பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1595

 

     அப்பால் - சிறிது தூரத்திற் கப்பால். அகரம் சேய்மைச் சுட்டு.
மகனாசெய்வதனைத் தான் நன்கு காணவும் தன்னை அவர் காணாமலும்
இருக்கும் இடம் தேடினானாதலின் தூரத்திலிருந்த மரத்தை நாடியதுடன்
அதன்மேல் ஏறி ஒளித்தும் இருந்தான்.

     குரவு - குரா என்பது ஒருவகை மரம். இதன் மலரைச் சிவபெரு மான்
உகந்தணிவர். "குராமலரோ டரா மதியஞ் சடைமேற் கொண்டார்" என்ற
திருத்தாண்டகமும், "திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற" என்ற
திருவிசைப்பாவும் காண்க. இதனை நந்தவனங்களின் வைத்துப் போற்ற
வேண்டிய மரங்களினுள் வகைப்படுத்தி 240-ல் ஆசிரியர் கூறியதும் ஆண்டு
உரைத்தவையும் பார்க்க. 45

1251.

அன்பு புரியும் பிரமசா ரிகளு மூழ்கி யரனார்க்கு
முன்பு போல மணற்கோயி லாக்கி முகைமென் மலர்கொய்து
பின்பு வருமான் முலைபொழிபால் பெருகுங் குடங்கள்
                                        பேணுமிடந்
தன்பாற்கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன
                                       சமைத்தார், 46
   
1252.
நின்ற விதியின் விளையாட்டா னிறைந்த வரும்பூ
                                      சனைதொடங்கி
யொன்று முள்ளத் துண்மையினா லுடைய நாதன் றிருமுடிமேன்
மன்றல் விரவுந் திருப்பள்ளித் தாமஞ் சாத்தி மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்க ளெடுத்து நயப்புற் றாட்டுதலும், 47
   
1253.

பரவ மேன்மே லெழும்பரிவும் பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பான் மேவும் பெருமை வெளிப்படுப்பா
னரவ மேவுஞ் சடை முடியா ரருளா மென்ன வறிவழிந்து
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும் படிகண்டான்.   48

     1251. (இ-ள்.) வெளிப்படை. அன்பு புரிகின்ற பிரமசாரிகளாகிய
விசாரசருமனாரும், நீரில் மூழ்கிப், பின், சிவபெருமானுக்கு முன்னை
நாட்களிற் போல மணலாற் சிவாலயமும், சுற்றாலயமும் ஆக்கி, அன்று
மலரும் அரும்புகளையும் மெல்லிய மலர்களையும் கொய்து, பின்புவரும்
பசுவின் முலைபொழிபால் பெருகும் குடங்களைப் பேணும் இடத்திற்
கொண்டு வந்து தாபித்துப் பிறவும் வேண்டுவனவற்றை அமைத்துக்
கொண்டாராகி, 46

     1252. (இ-ள்.) வெளிப்படை. நின்ற விதியின் விளையாட்டாலே
நிறைந்த அரிய பூசனையைத் தொடங்கி ஒன்றிய உள்ளத்தின்
உண்மையினாலே ஆளுடைய நாதரது திருமுடிமேல் வாசனை பொருந்திய
திருப்பள்ளித் தாமத்தைச் சாத்தி அருச்சித்து நன்றாக நிறைந்த இனிய
பாற்குடங்களை எடுத்து ஆசையுடன் திரு மஞ்சனமாக ஆட்டுதலும். 47

     1253. (இ-ள்.) வெளிப்படை. பரவ மேன்மேல் எழுகின்ற அன்பும்,
முன் பிறவி வாசனை மீக்கூரும் பண்பும் பொருந்த, மேன்மையுடைய
அவரிடம் உள்ள பெருமையை வெளிப்படுத்துவதற்குப், பாம்பினை யணிந்த
சடைமுடியுடைய சிவபெருமானது அருளேயாமிது என்று சொல்லும்படி
அறிவழிந்து, குராமரத்தின் மேவி இருந்த முதுமறையோனாகிய எச்சதத்தன்,
கோபமூளும்படி அதனைக்கண்டனன். 48

     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     1251. (வி-ரை.) அன்பு புரிதல் - அன்பினால் தூண்டப்பட்ட
செயல் செய்தல். அன்பு- அதனால் விளையும் செயலுக்காயிற்று. அன்பு
கொண்ட என்றலுமாம்.