பக்கம் எண் :


1608 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     (வி-ரை.) ஞாலமறிய - உலகத்தாரெல்லாருங்காண.
வெளிப்படையாக.

     பிழை புரிந்தும் - பிழை - சிவாபராதம் - சிவனடியாரிடத்திலும்
சிவனிடத்திலும் குற்றம் செய்தமை. உம்மை இழிவு சிறப்பு. பிழைபுரிந்தும்
குற்றம் நீங்கிச் சிவலோக மெய்தப்பெற்றான் என்க. பிழை இங்குக்
கழுவாயில்லாத சிவாபராதம் குறித்தது. அந்தப் பெரும் பிழையின் குற்றமும்
நீங்கப்பெற்ற காரணம் கூறுவாராய், அது நம்பாருளால் பிள்ளையார் தம்
திருக்கையிற் கோலமழுவால் ஏறுண்ட
மையாம் என்று மேலே தொடர்ந்து
கூறுவது காண்க.

     நம்பாருளால் - இவ்வாறு இக்குற்றத் தீர்வு நம்பரருளாதலுக்குக்
காரணம் இரண்டு வகையாலறிவித்தார். அவை : "மேதக்கவர் தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான், அரவ மேவுஞ் சடைமுடியா ரருளா
மென்ன" (1253) என்றதனால் எச்சதத்தனுக்கு வந்த கோபம், விசாரசரு 
மனாரது பெருமையினை உலகுக்கு வெளிப்படுத்துவதற்குத் திருவருளால்
வந்தது என்பதொன்று; "கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் வந்து
மழுவாயிட" (1256) என்றதனால் அச்சிவாபராதத்தினைப் போக்க அருளினால்
கோலே மழுவாயிற்று என்பதொன்று என்க.

     நான்மறையின் சீலம் திகழும் சேய்ஞலூர் எனவும், சீலம் திகழும்
பிள்ளையார்
எனவும் உரைக்க நின்றது. திகழும் - ஊர் என்ற பொருள்,
மறையவர்பதி யாதலின் திகழ்தற் கிடமாகிய ஊர் என்றதாம்.

     சேய்ஞலூர்ப் பிள்ளையார் - சேய்ஞலூரில் அவதரித்த சிவ
குமாரர் என்க. மூத்த பிள்ளையார் என்று விநாயகப் பெருமானையும்,
இளைய பிள்ளையார் என்று முருகப் பெருமானையும், ஆளுடைய
பிள்ளையார் என்று திருஞானசம்பந்தப் பெருமானையும் சிவபெருமானது
பிள்ளைகளாகும் காரணத்தால் வழங்குதல் காண்க. "யாவர்க்குந்
தந்தைதாயெனுமவரிப் படியளித்தா, ராவதனாலாளுடைய பிள்ளையா ராய்"
(திருஞான - புரா - 69) என்று இச் சொற்பொருளை விரித்தமை காண்க.
ஆர்
- விகுதி சிறப்புணர்த்திற்று.

     பிள்ளையார் என்றும், திருக்கை என்றும், கோலமழு என்றும்
சிறப்பித்தது தீர்த்தற்கரிய சிவாபராதத்தையும் தீர்க்கத்தக்க திருவருட்குக்
காரணமாய் நின்ற சிறப்பு உணர்த்துதற்கு என்க.

     ஏறுண்ணுதல் - எறியப்படுதல். ஏறுண்டு - ஏறுண்டதினால். ஏறுண்டு
- நீங்கி என்க. உண்டு - பெற்று. ஏறு - எறிகை.

     நீங்கி - எய்தப்பெற்றான் - நீங்கியதனால் - சேரும் பேறு 
பெற்றனன். ஏறுண்டதனால் நீங்கினான்; நீங்கியதனால் எய்தினான் என்று
ஒன்றற்கொன்று காரணமாயிற்று. "தந்தைதா ளொடும் பிறவித்தா ளெறிந்து"
(திருவிளை - புரா) என்றதும் காண்க.

     சிவலோகம் எய்தப்பெற்றான் - தனது குற்றத்தினால் நரக
லோகத்தில்நெடுங்காலம் கிடக்கவேண்டியவன் அதற்கு மாறாகச்
சிவலோகத்தை யடையப்பெற்றனன் என்பது குறிப்பு. இவன் சிவனடி யாரைப்
பகைத்துச் சிவலோகமடைந்தவர்களுள் ஒருவன். திருத்தொண்டர்புராண
வரலாறு (48) பார்க்க.

     முதுமறையோன் - முதுமை வயதளவின்நின்றது. "மறைமுதியோன்"
(1249) என்றவிடத்துரைத்தவை பார்க்க.

     சுற்றமுடன் - இவர்கள் விசாரசருமனாரின் தொடர்புகொண்ட
புண்ணிய விசேடத்தினால் சிவனுலகடைந்தவாகள். "மூவேழ் சுற்ற முரணுற
நரகிடை, யாழா மேயரு ளரசே போற்றி" என்ற திருவாசகம் காண்க.
"கோத்திரத்திலிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ
மென்றார்" என்ற அருணாசல புராணமும் பார்க்க.