பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்703

 

     கருவூர் - தலவிசேடங்க காண்க.

     சுடர்மணி வீதி - இதுபற்றி முன்னர்த் திருநகரச் சிறப்பிலும்
பிறாண்டும் உரைத்தவை காண்க.

     மூதூர் - பழைமை பொருந்தியவூர். ஊரின் பழைமை மேலுரைத்தனர்.
2

553.
மாமதின் மஞ்சு சூழு; மாளிகை நிரைவிண் சூழுந்;
தூமணி வாயில் சூழுஞ்; சோலையில் வாசஞ் சூழுந்;
தேமல ரளகஞ் சூழுஞ் சிலமதி தெருவு சூழுந்;
தாமகிழ்ந் தமரர் சூழுஞ் சதமக னகரந் தாழ.      3

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்கள் தாம் மகிழ்ந்து சூழும் இந்திர
பட்டினமும் தாழும்படியாக, அந்நகரிலே பெரிய மதில்கள் மேகங்களாற்
சூழப்பெற்றிருக்கும்; மாளிகைகள் வரிசைபெற ஆகாயத்தில் ஓங்கி
விளங்கும்; தூய மணிகள் வாயில்களிலே சூழ்வன; சோலைகளில் மலர்களின்
வாசம் மிகுந்திருக்கும்; கூந்தலிற் றேன்பொருந்திய மலர்களைச் சூழ அணிந்த
மதிபோன்ற முகத்தினையுடைய சில பெண்கள் தெருவிலே சூழ்வர்.

     (வி-ரை.) இப்பாட்டால் நகரச்சிறப் புரைக்கின்றார். மாமதில் -
சோழர்களது தலைநகரங்களில் ஒன்றாதலால் உயர்ந்த மதிலரணை யுடையது
என்பார் மாமதில் என்றார். மதில் மஞ்சு சூழும் என்பது மேகந் தவழும்படி
உயர்ந்த மதில் என்றதாம்.

     மாளிகைநிரை விண்சூழும் - மாளிகைநிரை - வரிசையாக
ஓங்கிய மாளிகைக் கூட்டங்கள். விண் சூழ்தலாவது ஆகாயத்தை அளாவி
நிற்றல். "தவளந்நெடுமாடம், விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே"
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தையும் அங்கு ஆசிரியர் காட்டிய
உட்குறிப்பினையும் இங்கு வைத்துக் காண்க.

     வாயில் தூமணி சூழும் என மாற்றுக. வாயில்களில் மணிகள்
கட்டியிருக்கும் என்பது. அரசரது தலைநகரமாதலின் வாயிலிலே
ஆராய்ச்சிமணி கட்டுதல் முன்னாள் வழக்கு. திருநகரச் சிறப்புப் பார்க்க.
அநீதி நிகழின் அதனை அறிந்து போக்கி நீதி வழங்கித் தூய்மை செய்தற்
கருவியாதலின் தூமணி என்றார். தூய்மை செய்யும் மணிகள் இழைத்தவாயில்
என்றலுமாம். வாயிலை அழகுபடுத்த மணிகள் கட்டுதலும் மரபு.

     அளகம் தேமலர் சூழும் சிலமதி என மாற்றிக்கொள்க. சூழும் - பெயரெச்சம். அமரர் சூழும் நகர் என்றதும் அவ்வாறே பெயரெச்சம்.
இப்பாட்டில் சூழும் என்ற ஏனைய எல்லாம் வினைமுற்றுக்கள். இவ்வாறு
ஒரு பாட்டில் சொல்லையே பல திறப்பட அடுக்கி அமைத்து அணிபெற
வழங்குதல் ஆசிரியரது சிறப்பாகிய அரிய யாப்பியல்புகளில் ஒன்று.
65, 283 முதலிய ஏனை இடங்களையுங் காண்க.

     சிலமதி - மதிபோன்ற முகமுடைய சில பெண்கள். மதி - நிறைமதி.
ஆகுபெயர்.

     தாழ - கீழ்ப்பட. விரும்ப என்றலுமாம். சூழ்தல் - சுற்றல்;

     தங்கல்; ஆராய்தல்; பரவுதல்; பொருந்தல்; விரும்புதல்.

     மகிழ்ந்து தாழ - என்று கூட்டி உரைப்பதுமொன்று. இப்பொருட்கு
சதமகன் நகரம் மகிழ்ந்து தாழ்வது இக் கருவூரை ஆண்ட முந்தைச் சோழ
அரசராகிய முசுகுந்தச் சக்கரவர்த்தியினாற் றேவருலகத்தார் பெற்ற
உபகாரம்பற்றி எனக் கொள்க.

     சதமகன் நகரந் தாழ - மதில் சூழும்; மாளிகை சூழும்; வாயில் சூழும்;
வாசஞ் சூழும்; மதி சூழும் என முற்கூறிய ஒவ்வொன்றோடும் கூட்டுக.
இக்காரணங்கள் பலவற்றாலும் சதமகன் நகரம் இதற்குத் தாழ்ந்ததென்பது.

     இந்திரன் வேண்டுகோளுக்கிரங்கி முசுகுந்தர் இந்திரலோகம் சென்று
அவனுக்குப் பகைவனாகிய அசுரனை வென்று அதற்காக இந்திரனாற் பெற்ற