உள்நிறை
காதலோடும் ஒழுகுவார் - உள்ளத்தினுள்ளே நிறைந்த
ஆசை காதல் - பக்தி - அன்பு என்பன ஒரு
பொருட்கிளவி.
சாத்தி
என்று மெய்யின் றொழிலும், உள் நிறை காதல்
என்று
மனத்தின் றொழிலும் கூறினார். ஏனை வாக்கின் றொழில் கூறாமையின்
காரணம் வரும் sபாட்டில் வாயுங் கட்டி என்றதனாலறிக.
விரிவு ஆண்டுக்
காண்க. 560-ம் பாட்டிலும் இவையிரண்டுமே குறித்ததுங் காண்க. "பெரும்புலர்
காலைமூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி, யரும்பொடு மலர்கள் கொண்டங்
கார்வத்தை யுள்ளேவைத்து" என்ற திருக்கடவூர்த் திருநேரிசையுங் காண்க.
ஒரு
நாள் - ஒரு - ஒப்பற்ற. இவர் பொருட்டு இச்சரித
நிகழப்பெற்றுத் திருவருள் வெளிப்படு நாள் இந்நாளேயாதலின், இவர்
திருப்பணி செய்தொழுகிய நாள் பலவற்றினும் இஃது ஒப்பற்றதாய் ஒரு
நாளாயிற்று என்பது குறிப்பு.
முன்
போல் - ஒழுகுவார் அந்த வழக்கம்போல்.
ஒழுகுவார் - என்னும்
- முனிவனார் - முன்போல் கொய்து -
கொண்டு - கொண்டு வேண்டி வாராநின்றார் - என இம் மூன்று
பாட்டுக்களும் தொடர்ந்து முடித்துக் கொள்க.
பறித்தல் சாத்துதல்
முதலிய சரியைக்கும், ஏனைக்கிரியை
முதலியவற்றிற்கும் காதல் இன்றியமையாத அடிப்படையாம். அஃதில்லையேல்
அவை பயன் பெறா என்பார் உள்நிறை காதலோடும் என்று காட்டிய
ஆசிரியர், அதனை வற்புறுத்தற்குப், பின்னரும் நெஞ்சில்
வாலிய நேசங்
கொண்டு என வரும்பாட்டிலும் கூறினார். அன்றியும் இப்பாட்டிற் கூறியது,
நியமமான நித்திய வொழுக்கத்தின் உள்ளுறையும், பின்னர்க் (560) கூறுவது
அவ்வொருநாளின் சிறப்பியல்புமாம். ஆதலின் கூறியது கூறலாகாமை காண்க.
அன்பு
பூண்ட - என்பதும் பாடம். 8
559. (வி-ரை.)
இப்பாட்டும் வரும்பாட்டும் மலர் கொய்து
திருமாலைகட்டிச் சாத்தும் சரியைப்பணியாளர் கைக்கொண் டொழுக
வேண்டிய நியமத்தை விளக்குகின்றன. சிவகாமியாண்டார் செய்த
திருப்பணியின் இயல்பு கூறும் சரித முகத்தால் உலகினர்க்கு இதன்
நியமங்களை ஆசிரியர் அழகுபெற வழிகாட்டி வகுத்தமை உய்த்துணர்ந்து
அவ்வழி உலகம் ஒழுகி உய்வதாக.
வைகறை
- விடியற்காலம். சூரியனுக்கு முன் ஐந்து நாழிகை
அளவுள்ள சிறுபொழுது. முந்தியநாளின் வைகுதல் அறுகின்ற காலம் எனும்
பொருளில் வந்த பெயர் என்பர். வைகுறு எனவும் வழங்கும். முன்னாள்
இதுவரையுமே வைகிற்று என அதற்குப் பொருள் கூறுவர். வைகுறுவிடியல் -
இராப்பொழுது தன்னோடு கழிவுறுதற் கேதுவாகிய விடியல் என்க.
"விளம்பழங் கமழுங் கமழ் சூழ் சூழிசி" என்ற நற்றிணையுள் வைகுறு
புலர்விடியல் என்றது மப்பொருட்டு அற்றை நாட்பொழுது தன்னெல்லை
யோடறுதல் பற்றி வைகறையெனவும் படும். வைகுதல் கழிதல் என்னும்
பொருட்டு, என்பன முதலாகச் சூத்திர விருத்தியும் எமது மாதவச்
சிவஞானசுவாமிகள் விரித்துள்ளனவுங் கருதுக.
உணர்ந்து
- துயிலெழுந்து. கழுத்திலிருந்து உயிருணர்ச்சி
சாக்கிரத்தில் வருதலே துயிலுணர்தலாம் என்ப. விடிய ஐந்து நாழிகைப்
பொழுது ஆயிற்று என்பதைத் தானே உணர்தல் என்றலுமாம்.
போந்து
- காலைக் கடன்களை முடித்தற் பொருட்டுப் புறத்தில்
நிருதி திக்கை நோக்கிப் போய் வருதல். மலசல முதலியவற்றை
வீட்டுக்குள்ளேயே கழித்தலும், அவ்வாறு ஒன்றுசேரும் குப்பைகளை ஒன்று
சேர்த்து ஊருக்குப் புறம்பு வெளிப்படுத்தலும், அது காரணமாகப் பற்பல
தொல்லைப்படுதலும் முதலியன,
|