|
(இ-ள்.)
வெளிப்படை. நல்லனவாகிய நவகும்பங்கள் பெறுதற்கு நாடி
எடுத்துக்கொண்டு நாணல்கள் நெருங்கிய அழகிய கொல்லை யிடத்தும்,
ஆற்றிடைக் குறை மறைவிலும் மேய்கின்ற பசுக்களுடன்கூட விரைவில்
அணைந்து பாற்பசு ஒன்றுக்கு ஒருகாலாக எதிரே போக, அவையும்
முலைதீண்டியவுடன் கனைத்துச் செழும்பால் பொழிந்தன.
(வி-ரை.)
நல்ல நவகும்பங்கள் - நல்லனவாகிய ஒன்பது
கும்பங்கள்.
"ஆன்மார்த்த பூசைக்கும் நவகும்பங்கள் தாபித்து அபிடேகம்
செய்யலாமென்று காமிகாகமங் கூறுகின்றமையால் அது வருமாறு....." என்பது
சைவ பூக்ஷணம்; 71-ம் பக்கம் (104) காண்க. ஒன்பது கும்பங்கள் தாபித்துத்
திருமஞ்சன மாட்டுதல் ஆகமவிதிகளுள் ஒன்று. நவகும்பம்
-
(பூசைக்காதலின்) புதிய குடங்கள் என்பாருமுண்டு.
பெற
நாடி கொண்டு - பெற - எண்ணி; நாடி
- அதற்காக முயன்று;
கொண்டு - வந்ததைப் பெற்றுக்கொண்டு. நாணற்கொல்லை
- குறைமறைவு
- இவை பசுக்கள் மேயும் இடங்கள்.
ஒன்றுக்
கொருகாலாக எதிர் செல்ல - முலைதீண்ட என்க. ஒரு
பசுவினது மடியில் ஒரு முலைக்காம்பில் பால்பெறும்படி முலையைத் தீண்ட.
ஒருகாலாக - என்றது முலைக்காம்பாக என்ற பொருளிலும், எதிர்
செல்ல
என்றது முறையாகப் போக - நிகழ - என்ற பொருளிலும் வந்தன.
ஒருகாலாக
- பால் கறத்தலில் வழங்கும் மரபு வழக்கு. இவ்வாறன்றி
ஒருதரம் என்று கூறுவாருமுண்டு. முலைதீண்டச் செழும்பால் பொழிந்தன
- விசாரசருமனாரைக் கண்ட மாத்திரத்தில் அருகுசார்ந்து உருகி முலைசுரந்து
கறவாமே பால் சொரிந்த பசுக்கள், அவர், தம்மை யணைந்து முலைதீண்டப்
பால் பொழிதல் ஒரு வியப்பாமோ?
பொழிந்தனவால் - விசாரசருமனாரைத் தம் கன்றாகப் பசுக்கள்
நினைந்த நிலையை முன்னரும் "பொழிந்தனவால்"
(1235) என்ற இதே
சொல்லினாற் கூறினார். முன்னர்க் கூறியது பசுக்கள் விசாரசருமனாரை
அருகுசார்ந்து பால் பொழிந்தநிலை; இங்குக் கூறியது பசுக்களை அவை
மேயுமிடத்து விசாரசருமனார் அணைந்து முலைதீண்டியபோது பால் சுரந்து
பொழிந்த நிலை.
முலைதீண்ட
என்றது அன்பு பெருகப் பால் சுரக்கச்செய்யும் செயல்
அளவில் நின்றது. இங்கும் கறவாமே தீண்டிய அளவில் பால் பொழிந்தன
என்க.
கனைத்தல்
- அன்பின் பெருக்கால் நிகழும் மெய்ப்பாடு. முன்னரும் "கனைத்துச் சுரந்து" (1235)
என்றது காண்க. 34
1240.
|
கொண்டு
மடுத்த குடநிறையக் கொணர்ந்து விரும்புங்
கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணலா லயத்து ளவைமுன்றாபித்து
வண்டு மருவுந் திருப்பள்ளித் தாமங் கொண்டு வரன்முறையே
பண்டைப் பரிவா லருச்சித்துப் பாலின் றிருமஞ் சனமாட்டி, 35 |
| |
|
1241.
|
மீள
மீள விவ்வண்ணம் வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள வுடையார் தம்முடைய வன்ப ரன்பின் பாலுளதாய்
மூள வமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோள மதனி லுண்ணிறைந்து குறித்த பூசை கொள்கின்றார். 36 |
| |
|
1242.
|
பெருமை
பிறங்குஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்த முள்ளத்தில்
ஒருமை நினைவா லும்பர்பிரா னுவக்கும் பூசை யுறுப்பான |
|