பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1605

 

"மற்றவர்க்கு நந்தம் கரணம்போ லல்லாமை காண்" என்ற
திருக்களிற்றுப்படியாரும், "ஊனுயிர் வேறு செய்தா னொமத்தான் மலை
யுத்தமனே" என்ற நம்பிகள் தேவாரமும் "மாயை மாமாயை மாயா வருமிரு
வினையின் வாய்மை, ஆயவா ருயிரின் மேவும் அருளெனி லொளியாய்
நிற்கும்" (சிவப்பிரகாசம் - 70) என்ற ஞானசாத்திரமும் பிறவும் காண்க.
கைதீண்டினதால் மாயை யாக்கையே அதற்கு மேற்பட்ட அளவில்லா
உயர்வுடைய சிவமயமான யாக்கையாக மாற்றப்பெற்றது; பரிசவேதியானது
தான் தீண்டிய பொருளைப் பொன்னாக்குதல் போல என்க. சிவமயம் -
சிவசொரூபம். திருவருளில் மூழ்கி - அருட்பெருக்கினுள் அழுந்தித்
தன்வசமிழந்து. அருள் நிறைவு பெற்று.

     பூமேல் அயன் முதலாந் துங்க அமரர் துதிசெய்ய - பூ மேல்
அயன் - பூ
- தாமரை; தாமரையில் இருக்கும் பிரமன். துங்கம் - பெருமை.
சிவத்துவ விளக்கமாகிய திருவருள் வெளிப்பாடு கண்டு அமரர் துதித்தனர்
என்க. "வானவர்பூ மழைபொழிந்தார்" (130) என்பது முதலிய இடங்கள்
காண்க.

     பூ - பூமி என்று கொண்டு, அயன் முதலாம் பெருந் தேவரும் தமது
தேவருலகம் விட்டுப், பூ மேல் - பூமியில் வந்து துதிக்க
என்றுரைத்தலுமொன்று. "இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று"
விரும்பிப் பிரமன் முதலியோர் பூவுலகில் வந்து சிவபூசை செய்கின்றார்கள்;
அவர்கள் எல்லாம் சிவபூசையின் பயன் பெறச் சண்டீசரைத்
துதிக்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார் என்றலுமாம் என்க.

     சூழ்ந்த ஒளியில் தோன்றினார் - தம்மை உள்ளடக்கி மேற் சூழ்ந்து
எழுந்த சிவவொளியில் விளங்கினார். சிவப்பிரகாசம் என்பது வடமொழி.
இவ்வொளி ஞானக் கண்ணாற் காணப்படுவதாகும்.

     சிவபெருமான் வெளிப்பட்டுக் கைதீண்டியதனால் மாயையுடம்பு
சிவவுடம்பாய் விளங்கினமை இப்பாட்டிற் கூறப்பட்டது. இதனை. "அந்த
உடம்பு தன்னுடனே அரனார் மகனா ராயினார்" (1264) என்பது காண்க.

     சூழ்ந்த ஒளி என்பது சிவத்துவ விளக்கமாகிய பேரொளி. இத்தகைய
ஒளி பெரியோர்களுடலைச் சூழ்ந்து விளங்குமென்பது. "அங்க ணோரொளி
யாயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்று" (26) என்றதனாலும் காண்க. 55

1261.
அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிப னாக்கி யனைத்து
                                     "நாம்
உண்ட கலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச்
சண்டீசனுமாம்பதந்தந்தோ" மென்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச்
                                     சூட்டினார்.
56

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்களது பெருமானாகிய சிவபிரானும்
விசாரசருமனாரைத் தொண்டர்களுக்கெல்லாம் அதிபராக ஆக்கி, "நாம்
உண்டபரிகலமும், உடுக்கும் உடைகளும், சூடும் மாலை அணிகலன்
முதலியனவும் ஆகிய அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசன்
ஆகும் பதவியையும் தந்தோம்" என்று சொல்லி அவருடைய அழகிய பெரிய
திருமுடிக்குத் தமது பிறைச்சந்திரன் இருக்கும் சடையிற்சூடிய கொன்றைமலர்
மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.

     (வி-ரை.) அதிபன் ஆக்கி - சூழ்ந்தஒளியிற் றோன்றிய அவரை
எனச் செயப்படு பொருள் முன்பாட்டிலிருந்து வருவிக்க.

     தொண்டர்தமக்கு அதிபன் ஆக்கி- தொண்டர்களுக்கெல்லாம்
நாயகராக - முதல்வராகச் செய்து. "சோதி மணிமுடித் தாமமு நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்" (திருப்பல்லாண்டு) என்றது காண்க.