பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1597

 

நிறைந்த என்றலுமாம். பிறர் எல்லாரும் செய்யும் பூசைகட் கெல்லாம் குறிக்
கொள்ளத் தக்க இலக்கியமாயும் பயன் றருவதாயும் நிகழ்வதொன்றாகலின்
அரும் பூசனை என்றார்.

     ஒன்றும் உள்ளத் துண்மை - ஒருப்பட்ட உள்ளத்தின் மெய்ம்மை
நிலை. "ஒருமை நினைவால்" (1242) என்றதுகாண்க. மனம் ஒருப்படாத
போது பூசனையாற் பயனில்லை என்பது துணிபு. "பொக்க மிக்கவர் பூவுநீ
ருங்கண்டு, நக்கு நிற்பனவர்தமை நாணியே" என்ற திருக்குறுந்தொகையும்
பிறவும் காண்க.

     உண்மை - உள்ளத்தின் தன்மையாகிய ஒருமைப்பாடு. இவ்வுள்ள
நிகழ்ச்சி பின்னர் 1254 - 1257 பாட்டுக்களில் விரித்துக் கூறிய
புறநிகழ்ச்சிகளால் அறியப்படும்.

    உடைய நாதன் - ஆளுடைய இறைவர். "உடைய நாதனே போற்றி"
என்பது திருவாசகம். "ஆளவுடையார்" (1241) என்றது காண்க. சிவபூசைக்கு
"உடையவர்" பூசை என வழங்கும் சைவமரபும் கருதுக. உயிர்கள் யாவும்
இறைவனது அடிமைகளாம் என்பது உண்மைநூற்றுணிபு. அதனை
எஞ்ஞான்றும் மனத்தினுள் ஊன்றவைத் தொழுகுதல் வேண்டும் என்பது
உயர்ந்தோர் ஒழுக்கமாம். கல்வெட்டுச் சாசனங்களில் உடையார் எனவரும்
வழக்கும் காண்க.

     திருப்பள்ளித்தாமஞ் சாத்தி....ஆட்டுதலும் - முன்னரும்
"அருச்சித்துப் பாலின் திருமஞ்சன மாட்டி" (1240) என்றது காண்க.
அபிடேகத்தின் பொருட்டு அட்டபுட்பஞ் சாத்தி என்பாருமுண்டு.

     நன்று நிறை தீம் பாற் குடங்கள் - "பெருகுங் குடங்கள்" என
முன் பாட்டிற் கூறியது காண்க. நன்று நிறை என்பது குடங்களுள் நிறைந்தது
பால் அளவில் அமையாது நன்றென்பன எல்லாம் நிறைந்தன என்ற
குறிப்புப்பட நிறைந்தது. நன்று ஆட்டுதலும் எனக்கூட்டி யுரைத்தலுமாம்.

     விளையாட்டா நிறைந்த - என்பதும் பாடம். 47

     1253. (வி-ரை.) பரிவும் - பண்பும் - விரவ என்க. பரவ எழும்
பரிவு
- பரவ எழுகின்ற ஆசை.

     பரவுதல் - இங்குப் பூசிக்கும் எல்லா உறுப்புக்களையும் உள்ளிட்டு
நின்றது. பூசை செய்யச் செய்ய அதில் அன்புமிகுதல் உயர்ந்தோரிலக்கணம்.

     பரவ எழும் பரிவு என்றது இப்பிறவியின் முயற்சியும், பழைய
பான்மை மிகும் பண்பு
என்றது அதற்கு ஆதரவாய் முன்னைப்
பிறவியிற்கொண்ட சைவ ஒழுக்க முயற்சியும் குறித்தன. பான்மை - பழைய
வாசனை. முன்பாட்டில் நின்ற விதி என்றதும், "அன்பர் அன்பின் பால்
உளதாய்" (1241) என்றதும் காண்க.

     பரிவும் - பண்பும் - விரவ - இவ்வாறாகப் பொருந்தி நிற்க இந்த
நிலையினை(க் கண்டான்) என்க.

     மேதக்கவர் - மேன்மையுடையவர். மேதகைமை - மேன்மை.

     பெருமை வெளிப்படுப்பான் - மேன்மையினை உலகர்க்குப்
புலப்படும்படி வெளிப்படுத்திக் காட்டும் பொருட்டு. வெளிப்படுத்திக்
காட்டாவிடில் அறிவார் ஒருவருமிலர் என்பதாம். பானீற்று வினையெச்சம்.
வெளிப்படுப்பான் - சடை முடியார் - அருளாம் என்ன அறிவழிந்து -
வெளிப்படுத்துவதற்காகச் சடையார் மேற்கொண்ட அருள் என்னும்படி
மறையோன் அறிவழிந்தனன். அவன் அறி வழியாது, கோபம் மேவாது
நேர்கண்டிருப்பானாயின் தான் அன்று செய்ததுபோலச் செய்திருக்கமாட்டான்;
அப்படிச் செய்திரானாயின் விசாரசருமரது பெருமை இவ்வுலகில்
வெளிப்பட்டிராது; ஆதலின் அருளே அவனை அறிவழியச் செய்தது என்ன
என்றார். அருள் அறிவுருவாதலின் அறிவழியச் செய்யுமோ