|
குறிப்பினா லுணர்த்தினார்.
மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பால் வீணாய்ப்
போயினதெனக் கேட்டதும் அவன் கொண்ட அச்சமும்,
அந்திதொழுது
என்றதனால் அவனது ஒழுக்கமும் புலப்பட்டமை
காண்க. "இருமை
வினைக்கும் ஒருவடிவாம்" (1215) என்றபடி அவன் நல்வினைக்கும்
காரணனாதலின் பழியஞ்சிக் கவன்றான் என்பதாம்.
மறைந்து
சென்றான் மறை முதியோன் - பின் சென்றதனால்
எழுவாயும் பின் வந்தது. மறை - வேதம் என்றும், மறைதல் என்றும்
இருபொருளும் படநின்றது. பின்னரும் மறைந்து - குரவின்மிசை யேறி
ஒளித் திருந்தான் (1250) என்பது காண்க. விசாரசருமரின் ஒளியின்
முன்அவன் மறையவேண்டிய நிலையிலுள்ளவனே யாவன் என்க.
"நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்" என்பது நீதிநூல்.
மகனாரிடத்தில் நேரில் கேட்டும் அல்லது கூடவே சென்றும் அறிந்து
கொள்ளும் நிலையினையுடைய தந்தை இவ்வாறு மறைந்து நிற்கவேண்டும்
அவசியமில்லையாதலின் அதுபற்றி முன்னர் "அதுவே நஞ்சு மளிக்கு மரவு
போல்" (1215) என்று உவமித்ததன் பொருத்தமும் கண்டுகொள்க. மேலும்
இக்குறிப்பினால் அவனை "மறையோன்" (1250), "முதுமறையோன்" (1253),
"மாலாமறையோன்" (1255), "மறையோன்" (1256), "முதுமறையோன்" (1263)
என்றே கூறுவதும் உய்த்துணர்ந்து கொள்க. அவன் காசிப கோத்திரத்தில்
உதித்து மறைபயின்று ஒழுகிய அளவில் மறையோனாய் முதியோனாய்
நின்றொழிந்தனனன்றி மறையின் உட்பொருளாகிய சிவஞனாத்தினை
உணராது மடவோனாய் நின்றான் என்பது குறிப்பு. பின்
- காலமு மிடமும்
குறித்தது. 44
1250.
|
சென்ற
மறையோன் றிருமகனார் சிறந்த வூரா னிரைகொடுபோய்
மன்றன் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி மணற்குறையி
லன்று திரளக் கொடுசென்ற வதனை யறிந்து மறைந்தப்பா
னின்ற குரவின் மிசையேறி நிகழ்வ தறிய
வொளித்திருந்தான்.
45 |
(இ-ள்.)
வெளிப்படை. அவ்வாறு சென்ற மறையோனாகிய எச்சதத்தன்
தனது திருமகனாராகிய விசாரசருமனார் சிறந்த ஊர் ஆனிரைகளைக்
கொண்டு போய் மணங்கமழும் புறவினிடத்து மேய்ப் பாராகி மண்ணியாற்றின்
மணற்குறையில் அன்று திரட்டிக்கொண்டு சென்ற அச்செயலை அறிந்து,
மறைந்து அப்பால் நின்றதொரு குராமரத்தின்மேல் ஏறி இனி நிகழ்வதனை
அறிவதற்காக ஒளித்திருந்தான்.
(வி-ரை.)
திருமகனார் - மேய்ப்பார் - கொடுசென்ற அதனை -
மறையோன் - அறிந்து - மறைந்து - அறிய - ஒளித்திருந்தான் என்று
கூட்டியுரைத்துக்கொள்க.
சிறந்த
ஊர் என்றும், சிறந்த
ஆனிரையென்றும் கூட்டி உரைக்க
நின்றது. இரு வழியும் சிறப்பு விசாரசருமனாரது தொடர்பினால் உளதாகிய
தென்க.
மன்றல்
மருவும் புறவு - மன்றல் - மணம். இது
புறவினிற் பூக்கும்
பலவகை மரங்களின் மலர்கள் - இலை - தளிர் - என்றி வற்றாலாவது.
"மணந் தங்கிட" (1238); "வண்டு மருவும் திருப்பள்ளித்தாமம்" (1240);
"கந்தமலி" (1247) என்பன காண்க.
அன்று - விசாரசருமனார் திருவருள் பெறவும், எச்சதத்தன்
கழுவாயில்லாத சிவாபராதமும் நீங்கப்பெற்றுக் கதிபெறவும், இச்சரித
நிகழ்ச்சியினால் உலகம் சிவபூசைப் பயன் பெற்றுய்யவும் நின்ற ஒப்பற்ற
திருநாளாதலின் அதனை அன்று என உயர்வு தோன்றச்
சுட்டிக் கூறினார்.
அன்று - அன்றும். உயர்வு சிறப்புந் தந்து
நின்ற இறந்ததுதழுவிய
எச்சவும்மை தொக்கது.
அறிந்து
- அறிய- திரளக் கொடுசென்ற அதுவரைக்கும்
அறிந்தனன்;
இனி மேல் நிகழ்வதனை அறியநின்றான் என்க.
|