரித்துக் கூறுகின்றார்.
கோலும்
கயிறும் - இவை நிரைமேய்த்தலுக்கு உதவுவன. ஆனிரை
காப்போர் இந்த இரண்டும் கொண்டு போதல் காண்க.
கயிறு
- பசுக்களையும் கன்றுகளையும் வேண்டும்போது
பிணித்ததற்கும், கோல் அவற்றைச் செலுத்தற்கும் உதவுவன. முன்னர் ஆ
மேய்த்த ஆயனும் கோல் கொண்டு சென்றான் என்பது "எடுத்த
கோல்கொண் டவன்புடைப்ப" (1222) என்றதனால் அறியப்படும். "
ஆயன்கோல் போடிற், பசுக்க டலைவனைப் பற்றி விடாவே" என்ற
திருமந்திரமும் கருதுக. விசாரசருமனார் கொண்ட இந்தக் கோலே பின்னர்
மழுவாயிட, அது கொண்டே தாதையினது தாள்களை எறிந்தனர் என்பதும்
இங்கு நினைவுகூர்தற்பாலது. "முந்தை மருங்கு கிடந்த கோல்" (1256) என்பது
காண்க.
குழைக்குடுமி
- மான்றேல் - நூல் - கோவணம் - இவை
பிரமசரிய நிலையின் விளங்கும் அவரது மேனியிற் கொண்டவை.
குழைக்குடுமி- பிரமசாரிகளுக்கு அடையாளமாகிய சிறுபுன்குடுமி.
பஞ்ச சிகை என்பர். குழைக்குடுமி அலைய -
சிறுபுன்குடுமி கீழ்த்தாழ்ந்து
அசைந்தாட. நூல் விதிதவறிக் குடுமியைக் குறுகக் கத்திரித்துப் பிரமசாரிகள்
திரியும் கொடுமை இக்காலத்துக் கோர நாகரீக விளைவுகளுள் ஒன்று.
மான்
தோலும் நூலும் சிறுமார்பில் துவள - மான்றோலினைப்
பூணூலில் முடிந்து கொண்டு தாங்குதல் பிரமசரியத்துக்குரிய வழக்கு.
பஞ்சசிகை - மானறோல்
|