|
அதர்
- வழி. நல்லன (ஆகிய) அதர், என்க. வழிகள்
நல்லனவாதல் குழி, மேடு, கல், முள், முதலிய இடங்கள் இல்லாமலும்,
தீயவிலங்குகள் தாங்காமலும், நேராகவும் உள்ளமை.
நீழல்
அமர்வித்தல் - இளைப்பாறி உணவு சீரணிக்கச் செய்து
கொள்ளும் பொருட்டு மேய்ந்தவுடன் நிழலில் பசுக்களை அமர்வித்தல்
முறை.
அமுத
மதுரப்பால் - நோய் நீக்கம்
செய்தும், உடல் வளர்ச்சிக்கு
உதவியும், சுவையுள்ள உணவாக உதவுவது. மதுரம்
- சருக்கரை முதலிய
வேறொன்றின் சேர்க்கையாலன்றித் தானே சுவையுள்ளது. இவை உலக
நிலையின் அளவாற் குறிக்கப்படும் தன்மை. இனி, அமுதம்
- மரணத்தை
நீக்குவது. சிவவேள்விக்குரிய பொருளாய் உதவுதலின் சாவா மூவாச் சிவபதப்
பயன் தந்து மக்களை நிலைபேறு பெறச் செய்வது என்பது உயர்ந்த உயிரின்
நிலையாற் குறிக்கப்படும் பொருள். இச்சரிதத்தில் நாயனார்க்கு இந்தப்
பால்தானே அமுதம் பெறச் செய்வதும் காண்க.
"அமுதம் பெறு சண்டி"
(தக்கேசி திருநின்றியூர் - 2) என்றது நம்பிகள் தேவாரம்.
உதவும்
பொழுது - உதவ வேண்டிய காலத்தில்; அஃதாவது -
மாலைநேரம்; மாலை வேள்விக்குரிய காலம்.
உய்த்தல்
- உடையவர் இல்லந்தோறும் பசுக்களைக் கொண்டு
செலுத்துதல் ஆ மேய்ப்போர் கடமை.
மேய்த்துப்
பறித்தும் - இதமுண்டுறையு நற்றண்ணீர்
- என்பனவும்
பாடங்கள். 26
|
1232.
|
மண்ணிக்
கரையின் வளர்புறவின் மாடும் படுகர்
மருங்கினிலுந்,
தண்ணித் திலநீர் மருதத்தண் டலைசூழ் குலையின்
சார்பினிலும்,
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச் சமிதை
யுடன்மேலெரிகொண்டு
நண்ணிக் கங்குன் முன்புகுது நன்னாள் பலவா மந்நாளில். 27
|
| |
|
|
1233.
|
ஆய
நிரையின் குலமெல்லா மழகின் விளங்கி மிகப்பல்கி
மேய வினிய புல்லுணவும் விரும்பு புனலு மார்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி யெய்தி யிரவு நண்பகலுந்
தூய தீம்பான் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால். 28
|
1232.
(இ-ள்.) வெளிப்படை. மண்ணியாற்றின் கரையில் வளரும்
(முல்லைப்) புறவின் பக்கத்திலும், படுகர்களின் பக்கத்தும், குளிர்ந்த
முத்துக்களைக் கொழிக்கும் மருதநிலத்துச் சோலைகள் சூழ்ந்த கரைகளின்
பக்கத்திலும், மேன்மேல் வளர்ந்து பெருகும் ஆனிரைகளை மேய்த்துச்
சமிதையுடன் மேல் எரியினையும் கொண்டு பொருந்தி இரவு வருமுன்பு
புகுகின்ற நல்ல நாள்கள் பலவாம்; அந்நாள்களில், 27
1233. (இ-ள்.)
வெளிப்படை. அவ்வாறாகிய ஆனிரையின்
கூட்டமெல்லாம் அழகுடன் விளங்கி மிகவும் பெருகி, மேவிய இனிய
புல்லுணவும் விரும்பும் தண்ணீரும் நிறைய உண்ணமப்பெற்ற காரணத்தால்,
எய்திய மனத்திற்கொண்ட பெரு மகிழ்ச்சி பொருந்தி இரவிலும் நண்பகலிலும்
தூய இனிய பாலினை மடிகள் பெருகிச் சொரியும்படி முலைகள் சுரந்தன. 28
இந்த இரண்டு
பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
1232. (வி-ரை.)
புறவின் மாடும் - படுகர் மருங்கும் - குலையின்
சார்பினிலும் - இவை விசாரசருமனார் ஆனிரைகளை மேய்த்த இடங்களைக்
குறித்தன. புறவு - மருதத்தையும் ஆற்றின்
கரையினையும் அடுத்த முல்லைப்
புறவு. பசுக்கள் முல்லை
|