| |
திருமஞ்
சனமே முதலவற்றிற் றேடா தனவன் பினினிரப்பி
வருமந் நெறியே யர்ச்சனைசெய் தருளி வணங்கி
மகிழ்கின்றார்.37 |
1240. (இ-ள்.)
வெளிப்படை. பொழிந்த அந்தப்பாலினைக் குடங்கள்
நிறைய ஏற்றுக்கொண்டு, கொணர்ந்து, விரும்பும் கொள்கையினால்
தேவதேவரது வெண் மணலாகிய கோயிலினுள்ளே அவற்றை முன் தாபித்து,
வண்டுகள் பொருந்த நின்ற திருப்பள்ளித் தாமங்களினால் வரன்
முறையாலே முன்னைத் தொடர்ச்சியாகிய அன்பினாலே
அருச்சனை
புரிந்து, பாலின் திருமஞ்சனத்தை ஆட்டி,
35
1241. (இ-ள்.)
வெளிப்படை. மீண்டும் மீண்டும் இவ்வாறு வெண்
பாலினைச் சொரியும் திருமஞ்சனத்தினை ஆட்ட, ஆட்கொண்டருளுதற்கு
உடையாராகிய சிவபெருமான் தம்முடைய அன்பரது அன்பின்பால் உளதாகி
மேன்மேல் உண்ணின்று பெருக விரும்பிய நயப்பாடு முதிர்ந்ததாகிய அன்பு
முற்றச் சூழும் கோளத்தினிடத்தில் உள்ளே
நிறைந்து நின்று அவர்
குறிப்பில் கொண்ட பூசையினை ஏற்றுக் கொள்கின்றாராக, 36
1242. (இ-ள்.)
வெளிப்படை. பெருமை விளங்கும் சேய்ஞலூர்ப்
பிள்ளையார் தமது உள்ளத்தில் ஒன்றுபட்ட நினைப்பினாலே தேவர்
பெருமான் மகிழும் பூசனையின் உறுப்புக்களாகிய திருமஞ்சனமே
முதலாகியவற்றில் தாம் தேடிக் கொள்ளாதவற்றை அன்பினால்
நிரப்பிக்கொண்டு வரும் அந்நெறியிலே அருச்சனை செய்தருளி வணங்கி
மகிழ்கின்றாராயினர். 37
இம்மூன்று பாட்டுக்களும்
ஒருதொடர்பு கொண்டு பொருள்செய்ய
நின்றன.
1240. (வி-ரை.)
மடுத்த குடம் நிறையக் கொண்டு கொணர்ந்து
என்க.
மடுத்த
- முலைதீண்டப் பால் - பொழிந்தனவாதலின் இவர் செய்ய
எஞ்சி நின்ற செயல் அதனைக் குடத்தில் ஏற்றலேயாம்; ஆதலின்
மடுத்தகுடம் என்றார். மடுத்தல் - நிறைய ஏற்றல்;
நிறைத்தல். கொணர்ந்து
- நாணற் கொல்லையிடத்தும் குறைமறைவினும் (1239) பாலினை ஏற்ற
இடத்திலிருந்து மணலினிற் புளினக்குறையில் ஆத்தியின்கீழ்க் (1237)
கோயில் ஆக்கிய இடத்துக்குக்கொண்டு வந்து.
ஆலயத்துள் - சிவாலயத்தினுள் (1237).
அவை
முன் தாபித்து- குடங்களைத் தாபித்தலாவது
ஆசனம்
கற்பித்து வைத்தும், திருமஞ்சனமாகக் கற்பித்து அபிமந்திரித்தும் நிறுவுதல்.
இதன் விரிவு சிவாகமங்களுட் காண்க.
வண்டுமருவும்
திருப்பள்ளித்தாமங் கொய்து - இலைப்பூங்கூடை
யில் மலர்களைக் கொணர்ந்து மணந்தங்கிட வைத்தா (1238) ராதலின்
மணத்துக்கும் அதனால் உணர்ந்த தேனுக்குமாக வண்டுகள் மருவி நின்றன
என்பது குறிப்பு. "அரும்பற் றப்பட வாய்மலர்........சுரும்பற் றப்படத் தூவித்
தொழுமினோ" (அப்பர் சுவாமி தேவாரம்). "கொங்குதேர் வாழ்க்கை
யஞ்சிறைத் தும்பி...........நறியவு முளவோநீ யறியும் பூவே" என்ற
திருப்பாட்டின்படி வண்டுகள் மணத்தினாலே பூக்களைத் தெரிந்து
மொய்த்துத் தேனுண்பன என்பதறியப்படும். மருவும் - மருவ நின்ற என்க.
திருப்பள்ளித்தாமம்
கொண்டு- பூக்களைக் கொண்டு. 1238ன்
உரை
பார்க்க.
பண்டைப்
பரிவால் வான்முறையே அர்ச்சித்து - என்க.
அர்ச்சித்துத் - திருமஞ்சனமாட்டி என்றதனால் இது திருமஞ்சன மாட்டுதலின்
முன்னர்ச் செய்யும் அருச்சனையாகும். திருமஞ்சனம் முதலிய பூசை
உறுப்புக்கள் எல்லாம் முடிந்தபின் செய்யும் அருச்சனை வணக்கம்
முதலியவை வேறு; அவற்றை "அருச்சனை
|