இவ்வகை. அடியார்க்
கடாதன அடுத்தபோது முன்வந்து தீர்க்கும் வீரம்
மற்றொரு வகை. இங்கு நாயனார் செய்கை இவ்வகைப்பட்டது. விறன்மிண்ட
நாயனார், சத்திநாயனார் திருப்பணிகளும் இவ்வாறேயாவன.
மறை,
இறைவன் வாக்காய் அநாதியாயுள்ளதென்பார் பழமறை
யென்றார். 7
558.
|
அண்ணலார்
நிகழு நாளி லானிலை யடிக ளார்க்குத்
திண்ணிய வன்பு கூர்ந்த சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம் பூப்பறித், தலங்கள் சாத்தி,
யுண்ணிறை காத லோடு மொழுகுவா ரொருநாண் முன்போல், 8 |
559.
|
வைகறை
யுணர்ந்து, போந்து, புனன்மூழ்கி, வாயுங் கட்டி,
மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்,
கையினிற் றெரிந்து நல்லகமழ்முகை யலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித் தாமங் காய்து, 9
|
560.
|
கோலப்பூங்
கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு, மலர்க்கையிற் றண்டுங் கொண்டங்,
காலய மதனை நோக்கி யங்கணர்க் கமைத்துச் சாத்துங்
காலைவந் துதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். 10 |
558. (இ-ள்.)
வெளிப்படை. பெருமையுடைய எறிபத்த நாயனார்
இவ்வாறு தொண்டு செய்து வாழ்கின்ற நாளிலே திருவானிலையில்
எழுந்தருளிய பெருமானார்க்கு உறைப்புடைய அன்பு மிகுந்த சிவகாமி
யாண்டார் என்னும் புண்ணிய முனிவனார்,
தாம், விதிப்படி பூக்களைப்
பறித்து, மாலைகட்டிச் சாத்தி, மனத்துள்ளே நிறைந்த ஆசையோடும்
ஒழுகிவருவார்; ஒருநாள் முன் வழக்கம்போல, 8
559.
(இ-ள்.) வெளிப்படை. விடியற்காலையில்
துயிலுணர்ந்து,
வெளியிற்போய்த் தண்புனலில் மூழ்கி, வாயையுங் கட்டிக்கொண்டு,
கொத்துக்களாக மலர்கள் நிறைந்த மணந்தங்கிய நந்தன வனத்திற்
சென்று, பழகிய கையினாலே தெரிந்துகொண்டு, நல்ல வாசனையுடையனவாய்
அன்றலரும் பருவமுடைய அரும்புகளை அலருஞ் சமைய முணர்ந்து,
அவற்றுள்ளே தெய்வ நாயகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித் தாமங்களைக்
கொய்து, 9
560. (இ-ள்.) வெளிப்படை.
அழகிய பூக்கூடையை நிறைத்துக்கொண்டு,
மனத்துள்ளே தூய அன்பு கொண்டு, அழகிய கையில் தண்டினையுங்
கொண்டு, அங்குத் திருக்கோயிலை நோக்கி, இறைவனுக்கு மாலை கட்டிச்
சாத்துங் காலையில் வந்து உதவுதற்காக விரைந்து வருவாராயினார். 10
இம்மூன்று
பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
558.
(வி-ரை.) அண்ணலார்
நிகழும் நாளில் - அண்ணல்
பெருமையுடையார். இவரது பெரியராந்தன்மை 536ம் பாட்டிலும், இவர்
செய்த திருத்தொண்டின் நிகழ்ச்சி மேற் பாட்டிலுங் (557) உரைக்கப் பெற்றன.
ஆனிலை அடிகள் - ஆனிலை பசுபதீச்சரம் என்னும்
கோயில். அடிகள்
- அத்திருக் கோயிலில் இலிங்கத் திருமேனி கொண்டு விளங்க வீற்றிருக்கும்
சிவபெருமான். "கருவூருள் ஆனிலையடிகள் யாவையுமாய
வீசரே" (4) என்ற
ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரங்காண்க. "ஐயாறுடைய
அடிகளோ", "எல்லாந்தா னிவ்வடிகள் யாரென்பார்", "அவரெம்
பெருமானடிகளே", "கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே", "நமக்
கடிகளாகிய அடிகளே" முதலிய தேவாரத் திருவாக்குக்கள் காண்க.
இறைவனது தன்மை பெற்று விளங்குதலால் அவனடியார்களும் அடிகள்
எனப்படுவார். இதுபற்றி 428-ம் பாட்டில் உரைத்தவையும்
|