செம்பொற் றியாகேசரைக்
கொணர்ந்து திருவாரூரில் மீளத் தாபித்தார்
என்பது புராண சரிதம். இதுபற்றியே சூரசங்காரத்தின் பின்னர், நன்றி
பாராட்டி இந்திரன் முருகப்பெருமானுக்குத் தன் மகளாராகிய தெய்வயானை
யம்மையாரை மணஞ் செய்வித்தபோது, கருவூரில் அரசாண்ட முசுகுந்தச்
சக்கரவர்த்திக்குத் திருமண அழைப்பு அனுப்பினான் என்ற சரிதமும்
கந்தபுராணத்திற் கேட்கப்படும். இங்குக் றிய சரிதங்களாலே தேவருலகம்
கருவூருக்குக் கீழ்த்தாழ்ந்ததும் அதனை விரும்பி வாழ்வதுமாம். அன்றியும்
இவற்றால் தேவநகரத்தின் மிக்கது கருவூராம் என நகரச்சிறப்புக் குறித்ததுவுமாம்.
மஞ்சு
சூழும் - தேவருலகத்திலே மஞ்சுகள் இந்திரனது
வாகனமாகிய யன் மட்டும் தந்து சூழ்வன; ஆயின் இங்கு அவை
இந்நகரத்தின் உயர்மதிலின்மேற் சூழ்ந்து தானத்திற்கும், சிறப்புக்கும்,
பூசனைக்கும் உதவின; சோலைவாசம் தேவமலராகிய கற்பகப் புதுப்பூ
மணத்தினை வென்றது; தேவருலகத்தில் தேவரிலொருவனான
சந்திரனொருவனே (வானவீதியில்) விளங்க, இங்குப் பலமதிகள் பல
வீதிகளிலும் விளங்கின எனப் பல வுட் குறிப்புக்களும் காண்க.
சதமகன்
- சதம் - நூறு; மகன் - (மகம் - யாகம்) யாகங்களைச்
செய்தவன். நூறு யாகஞ் செய்த காரணத்தால் இந்திரப் பட்டம் அடைந்தவன்
இந்திரன்; அது அழியக்கூடியது; ஆயின் இந்நகரத்துள்ளார் அந்த
யாகங்களின் மேம்பட்ட சிவபுண்ணியங்களைச் செய்து அழியாப் புகழ்
புண்ணியங்களை அடைந்தவர்கள் என்பதும் குறிப்பு. இச்சரித நிகழ்ச்சியும்,
அது கண்டு வணங்கி "விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்" என்றதும்
(599) இங்கு வைத்து உன்னுக.
தெருவுஞ்
சூழும் - என்பதும் பாடம். 3
544.
|
கடகரி
துறையி லாடுங்; களிமயில் புறவி லாடு;
மடர்மணி யரங்கி லாடு மரிவையர் குழல்வண் டாடும்;
படரொளி மறுகி லாடும் பயில்கொடி கதிர்மீ தாடுந்
தடநெடும் புவிகொண் டாடுந் தனிநகர் வளமை யீதால். 4 |
(இ-ள்.)
கடகரி துறையில் ஆடும் - மத யானைகள் நீர்த்துறைகளிலே
விளையாடுவன; களிமயில் புறவில் ஆடும் - களிப்புடைய மயில்கள் (நகரை
யடுத்த) புறவங்களிலே ஆடுவன; அடர்மணி...வண்டு ஆடும் - அடர்
மணிகளையுடைய ஆடரங்குகளிலே ஆடற்பெண்களின் கூந்தல்களின் மேல்
வண்டுகள் ஆடுவன; படர்...மீது ஆடும் - படரும் ஒளியுடைய வீதிகளில்
ஆடுகின்ற மிகுந்த கொடிகள் கதிர்களின்மீது ஆடுவன; தடநெடும்...ஈதால் -
விசாலமான நெடிய உலகம் கொண்டாடுகின்ற ஒப்பற்ற நகரமாகிய இதன்
வளமை இதுவாம்.
(வி-ரை.)
கடகரி துறையில் ஆடும் - கடம் - மதம்;
மதமிக்க
யானைகள் நீர் விளையாட்டு விருப்பம் மிகவே நீர்த் துறைகளில் ஆடும்
என ஆடுதற்குக் காரணங்கூறியவாறு. மதமிக்கதனாலன்றி யியல்பினாலேயும்
யானைகள் - நீராடலில் விருப்பமுடையன. இவ்விரண்டுடன் பின்னர்
இச்சரிதத்தில் வரும் பட்டவர்த்தன யானையின் செயலாகிய நிகழ்ச்சியையும்
குறிப்பா லுணர்த்தியவாறாம். துறை - இங்கு ஆம்பிராவதி நதித்துறை.
வருநதித் துறை - எனப் பின்னர்க் கூறுவது
(562) காண்க. யானை
குறிஞ்சிக்குரிய கருப்பொருளாயினும் இந்நகர் அரசரது தலைநகராதலின்
யானைப்படைக் காவலுடனிருக்கும் பண்புபற்றிக் கடகரி என்று நகரொடு
சேர்த்துக் கூறினார்.
களிமயில்
புறவில் ஆடும் - களித்தபோதே ஆடுதலால் களிமயில்
என்றார். புறவு - நகர்ப்புறத்தும் ஆற்றின்
கரையோரமுள்ள சோலைகள்.
இவைகளின் செழிப்பினாலே அங்கு மயில்கள் வாழும். "அருகுவளர் புறவிற்
பூத்த மலர்கள்" என்ற சண்டீச நாயனார் (33) புராணமுங் காண்க. புறவு
-
முல்லை நிலம் என்பாருமுண்டு. எங்ஙனமாயினும் நகர்ப்புறச் சோலைகள்
முல்லைப் பகுதியைச்
|