|
பிரமசாரிகள்
- பன்மை விகுதி பெருமைகாட்டி நின்றது. ‘உம்மை
சிறப்புணர்த்திற்று.
மூழ்கி
- இதனை நித்த நியமமாய்ச் செய்து பூசனை செய்தனர்.
இந்நாட் பூசையுடன் இனி மூழ்கும்செயல் வேண்டப்படாமல் "அந்த உடம்பு
தன்னுடனே அரனார் மகனா" ராய்(1264) விளங்கும் பெருமை குறித்து இங்குச்
சொல்ல வேண்டியிருத்தலின், முன்னர், முதலிற் பூசைசெய்யத் தொடங்கின
செயல் கூறும்போது (1237-ல்) இதனைச் சொல்லாதுவிட்டதிறம் காண்க.
முன்புபோல
மணற்கோயி லாக்கி - முன்பு ஆக்கியதிறம் 1237-ல்
விளக்கப்பட்டது. (முன்புபோல) முகைமென் மலர் கொய்து
என்க.
இதனை 1238-ல் காண்க.
பின்பு
வரும் ஆன்முலை பொழிபால் - பின்பு வரும் - மலர்
கொய்துவைத்த பின்பு செய்ய வருவதாகிய இச்செயலை விரிவாய் 1239-
1240-ல் உரைத்தபடி இங்கும் கொள்க. பால் கறந்து வெகுநேரம் தங்கினால்
அதன் தன்மை மாறுமாகையால், ஏனைப்பொருள்களை அமைத்தபின்
அதனைத்தேடிக் கொள்வது அமைவுடைத்தாம் என்பது குறிக்க
அம்முறைபற்றியே இறுதியிற் கூறியதுடன் பின்பு வரும் என்றும் குறித்தார்.
இனி, அன்று கொண்டபால் முன்னை நாட்களிற் கொண்ட பால்போலன்றிப்
பின்னே வரும் சரித விளைவுக்குக் காரணமாய் வருதல் குறிப்பிற்
கூறியபடியுமாம். "வெவ்வே றியல்பினில்" (811) என்றதும் ஆண்டுரைத்த
வையும் காண்க.
ஆன்முலை
பொழிபால் - கறவாமல் ஆன் தாமே பொழிந்தன
என்ற பொருள் தோன்றப் பொழிபால் என்றார்.
"முலைதீண்டச் செழும்பால்
பொழிந்தனவால்" (1239) என்றது காண்க.
பெருகுங்குடங்கள்
பேணுமிடந் தன்பாற் கொணர்ந்து தாபித்து -
1240 பார்க்க. பெருகுங்குடங்கள் என்றது
பால் நிறையப் பொங்கப்பெற்ற
என்ற பொருளில் வந்தது. பேணும் இடம்- ஆலயத்தினுள் திருமஞ்சனக்
குடங்கள் வைக்கவேண்டிய முறையின் அமைத்த இடம்.
பிறவும்
வேண்டுவன- திருமஞ்சன நீர் - தருப்பை
முதலாயின.
இதற்குச் சிவலிங்கம் முதலாயின என்பர் ஆறுமுகத்தம்பிரானார்.
"அரனார்க்கு முன்புபோல மணற் கோயிலாக்கி" என்றதனால் சிவலிங்கம்
முன்னரே பெறப்பட்டமை கண்டு கொள்க.
வேண்டுவன
பிறவும் என்க. பூசைக்குரிய சாதனங்களையும்
வேண்டுவனவாகிய பிறவற்றையும், இரண்டனுருபு தொக்கது.
சமைத்தல்- தேடிக் கொள்ளுதலும், தேடியபின் அவற்றைப் பூசைக்
குரியபடி மாலை முதலியன போல அமைத்துக் கொள்ளுதலுமாம். 46
1252. (வி-ரை.)
நின்ற விதியின் விளையாட்டால் -
சைவாகமங்களின் நிலைத்த விதிகளின்படியே விளையாட்டாகவும். நின்ற
விதியின் - விதியின் நின்ற என்று கூட்டி முன்னைப் பிறவி வாசனை
யினால் அவரது மனத்தினுள்ளே தோன்றி நின்ற என்றுரைத்தலுமாம். "முந்தை
யறிவின் றொடர்ச்சியினால்" (1218), "செம்மை நெறியே உறுமனத்தில்" (1236),
"முன்னை யர்ச்சனையின் அளவின் றொடர்ச்சி விளையாட்டா" (1237) என்று
முன்னர்க் கூறியவை காண்க.
நிறைந்த அரும் பூசனை - முன்னர், "குறித்தபூசை" (1241), "நிறை
பூசனை" (1243) என்ற ஆசிரியர் இங்கு இனி நிறைவாக வுள்ளதனை இவ்வாறு
இறந்த காலக் குறிப்பொடு கிளந்தது அன்றைய நாட்பூசை விரைவில் நிறைவு
பெறும் அரிய பூசையாய் விளங்குவ தொன்றாகும் என்ற குறிப்புப்பெறக்
கூறியபடியாம். "தேடாதன வன்பினி னிரப்பி" (1242) என்றபடி பூசையின்
எல்லாவுறுப்புக்களும்
|