|
1247. (வி-ரை.)
அந்தணாளர் ஆகுதிக்கு - ஆறனுருபு விரிக்க.
ஆகுதிக்குக் கறக்கும் - ஆகுதிக்காக வேண்டும்
வளங்களைத்
தருவதற்குப்பால் கறக்கும் என்க. நான்கனுருபு கொடைப் பொருளில் வந்தது.
முன்னர் "ஓமதேனுக்கள்" (1210 - 1234) என்றது காண்க. ஆகுதி
-
சிவவேள்வி. "பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும், அது
கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும் வேள்வி
நடவாதாம்" என்று "ஆபயன் குன்றும்" என்ற குறளின்கீழ்ப் பரிமேலழகர்
உரைத்தனர்.
சிந்தை..........போல்
- முன் "ஆயன்...........ஒழுகும்" (1245) என்று தாம்
கொண்ட கருத்தினை எச்சதத்தனிடம் அந்தணர் அறிவிக்கும் மொழிகள்.
மேய்ப்பான் போல் - என்றதனால் மேய்ப்பதாகச்
சொல்லியது வஞ்சமொழி
என்றும், அவ்வாறு செய்யமுற்பட்டது போலியே என்றும் குறித்தபடியாம்.
சிந்தை
மகிழ்ந்து - ஆ மேய்ப்பதில் கொண்ட உள்ள நிறைந்த
மகிழ்ச்சியே காரணம் என்று காட்டியபடி.
பரிவினால்
- பசுக்களின்மேல் வைத்த அன்பினால். பரிவினால்
- சிவன்பால் வைத்த அன்பினால் என்ற உண்மைக் குறிப்பும் காண்க.
வந்த
பரிசே - சிறாராகிய தமது மனதுக்கு வந்தபடியே. "மனம்
போன போக்கெல்லாம்" என்றதுபோல. தாம் இவ்வுலகில் முன்னைத்
தொடர்ச்சியுடன் வந்த அத்தன்மைக் கேற்றபடியே என்றதோர்
உண்மைக்குறிப்பும் காண்க.
செய்கின்றான்
- என்றான் - அச்செய்தியைத் தாம் அறிந்த
வகையினைக் கூறியபடி. அது தாம் நேரிற் கண்டறிந்ததன்று; மற்றவன்பாற்
கேட்டறிந்ததொன்று என உணர்த்தியபடியாம். அவையோர் முறை
செய்கின்றபோது ஒருவன் தம்முன் வந்து சொன்ன செய்தியும், அதற்குப்
பிறர் கூறும் பக்கமும் கேட்டு ஒழுங்கு செய்தல் போல, என்றானாதலின்
அதற்கு உனது விடை யாது? என்ற குறிப்புப்பட நின்றது.
என்றான்
- அயன் மற்றொருவனென்ற எழுவாய் தொக்கது.
மற்றவனைக் குறித்த பெயரும் மறைந்து நின்றது.
வாய்மொழிதல்- சொல்லுதல். நீதிமன்றத்தில் வழங்கும் மரபு மொழி.
வாய் என்றது வாளா பெயராய் நின்றதெனினுமாம்.
அந்தண்
மறையோர் - என்று மறையோர் வாய்மொழிந்தார் -
என்பனவும் பாடங்கள். 42
1248.
|
மறையோர்
மொழியக் கேட்டஞ்சிச் "சிறுமா ணவகன் செய்தவீ
திறையு நான்முன் பறிந்திலே; னிதற்கு முன்புபுகுந்ததனை
நிறையும் பெருமை யந்தணர்காள்! பொறுக்க வேண்டு
நீங்க"ளெனக்
குறைகொண் டிறைஞ்சி, யினிப்புகுதிற் குற்ற மெனதே
யா"மென்றான்.
43 |
(இ-ள்.)
வெளிப்படை. மறையவர்கள் இவ்வாறு சொல்லக்கேட்டுப்
பயந்து, "சிறுமாணவகன் செய்த இதனைச் சிறிதேனும் நான் முன்பு அறியேன்;
இதற்கு முன்பு நிகழ்ந்த தீமையினை, நிறையும் பெருமையுடைய
அந்தணர்களே! நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்" என்று குறை
கொண்டு வணங்கிக் கேட்டுக் கொண்டு "இனி, இச்செயல் நிகழ்ந்தால் குற்றம்
என்னுடையதேயாகும்" என்று எச்சதத்தன் சொன்னான்.
(வி-ரை.)
சிறுமாணவகன் செய்த ஈது - செய்த - செய்ததாகச்
சொன்ன தான் கண்டிலனாயினும், சபையோர் கேட்டுச் சொல்லத், தான்
கேட்டறிந்ததனை உள்ளதெனவே கொண்டு, பிழை யுடன்பட்டவனாய்ச்,
"செய்ததகாச் சொன்ன" என்னாது செய்த என்றே
கூறினான். இதற்கு முன்பு
புகுந்ததனைப் பொறுக்க
|