|
உனக்காக- தந்தையின் உரிமை மகனாருக் காகும் என்றபடி.
"அடுத்ததாதை இனி உனக்கு நாம்" (1259) என்று கொண்டாராதலின் தமது
உரிமைகளையெல்லாம் தந்து மகனாராக்கிக் கொண்டருளினர் என்க.
சூட்டுதல் - மகுடம் சூட்டுதலைக் குறிப்பாலூணர்த்தி நிற்றலும் காண்க.
மதிசேர்சடைக் கொன்றை மாலை என்ற குறிப்புமது.
56
|
1262.
|
எல்லா
வுலகு மார்ப்பெடுப்ப வெங்குமலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர் பாடி யாடிக் களிபயிலச்
சொல்லார் மறைக டுதிசெய்யச் சூழ்பல் லியங்க ளெழச்சைவ
நல்லா றோங்க நாயகமா நங்கள் பெருமான்
றொழுதணைந்தார்.
57 |
(இ-ள்.)
வெளிப்படை. எல்லா உலகங்களில் உள்ளோரும்
மகிழ்ச்சியினால் அரகரவென்று ஆரவாரிக்கவும், எவ்விடத்தும் பூமழை
பொழியவும், பற்பல ஆயிரம் சிவநணநாதர்கள் பாடியும் ஆடியும்
களிப்படையவும், வேதங்கள் மொழிகளால் நிறைந்த துதிகளைச்செய்யவும்,
நாற்புறமும் சூழ்ந்த பலவகை வாத்தியங்கள் முழங்கவும், சைவ
நன்னெறியானது ஓங்கி வளரும்படியாக, நமது பெருமானாகிய சிவபிரானைத்
தொழுது, தலைவராகத் தமது சண்டீசபதவியில் அணைந்தனர்.
(வி-ரை.)
ஆர்ப்பெடுப்ப - பொழியக் - களிபயிலத் துதிசெய்ய - எழ
- என்றவை முன் ஐந்து பாட்டுக்களிற் போந்த திருவருள் வெளிப்பாடுபற்றி
நிகழ்ந்தவை.
சைவ
நல்லாறு ஓங்க என்பது ஓங்கும்பொருட்டு என நாயனார்
நாயகம் பெற்று அணைந்ததன் பயன் குறித்தது. சிவபூசையின் பெருமையை
உலகம் அறிந்து பயன்பெறுதல் குறிப்பு. "சைவ வாய்மை வளர" 1217
என்றதை இங்கு நினைவு கூர்க.
நாயகமா
- தலைவராக. முன்பாட்டிற் கூறியபடி "தொண்டர்தமக்
கதிபனாக்கி" னாராதலின் அவ்வாறே நாயகமாக அணைந்தனர். ஆக -
என்பது ஆ - என ஈறுகுறைந்து வந்தது.
நங்கள்
பெருமான் - தொண்டர்தமக் கதிபராக ஆயினமையின்
நமக்கெல்லாம் தலைவர் - பெருமானாவர் என்பது குறித்து நின்றது.
தொழுது
- தமக்கு மாலைசூட்டிப் பதமளித்த சிவபெருமானைக்
கும்பிட்டு.
அணைந்தார்
- தமக்குத் தந்த சண்டீசராகிய பதத்தில் சேர்ந்தனர்
என்க.
கணநாதர்
பாடி ஆடிக் களிபயில - இவை இவரைத் தலைவராகக்
கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியின் விளைவு.
மறைகள்
சொல்லார் துதிசெய்ய என்க.மறைகள் தாமே துதி
முழக்கின என்பதாம். இயங்கள் எழ - இவை
தேவதுந்துபி முழக்குக்கள்.
மலர்மாரி - தேவர்கள் பொழியும் கற்பகப்பூமழை. 57
|
1263.
|
ஞால
மறியப் பிழைபுரிந்து நம்ப ரருளா னான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந் திருக்கையிற்
கோல மழுவா லேறுண்டு குற்ற நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான் முதுமறையோன்.
58 |
(இ-ள்.)
வெளிப்படை. வயதான் முதரிந்த மறையோனாகிய எச்சதத்தன்
உலகமறியும்படி சிவாபராதஞ் செய்தும், சிவபெருமானது திருவருளினால், நான்
மறையின் நல்ல ஒழுக்கம் விளங்கும் சேய்ஞலூர்ப் பிள்ளையாருடைய
திருக்கையில் ஏந்திய அழகிய மழுவினாலே எறியப்பட்டதனால், அந்தப்
பிழையினின்றும் நீங்கினவனாய்த், தன் சுற்றத்தாருடனே மூலமுதல்வருடைய
சிவலோகத்தில் சேரும் பேற்றினைப்பெற்றான்.
|