|
உபநயனம் என்னும்
நெற்றிக்கண் முதலிய அடையாளங்கள் பிரமம்
என்னும் சிவதத்துவ விளக்கங் குறிப்பன என்பது பற்றி முன்னுரைத்தவை
பார்க்க - (1219).
அரைக்கோவணம்
சுடர - அரையிற் கோவணம் பூண்பதுவும்
பிரமசரிய வழக்கு. அக்கோவணம் தூயதாய் வெள்ளியதாய்
விளங்குவதென்பார் சுடர என்றார். நூல்
மார்பிற் றுவள என்றதற்கேற்பக்
கோவணம் அரையிற் சுடர என்று கூட்டிக் கொள்க.
இதுபற்றித் "தஞ்ச
மாமறைக் கோவண வாடையின் றசைவும்" (509) என்றதும், பிறவும், பார்க்க.
பாலும்
பயனும் பெருகவரும் பசுக்கள் - பயன் - கன்றுகள்.
பசுக்காத்துப் பெறும் பயனிரண்டு : அவை பாலும் கன்றும் என்பன.
அவற்றுட் பால் - அன்றன்று பெற்றுக்கழியும்
தற்காலப்பயன் என்றும், பயன்
(கன்று) அவ்வாறன்றி நீடிச்செல்லும் பெரும்பயன் என்றும் கொள்ளப்படும்.
ஆதலின், ஆனைந்திற் சிறந்த பாலினும்
கன்றினையே பயன் என்றார்.
பாலின் பயன் என்பாருமுண்டு.
பாலும்
பயனும் பெருக வருதலாவது - இந்த இரண்டும்
ஒன்றானொன்று குறையாது சமமாகப் பெருகநிற்றல் இக்காலத்துப் பலர்,
பால்வேண்டிய பேராசையால் கன்றுக்குப் பால்விடாமற் கறந்துகொண்டு
கன்றினம் செழிக்கவிடாது பாழ்படுத்துப் பயனின்றாக்குவர்.
"தோற்கன்று
காட்டிக் கறத்தல்"
என்ற கொடுங்காட்சியும் இந்நாளிற் காணவுள்ளது! மற்றும்
சிலர் கன்றையே நினைந்து பால் பெறாதொழிவர். இந்த இரண்டுமின்றிப்
பாலும் பயனும் என்ற இரண்டு பயன்களும் தக்கபடி
பெருகுமாறு பசுக்
காத்தல்வேண்டும் என்ற குறிக்கோள் நாட்டப்பட்டது காண்க.
மேய்க்கும்
பான்மையினால் - மேய்க்கத்தக்க பரிசினைக்
கொண்டமையால்
இதனைமேல் விரிக்கின்றார்.
சாலும்......தலைச்சென்று
- சாலும் - புல் - புல்லின் குணநலமும்
அளவின் மிகுதியும் குறித்தது. வேண்டும் தனையும் - தனை
- அசைவு.
மிசையும் தலைச்சென்று - மிசைதல் - விரும்பி
யுண்ணுதல். தலை -
இடம். உண்ணும் இடங்களிற் கூடப்போய்.
சென்று - மேய்த்தும்
பறித்தும் - அளித்தும் என்று கூட்டுக. 25
1231. (வி-ரை.)
தலைச்சென்று - மேய்த்தும் பறித்தும் - அளித்தும் -
பரிவகற்றி - தண்ணீர் ஊட்டி - அச்சம் நீக்கி - என்பன விசாரசருமனார்
ஆனிரை மேய்த்துக்காத்த வகையை விரிக்கின்றன.
மேய்த்தும்
- பறித்தும் - அளித்தும் - புல் மேய இயலுங்காலத்தில்
மேய்த்தும், இயலாதபோது பறித்தும், காத்தும் என்க. மேய இயலாத
காரணமாவன மழை பெய்தலும் பசுக்கள் உடல் நிலையாலும் நிலத்தின்
மேடுபள்ளம் சேறு முதலாகிய இயல்பாலும் பலபுறமும் சென்று
மேயக்கூடாமல் இருத்தலும், பயிரிட்ட நிலத்திற் புல் இருத்தலும் முதலியவை.
பரிவு
- பசித்துன்பம். "அழிவாம் பசி" (திருநா - புரா - 304).
இதம்
உண்துறையுள் நல் தண்ணீர் ஊட்டி - தண்ணீர் குடிக்கும்
துறை சேறுடனிருத்தல், இறங்குமிடத்தில் கரையின்றி ஆழமாயிருத்தல்,
நாணல் முதலிய புதல் இருத்தல், கராம் முதலிய இருத்தல் என இவை
போன்ற இடர்கள்
இல்லாத துறை. துறைகளைப்பற்றி முன் உரைத்தவை
பார்க்க.
நல்
தண்ணீர் - அழுகற் பொருள்கள், வண்டல்
முதலியன இல்லாத
தூயநீர் உண்ணும் துறையாயினும் நீர் நல்லதாய் இல்லாத காலமுமுளது.
எதிர்
அச்சம் நீக்கி - என்க. அச்சம்
- புலிமுதலியவற்றால்
வருவனவும், பகையரசர் நிரைகவர்தல் முதலியவற்றால் வருவனவும் ஆம்.
|