|
பிள்ளையார்தங்
திருக்கையின் கோல மழுவா லேறுண்டு குற்ற
நீங்கினானாரனும், மூலமுதல்வர் சிவலோகமெய்தப்பெற்றுச் சிவபெரு மானது
அங்கீகாரமும் பெற்றானாயினும், எங்கள் ஆசிரியர் பெருமானது
திருவாக்கானது அடியார்க்குச் சொல்லும் சிறப்பினை வேறெவருக்கும்
சொல்ல இடந்தராதென்பதனை அவன் சிவலோகமடைந்த இந்த இடத்தினும்
"பெற்றான் முதுமறையோன்" என்று அவனை முன்போலவே ஒருமையிலும்,
நாயனாரைப் "பிள்ளையார் தம்திருக்கை" என்று சிறப்புப்பன்மையிலும்
கூறியதனாலறிக. இதுபற்றி முன்னர் உரைத்தவையும் நினைவு கூர்க. 58
|
1264.
|
வந்து
மிகைசெய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவர்
அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்;
இந்த நிலைமை யறிந்தாரார்? ஈறி லாதார் தமக்கன்பு
தந்த வடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்? 59 |
(இ-ள்.)
வெளிப்படை. வந்து தகாதகாரியம் செய்த தந்தையுடைய
கால்களை மழுவினால் வெட்டி வீழ்த்திய மறைச்சிறுவர் அந்த உடம்பு
டனே சிவபெருமானாரது திருமகனாராக ஆயினார். யாவரே இந்த
நிலைமையினை அறிந்தவர்கள்? சொல்லப்புகுவோமாகில் எஞ்ஞான்றும்
ஈறில்லாதவராகிய சிவபெருமானுக்கு அன்பு தந்த அடியார்கள் செய்தவை
எவையோ அவையே தவமாகுமன்றோ?
(வி-ரை.)
வந்து - "மைந்தனார் தாம் போயினபின் மறைந்து
சென்று"
(1249) எனவும், குராமரத்தின் மேலிருந்து கோபத்துடன் வந்து, எனவும்
உரைக்க. வந்து - வந்தும் - நல்ல குலத்தில்,
நல்ல கோத்திரத்தில், நல்ல
மரபில் வந்தும் என்று, உயர்வு சிறப்பும்மை தொக்கதாகக் கொண்டு
உரைப்பினும் பொருந்தும்.
மிகை- செய்யத்தகாத செயல். வரம்புகடந்த செய்கை.
அந்த
உடம்பு - அந்த - இப்பூவுலகில் ஒரு பெயரும் உருவும்
தாங்கி எச்சதத்தனுக்கு மகனாராகப் பிறந்து வளர்ந்து இதுகாறும்
செயல்செய்த அந்த என முனனறிசுட்டு. உடம்பு-
"அங்கண் மாயை யாக்கை"
(1260) என்றபடி மாயா உடம்பு.
அந்த
உடம்பு தன்னுடனே அரனார் மகனா ராயினார் என்றது
மாயை உடம்பு
அதன் தன்மை திரிந்து சிவமயமாய்ப் பொங்கி எழுந்து
திருவருளின் மூழ்கிச் சிவவொளியில் தோன்றியதாதலின் அவ்வுடம்புடனே
சிவனார் மகனாராவதற்கு ஏதுவாயிற்று. "ஊனுயிர் வேறுசெய்தான்",
"யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான்", "மானவ யாக்கையொடு"
என்பன இத்தன்மையை விளக்குவனவாம்.
அறிந்தார்ஆர்?
வினா ஒருவரும் அறியும் வவியிலர் என்பது
குறித்தது. எவரும் பசுஞான பாசஞானங்களால் அறிய வலியிலர்.
அன்புதந்த
- தம்மையும் தம்முடையவாகக் கொண்ட உயிர்ப்பொருள்
உயிரில் பொருள் எல்லாவற்றையும் இறைவருக்குத் தந்த; அவருக்கு
உடைமையாக ஒப்புக்கொடுத்த.
அடியார் - அடிமை செய்வோர். தம்மையே தந்து விட்டமையால்
அடிமைகளாய்த் தம்வசமின்றித் அவர் வசமேயாயினர் என்று குறிக்க இங்கு
அடியார் என்ற சொல்லாற் கூறினார்.
செய்தனவே
தவமாம் அன்றோ? ஏகாரம், தவமென்று உலகில்
விதிக்கப்படாதனவும் விதிக்கு மாறாயினவும் என்பதனைக் குறிப்பாலுணர்த்தி
நின்றது. "செய்தனவே தவமாக்கும் அத்தன்" என்ற திருவாசகச் சொல்லும்
பொருளும் ஆகிய ஆட்சி போற்றப்பட்டது காண்க. (திருத்தோணோக்கம் -
6.)
|